இழந்தேன்; உன்னையும்-, இன்று - இன்றைக்கு, தோற்றேன் - இழந்தேன்; ஐயா-! இன்னம்உம் - நீ இறந்தபின்பும், உன்னுடன், தொடர்ந்து வாராது - உன்னுடன் கூட வந்திடாமல், இருந்தது - (என்உயிர் என்உடம்பில்) இருந்தது! என் உயிர்க்கு இறுதி உண்டுஓ - என்னுயிருக்கும் அழிவு உள்ளதோ? மூர்க்கனேன்- மூர்க்கனாகிய யான், முடியாது - முடிக்காததொரு தொழிலும், உண்டோ-? (எ - று.) மூர்க்கமாவது-கொண்டதுவிடாமை: என்னசங்கடம் நேர்ந்த விடத்தும் தான் உயிரைவிடாமையால், தன்னை 'மூர்க்கனேன்' என்று பழிக்கிறான். நிரந்தரமானதும், பரிகாரமில்லாததுமான இப்படிப்பட்ட புத்திரசோக பரம்பரையை எளிதில் பொறுத்த தனக்கு வேறு பொறுக்கவொண்ணாத துயரம் எதுவுமில்லையென்பான், 'மூர்க்கனேன் முடியாதுண்டோ' என்றான். பந்நகம் என்ற வடசொல்-பத் நகம் என்று பிரிந்து கால்களால் நடவாததென்றும், பந்நம் கம் என்றுபிரிந்து வளைந்து செல்வதென்றும் பொருள்படும். பாவை-சித்திரப்பதுமைபோல் அழகியவள்; அல்லது, கண்மணிப் பாவைபோல் அருமையானவள்; உவமையாகுபெயர், தீர்த்தயாத்திரையாகப்புறப்பகட்ட அருச்சுனன் கங்காநதியில் நீராடுகையில், அங்கு நீர்விளையாடவந்த நாககன்னிகைகளுள் உலூபியென்பவள் அருச்சுனனைக் கண்டு காமுற்று அவனைப் பிலத்துவாரவழியாய்த் தன் உலகத்துக்கு அழைத்துச்சென்று அவனை மணஞ்செய்துகொண்டு இராவானென்னும் புத்திரனைப் பெற்றாள். இவனைத் துரியோதனன் வஞ்சனையாகவந்து வேண்டி உடன்படுத்தித் தனக்குப்போரில் வெற்றியுண்டாகும்பொருட்டு அமாவாசையில் துர்க்கைக்குப்பலிகொடுப்பதென்றிருக்க, கண்ணபிரான் அதனையறிந்து முந்தினநாளாகிய சதுர்த்தசியன்றைக்கே தனது திவ்விய சக்தியால் அமாவாசையை வருவித்து இவ்விராவானையே தந்திரமாய் இந்தப்பக்கத்துக்குப் பலியாகுமாறு உடன்படுத்த, அதற்கு இசைந்து" கடியநேர்பலிதந்தாலுங் காயமர்சிலநாட்கண்டு, முடியநேரலர்வெம்போரின் முடிவெனக் கருளுக" என்று இவன் கண்ணனை வேண்டி வரம்பெற்று அன்றையிரவில் தானே தன்உறுப்பனைத்தையுங் கொய்து யுத்ததேவதைக்குப் பலிகொடுத்ததுமன்றி, கண்ணனருளிய வரத்தின்படி பலவடிவங்கொண்டு. போர்செய்து வென்று முடிவில் எட்டாம்போர்நாளில் இறந்தனன். (300) 163. | கதிரவனுதிக்குமுன்னேகண்டுயிலுணர்த்தியென்னை யதிரமர்க்கோலங்கொள்வானறிவுறுத்துரைக்கவல்லாய் முதிர்மர்முருக்கிமிண்டேனித்தனைப்போதுமுன்போ லெதிர்வரக்காண்கிலேனிங்கில்லையோவென்செய்தாயோ. |
(இ-ள்.) கதிரவன் உதிக்கும் முன்னே -சூரியனுதிப்பதற்கு முன்னமே, என்னை-,கண் துயில் உணர்த்தி - தூக்கத்தினின்று எழுப்பி, அதிர் அமர் கோலம் கொள்வான்-ஆராவாரிக்கிற போருக்கு உரிய அலங்காரத்தைச்செய்துகொள்ளும்படி, அறிவுறுத்து உரைக்க வல்லாய்-தெரிவித்துக்கூறுதல் வல்லவனே! இ தனை போதுஉம்- |