இவ்வளவுபொழுதும், முதிர் அமர் முருக்கி-மிக்க போரைச்செய்து, மீண்டேன் - திரும்பிவந்தேன்; முன்போல்-வழக்கம்போல, எதிர்வர காண்கிலேன் - (நீ இன்றைக்கு) எதிரில் வரக்காண்கிறேனில்லை; (நீ), இங்கு இல்லையோ? என் செய்தாயோ-? (எ-று.) (301) 164. | தந்திரமியாவுமின்றித்தனித்துநீதானேபோர்செய் தந்தரமமையுமென்றிவ்வகலிடந்துறந்தவையா மைந்துடனம்மைக்காணமகன்மகன்வருகின்றானென் றிந்திரனேவவுன்னையிமையவரெதிர்கொண்டாரோ. |
(இ-ள்.) தந்திரம் யாஉம் இன்றி - சேனைகளெவையுந் துணையில்லாமல், நீதான்ஏ தனித்து போர் செய்து-, அந்தரம் அமையும் என்று - சுவர்க்கலோகமே (உன்சிறப்புக்கு) ஏற்ற இடமாகு மென்று கருதி, இ அகல் இடம் துறந்த - பரந்த இந்தப்பூமியினிடத்தை நீங்கின, ஐயா-! 'மைந்துடன் - களிப்போடு, நம்மை காண- நம்மைப்பார்ப்பதற்கு, மகன் மகன் - (நமது) பௌத்திரன், வருகின்றான்-,' என்று- என்று எண்ணி, இந்திரன்-, ஏவ- செலுத்த, இமையவர் - தேவர்கள், உன்னை-, எதிர் கொண்டார்ஓ- அமையுமென்றிவ்வகலிடந் துறந்தவையா - தற்குறிப்பேற்றவணி. 165. | தேரழிந்தெடுத்தவில்லுஞ்செங்கதிர்வாளுமின்றி யோருதவியும்பெறாமலொழிந்துயிரழிந்தமைந்தா போரமருடற்றிநீயப்பொன்னகரடைந்தபோதுன் பேரமராண்மைகேட்டுப்பிதாமகனென்சொன்னானோ. |
(இ - ள்.) தேர் அழிந்து-, எடுத்த-(கையில்) பிடித்த, வில்லும்-, செம் கதிர்- (பகைவ ரிரத்தந் தோய்தலாற்) சிவந்த ஒளியையுடைய, வாளும்-, இன்றி - இல்லாமல்,ஓர் உதவிஉம் பெறாமல் ஒழிந்து-, உயிர் அழிந்த- இறந்த, மைந்தா- மகனே! நீ-,போர் அமர் உடற்றி - சிறந்த போரைச்செய்து, (பின்பு), அ பொன் நகர்அடைந்தபோது-பொன்மயமான அந்த அமராவதிபட்டணத்தை யடைந்த பொழுது.(அங்கு) பிதாமகன் -பாட்டனான இந்திரன், உன்பேர் அமர் ஆண்மை கேட்டு-உனதுபெரும்போர் வல்லமையைக் கேட்டறிந்து, (உன்னைக் குறித்து), என் சொன்னான்ஓ-?(எ - று.)-பேர் அமர் ஆண்மை - பிரசித்திபெற்ற பராக்கிரமமுமாம். (303) 166. | மற்புயக்குன்றிலொன்றுவாளுடன்வீழப்பின்னும் பொற்புறப்பொருதநீயப்பொன்னுலகடைந்தகாலை யற்புதப்படைகள்வல்லாயபிமனேயமரரூருங் கற்பகக்காவும்வானிற்கங்கையுங்காட்டினாரோ. |
(இ-ள்.) அற்புதம் படைகள் வல்லாய் - ஆச்சரியகரமான ஆயுதங்களில் வல்லவனே! அபிமனே-! மல்-வலிமையையுடைய, புயம் குன்றில்-மலைகள்போன்ற தோள்களில், ஒன்று-,வாளுடன்-(ஏந்திய) வாளாயுதத்துடனே, வீழ-(துணிந்து) விழவும், பின்உம்- அதன்பின்பும், பொற்புஉற - அழகு மிக, பொருத - போர்செய்த, |