பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்181

160.- இதுமுதல் எட்டுக்கவிகள்-அருச்சுனன்புலம்புவதைத்தெரிவிக்கும்

போரினிற்றுணைவரோடும்புயங்ககேதனனைவென்று
பாரெனக்களித்திநீயேயென்றுளம்பரிவுகூர்ந்தே
னேருனக்கொருவரில்லாய்நீகளம்பட்டாயாகி
லாரினிச்செகுக்கவல்லாரைவருக்குரியகோவே.

ஒன்பது கவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) உனக்கு நேர் ஒருவர் இல்லாய் - உனக்கு ஒப்பு ஒருத்தரும்
இல்லாதவனே !ஐவருக்கு உரிய கோவே - (எங்கள்) ஐந்து பேருக்கும் உரிய
அரசனே ! போரினில்-யுத்தத்தில், துணைவரோடு உம்-தம்பிமார்களுடனே,
புயங்ககேதனனை -பாம்புக்கொடியனான துரியோதனனை, நீயே-, வென்று -
சயித்து, எனக்கு-, பார்அளித்தி-இராச்சியங்கொடுப்பாய், என்று-, உளம் பரிவு
கூர்ந்தேன் - மனத்தில்ஆசைமிகுந்திருந்தேன்; நீ-, களம் - போர்க்களத்தில்,
பட்டாய் ஆகில்  -இறந்தாயானால், இனிசெகுக்க வல்லார் ஆர் - இனிமேல்
(பகைவரை)அழிக்கவல்லவர் எவர்? (எ-று.)                        (298)

161.சக்கரம்பிளந்தவாறுந்தரியலருடைந்தவாறுந்
துக்கரமானகொன்றைத்தொடையலால்வளைத்தவாறு
மெய்க்கரந்துணிந்தவாறுமீண்டுருத்தடர்த்தவாறு
முக்கரமுடனென்முன்னேயோடிவந்துரைசெய்யாயோ.

     (இ-ள்.)  சக்கரம் பிளந்த  ஆறுஉம்-சக்கரவியூகம்(உன்னால்) பிளப்புண்ட
விதத்தையும் தரியலர் உடைந்த ஆறுஉம்-(அதில்)  பகைவர்கள் அழிந்த
விதத்தையும்,துக்கரம் ஆன-செய்யவொண்ணாத [தெய்வத்தன்மையுள்ள),
கொன்றைதொடையலால்-கொன்றைப்பூமாலையால், வளைத்த ஆறுஉம்-[உன்னைச்
சயத்திரதன்]  சூழ்ந்த விதத்தையும், மெய் கரம் துணிந்த ஆறுஉம்-(உன்) உடம்பில்
ஒருகை(துரோணனால்) துணிபட்ட விதத்தையும்,மீண்டு-அதன் பின்பும், உருத்து
அடர்த்த ஆறுஉம்-(நீ)கோபித்துப் போர்செய்தவிதத்தையும், உக்கரமுடன்-வீரத்தோடு,
என் முன்னே ஓடி வந்து உரைசெய்யாய்ஓ-எனதுமுன்னே (நீ) வேகமாகவந்து
சொல்ல மாட்டயோ? (எ-று.)

     சக்கரம்பிளத்தல் முதல் மீண்டுருத்தடர்த்த விறுதியாக உள்ள
விவரங்களையெல்லாம்,கீழ்க் கண்ணன் கூறியதனால் அருச்சுனன் அறிந்தானென்க:
கீழ் 157-ஆங் கவியைநோக்குக. துக்கரம்- துஷ்கரம்: வடசொல். உக்கரம்=உக்ரம்:
இது, உக்கிரம் எனப்பெரும்பாலும்வரும். பி-ம்: உக்கிரம்.              (299)

162.பன்னகவரசன்பெற்றபாவைமாமதலைதன்னை
முன்னுறமுனையிற்றோற்றேன் மூர்க்கனேன்முடியாதுண்டோ
வுன்னையுமின்றுதோற்றேனுன்னுடன்றொடர்ந்துவாரா
தின்னமுமிருந்ததையாவென்னுயிர்க்கிறுதியுண்டோ.

     (இ-ள்.) பன்னக அரசன்பெற்ற-சர்ப்பராசன் பெற்ற, பாவை-பெண்ணாகிய
உலூபியினது, மா மதலைதன்னை-சிறந்தகுமாரனான இராவானை, முன்உற-முற்பட,
முனையில் - போரில், தோற்றேன் -