145.- சூரியாஸ்தமன வருணனை. என்றேன்றுவீமனுந்தன் னிளையோரு மழுதரற்ற விறந்தோன் வீர, நன்றென்றுதளமிரண்டி னரபாலர்பலர்திரண்டுநவிலா நிற்ப, வன்றென்றுமனமருளுற் றபிமனடுதலைக்குன்றையடுத்து மேலைக், குன்றென்று தடுமாறிப் பின்னையும்போய்த் தனதுதடங் குன்று சேர்ந்தான். |
(இ-ள்.) என்று என்று-என்று பலவாறு சொல்லி, வீமனும்-, தன் இளையோர்உம் அவன் தம்பிமாரன நகுலசகதேவரும், அழுது அரற்ற -புலம்பிக் கதறவும், 'இறந்தோன் வீரம்- மரித்த அபிமனது பராக்கிரமம், நன்று - சிறந்தது' என்று-, தளம் இரண்டில்- இருதிறத்துச் சேனைகளிலும், நரபாலர் பலர் திரண்டு - அரசர்கள் பலர் ஒருங்குகூடி, நவிலாநிற்ப-கூறிய புகழ்ந்துநிற்கவும், (கேட்டு, அதனால்), என்று - சூரியன், அன்று- அப்பொழுது, மனம் மருள் உற்று- மனம்மயங்கி, அபிமன் அடு தலை குன்றை - அபிமன் கொன்றுவிழுத்திய பகைவர்தலைகளா லாகிய மலையை, மேலை குன்று என்று தடுமாறி அடுத்து - மேற்குத்திக்கிலுள்ள அஸ்தகிரி யென்று மாறாகக்கருதிச் சமீபித்து, (அது அங்ஙனமல்லாமையால்), பின்னைஉம் போய்-பின்பு அப்பால் விலகிச் சென்று, தனதுதட குன்று சேர்ந்தான்-தனக்கு உரிய பெரிய அஸ்தகிரியை அடைந்தான்; (எ - று.) தலைக்குவியலை மலையென்று மயங்கியதாகக் கூறியதனால், மயக்கவணி: வடநூலார் 'பிராந்திமதலங்காரம்' என்பர். 'என்று' என்ற தெய்வப்பெயர் உயர்திணையாக, 'சேர்ந்தான்' என்று கூறப்பட்டது. 'அன்று என்று' என எடுத்து- அல்லதென்று அறிந்து என்று உரைத்து, 'அடுத்து' என்பதன் பின் கூட்டினால், 'சூரியன்' என்ற தோன்றாஎழுவாய் வருவிக்க. (283) வேறு. 146.-சஞ்சத்தகரைவென்ற அருச்சுனன் அங்குநின்றுமீளுதல். இந்நிலத் தவனி பால ரிவ்வகை யிரங்கி யேங்கத் தென்னிலத் தெதிர்ந்து ளாரைத் தென்னிலந்தன்னி லேற்றி யெந்நிலத் தினுந்தன் னாண்மைக் கெதிரிலா விசயன் றானு மந்நிலத் தகன்று மீண்டா னுற்றவா றறிவு றாதான், |
(இ-ள்.) இ நிலத்து - இப்போர்களத்தினிடத்திலே, அவனிபாலர்- பூமியைக் காப்பவரான அரசர்கள், இ வகை இரங்கி ஏங்க- இவ்வாறு சோகித்துப் புலம்ப,- எ நிலத்தின்உம்-எவ்விடத்திலும், தன் ஆண்மைக்கு எதிர் இலா-தனது பராக்கிரமத்துக்குஎதிரில்லாத, விசயன்தான்உம்- அருச்சுனனும், தென் நிலத்து- தெற்குத்திக்கில்,எதிர்ந்துளாரை-(தன்னை) எதிர்த்துச்சென்ற சஞ்சப்தகர்களை, தென் நிலந்தன்னில்ஏற்றி -தென் திசையிலுள்ள யமலோகத்தில் குடிபுகுத்தி (கொன்று), உற்ற ஆறுஅறிவுறாதான்-(இங்கு) நடந்தசெய்கையை அறியாதவனாய், அ நிலத்து அகன்றுமீண்டான் அவ்விடத்தினின்று நீங்கித் திரும்பினான்; (எ - று.)-எதிர்-ஒப்புமாம்.உற்றவாறு-அபிமந்யுமரணம். பி-ம்: அறிகிலாதான். |