செய்தலாலாகிற, மயக்கால்-மயக்கத்தினால், ஆய-உண்டான, உறவு அல்லது- சம்பந்தமே யல்லாமல்,(உண்மையை நோக்குமிடத்து), முடிவில்-முடிவிலே, அவர் யார்- அந்தத் தாய்மார் முதலியஉறவினர் யார்? யாம்ஆர்?-[அவருக்கும் நமக்கும் யாதோருறவுமில்லை யென்றபடி]. கண்ணன் அருச்சுனனுக்குக் கீதை உபதேசிக்கையில், "மாயையென்றொருத்திதன்பால்மனமெனு மைந்தன் தோன்றித், தூயநல்லறிவன் றன்னைத் தோற்றமின் றாக்கி வைத்தான். தாயொடு தந்தை மக்கள் தார மென் றிவர்பால்வைத்த, நேயமு மவன்றனாலே நிகழ்ந்த தோர்நினைவு கண்டாய்" என்றும்,"பந்தம் துணர்ந்து நேரே பார்க்குங்காற் பகையார் நண்பார்" என்றும் அருளிச்செய்தமை காண்க. மனம் மாயைக்கு வசப்பட்டபோது பொருள்களின் நிலையை உள்ளபடியறியுந் தத்துவஞானம் தோன்றுகிறதில்லை; ஆகவே, நிலையுள்ளபொருள்களை நிலையில்லாதனவென்றும் நிலையில்லாதபொருள்களை நிலையுள்ளனவென்றும் மாறுபட அறியும் விபரீதஞானம் தலையெடுக்கும்; அதனாலேயே, நித்தியமான ஆத்துமாவுக்கு யாதோரு சம்பந்தமும் படாமல் அநித்தியமான தேகத்தையே பற்றியே தாய் முதலியோரிடத்துச் சுற்றத்தவரென்ற பொய்யபிமானம்உண்டாகி நிலைநிற்கின்றது; அத்திரிபுணர்ச்சியை ஒழித்து மெய்யுணர்ச்சிகொண்டு நோக்குமிடத்து, யாவும் மாயாகாரிமென்றஉண்மை புலப்படும்மென்பதாம். தாய்வழியிலும் தந்தைவழியிலும், பெரியதாய் சிறியதாய் பெரியப்பன்சிற்றப்பன் எனத் தாய்தந்தையர் பலராவர். சுற்றம்-(உரிய காலங்களில் வந்து)சுற்றிநிற்ப தெனக் காரணப்பெயர்: அம்-கர்த்தாப்பொருள்விகுதி. மயக்கு- மயங்குஎன்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர். உறவு-உறுதல்; சேர்க்கை; இந்தொழிற்பெயர்-உறவினர்க்கு ஆகுபெயராம். முதலடி-முற்றுமோனை. பி-ம்: முடிவில்யார்யார். (308) 171. | வந்துபிறவாதமனையில்லைமுலைமாறித் தந்துபரியாமலொழிதாயர்களுமில்லை புந்தியுணர்வற்றவர்புலம்புறுவதல்லா லிந்தவுலகத்தறிஞர்யாதினுமயங்கார். |
(இ - ள்.) (ஓர்உயிர்), வந்த பிறவாத மனை-(உடம்பெடுத்து) வந்து பிறக்காத வீடுகள், இல்லை-; (அவ்வுயிர்க்கு), முலை மாறி தந்து-முலைப்பாலை மாறிமாறிக் கொடுத்து, பரியாமல்- காப்பாற்றாமல், ஒழி-நீங்குகிற, தாயார்கள்உம்-தாய்மாரும், இல்லை-; (ஆதலால், அவ்வுயிர் நீங்கியவிடத்து), புந்தி உணர்வு அற்றவர் புலம்புறுவது அல்லால்-மனத்தில் தத்துவஞானமில்லாதவர்கள் அழுதலேயல்லாமல், இந்த உலகத்து-இவ்வுலகத்தில்,அறிஞர்-மெய்யுணர்வுடையோர், யாதின்உம் மயங்கார்-எந்தவிதச்சங்கடம் நேர்கையிலுங் கலங்கமாட்டார்கள்; (எ - று.) அநாதியான கருமத்துக்கு வசப்பட்டுப் பலபலவீடுகளில்பற்பலர் கருப்பத்திற் பிறந்தும் பிறக்கவும் இருக்கிற ஓருயிரை, தனதுகைனென்றும் பிறவாறும் உறவுமுறைபாராட்டி அன்புகொண்டு, அது |