பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்185

அந்தச்சமயத்தில், ஆரணம் அளித்த முனி-வேதங்களை அருளிய
வியாசமாமுனிவன், வந்தான் - (அங்கு) எழுந்தருளினான்; (எ -று.)

     சென்னி கரம் வைத்தல் - சோகக்குறிப்பு, வரம்பின்றியிருந்த வேதங்களைத்
துவாபரயுகமுடிவில் இருக்கு, யசுர், சாமம் அதர்வணம் என நான்காகப்பகுத்து
ஒழுங்குபடுத்தி அக்காரணத்தால் வ்யாஸனென்று பெயர் பெற்றவ னென்பார்,
'ஆரணமளித்தமுனி' என்றார்.

     இதுமுதல் பதினெட்டுக்கவிகள் -பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளங்காய்ச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்            (306)

169.- வந்தமுனி கண்ணீர்போக்கி பலஉபதேசமொழிகூறத்தொடங்கல்.

வந்தமுனிமற்றுமுடன்வருமுனிவரோடு
மந்தநரபாலர்கண்ணரும்புனறுடைத்துக்
கந்தனிகர்மைந்தனொடுகையறநினைக்கும்
பந்தனையறுக்குமொழிபற்பலபகர்ந்தான்.

     (இ-ள்.) வந்த முனி-எழுந்தருளின வேதவியாசபகவான்,- மற்றும் உடன்
வரும்முனிவரோடுஉம்-இன்னுங்கூடவந்த முனிவர்களுடனே,- அந்த நரபாலர் கண்
அரும்(பு) புனல் துடைத்து-(தருமன் முதலிய) அந்த அரசர்களது
கணகளில்தோன்றுகிற நீரைப் போக்கி,-கந்தன் நிகர் மைந்தனொடு -
முருகக்கடவுளை யொத்த குமாரனான அபிமனுடனே, கை அற-(தாமும்)
செயலற்றிருக்க,  நினைக்கும்- (அப்பாண்டவர்கள்) எண்ணுகிற, பந்தனை -
(அவர்களது) பாசபந்தத்தை [அன்பின்தொடக்கை], அறுக்கும்-ஒழிக்கும்படியான,
பல்பல மொழி - அனேக உபதேசவார்த்தைகளை, பகர்ந்தான் - கூறுபவனானான்;
(எ -று.)-அதனை, அடுத்த மூன்று கவிகளிற் காண்க.  

     கையாறு-உயிர்ப்புமின்றி வினையொழிந்து அயர்தல். அரும்பு புனலென்பது,
அரும்புனலென விகாரப்பட்டது: இனி, அரும்புனல் எனப் பண்புத்தொகையாக
எடுத்து - அரிய [இதுவரையில் இல்லாத] நீர் எனினுமாம்.              (307)

170.- நான்குகவிகள் ஒரு தொடர்: - வியாசமுனிவனுபதேசித்துப்
போதலைத் தெரிவிக்கும்,

தாயரொடுதந்தையர்கடாரமொடுதனயோர்
தூயதுணைவோர்களொடுசுற்றமெனநின்றோர்
மாயையெனும்வல்லபமயக்குறுமயக்கா
லாயவுறவல்லதவரார்முடிவில்யாமார்.

     (இ-ள்.) தாயரொடு-தாய்மார்களும், தந்தையர்கள்- தகப்பன்மார்களும்,
தாரமொடு-மனைவியரும், தனயோர்-புதல்வரும், தூய-(மனத்தில்) சுத்தியையுடைய,
துணைவோர்களொடு - உடன் பிறந்தவர்களும், சுற்றம் - (மற்றும்) பந்துவர்க்கமும்,
என- என்று நின்றோர்-நின்றவர்களெல்லோரும், மாயை எனும் வல்லபம்-மாயை
யென்கிற (பகவானுடைய) சக்தி, மயக்குறும்-(மனத்தை) மயங்கச்