பக்கம் எண் :

174பாரதம்துரோண பருவம்

'உன்-உனது, கதி தட திண் தேர் மைந்தன் - வேகத்தையுடைய பெரிய வலிய
தேரையுடைய புத்திரனான அருச்சுனனது, உயிரை-,நீ-, காத்தி-(புத்திரசோகத்தால்
இறவாதபடி) பாதுகாப்பாய்,' என்ன - என்றுசொல்ல, அவன் - அவ்விந்திரன்,
துதித்து - (கண்ணனைத்) தோத்திரஞ்செய்து, தொழுது - நமஸ்கரித்து, (அதற்கு
இசைந்து), மாயம் சூழ்ச்சியால் முனிஉம் ஆகி-(வேண்டியவடிவத்தைப் பெறவல்ல)
மாயையின் வலிமையால் (உடனே) ஒருமுனிவேடங்கொண்டவனுமாய், விதித்தலை
பட்ட காதல் சுதனுடன் விழுவன் என்றான் - 'ஊழ்வினையின்வசப்பட்டு இறந்த
அன்புள்ள (என்) மகனுடன் (யான் நெருப்பில்) விழுந்து இறப்பேன்' என்று
கூறினான்; (எ - று.)

     இந்திரன், ஒருபிராமணவடிவங்கொண்டு, சிறிதுபொழுதுக்குமுன் இறந்த
தன்புதல்வன்பொருட்டுச் சோகித்து அம்மகனுடன் அக்கினிப்பிரவேசஞ்செய்து
பிராணத்தியாகம்பண்ண நிச்சயித்தவன்போல வழியிடையிற்
காணப்பட்டனனென்பதாம். இந்திரன் வந்ததும் அவனுக்குக் கண்ணன்
கட்டளையிட்டதும் கண்ணபிரானுடன் தேரிலிருக்கிற அருச்சுனனுக்குத் தெரியாதபடி
நிகழ்ந்தது தோன்ற. 'மனத்தில் தோன்றும்' என்றும், 'குறிப்பினால்’என்றுங்
கூறினார்.விதியில் தலைப்பட்ட என்றும், தலைவிதியில்பட்ட என்றும் உரைத்ததற்கு
இடமுண்டு.வலாரி-பலாரி யென்ற வடசொல் திரிந்தது பி-ம்: விளிவேனென்னா.
                                                            (286)

149.நெறியிடையிவர்கள்காணநெருப்பினைவளர்த்துத்தானும்
பொறியுறவீழுங்காலைப்புவனங்களனைத்துமீன்றோ
னறிவுடைவிசயற்கிந்தவந்தணன்றழலில்வீழா
தெறிகணைவரிவில்வீரவிலக்குநீயீண்டையென்றான்.

     (இ-ள்.) நெறியிடை-(அருச்சுனனும் கண்ணனும் செல்லும்) வழிநடுவிலே,
இவர்கள்காண-இவ்விருவரும் பார்க்க,  நெருப்பினை வளர்த்து-அக்கினியை
மூட்டிவிருத்திசெய்து, (அம்முனிவன்), தான் உம் பொறி உற வீழும் காலை-(இறந்த
தன்குமாரனோடு) தானும் அவ்வக்கினியிலே பொருந்த விழவிருக்குமவ்வளவில்,-
புவனங்கள் அனைத்துஉம் ஈன்றோன்-உலகங்களையெல்லாம்
உண்டாக்கியருளியவனான கண்ணன், அறிவு உடை விசயற்கு - அறிவுள்ள
அருச்சுனனை நோக்கி, 'எறி கணை வரி வில் வீர-எறிகிற அம்புகளையுடைய
கட்டமைந்தவில்லில்வல்ல வீரனே! இந்த அந்தணன் தழலில் வீழாது-இந்த முனிவன்
நெருப்பில் விழாதபடி நீ-,ஈண்டை-இப்பொழுது இவ்விடத்தில், விலக்கு-தடுப்பாய்,'
என்றான்-என்று கூறினான்; (எ - று.)

     படைத்தல்தொழிற்கடவுளான பிரமனையும் படைத்தவ னாதலாலும்,
பிரமரூபியாயிருந்து தொழில்செய்பவன் பகவானே யாதலாலும்,
'புவனங்களனைத்துமீன்றோன்'  எனப்பட்டான் இரட்டுறமொழிதலால், 'ஈண்டை'
என்பதற்கு - காலமும் இடமுமாகிய இருபொருள் கொள்ளப்பட்டன. பொறி-
அக்கினிக்கு, இலக்கணை: இனி, பொறிஉற-மனப்பூர்த்தியாக என்றாலும் ஒன்று. (287)