பக்கம் எண் :

188பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) (ஆதலால்), ஆற்றி- (சோகத்தைப்) பொறுத்து, நுமது ஆண்மை
அழியாமல் -(அதனால்) உங்கள் பராக்கிரமம் சிதையாமல், இரும் -
(மனவுறுதிநிலையோடு)இருங்கள், என்று என்று-என்று (இங்ஙனம்) பலவிதமாக,
அடைவுஏ ஏற்றி -முறையாய் (அவர்கள் மனத்தில்) ஏற்கச்செய்து, சுருதி
யாவைஉம் எடுத்து உரைசெய்து - வேதவாக்கியங்கள் பலவற்றையும் எடுத்துச்
சொல்லி, தேற்றி -(அவர்களைச்) சமாதானப்படுத்தி, தன் சேவடி இறைஞ்சி
போற்றிய மகீபரை -தன்னுடைய சிவந்த பாதங்களை நமஸ்கரித்துத் துதித்த
அப்பாண்டவராசர்களை,நிறுத்தி-(ஒருவாறு சோகம்நீஙகிய நிலையில்) நிற்கச்செய்து,
முனி -(எழுந்தருளின)அந்த வியாசமுனிவன், போனான் (அப்பால்) சென்றான்;
( எ- று.) அடைவேஏற்றுதல் - ஒவ்வொரு விஷயத்தை ஒவ்வொருவர்க்கும்
உபதேசித்தல். தேற்றுதல் -தேறப்பண்ணுதல். பி-ம்: தமசேவடி இருத்தி.
அவர்போனார்.                                                (311)

174.-அப்போதும் தேறாது அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ்செய்யத்
தீமூட்டச் சொல்லுதல்.

தேற்றினுமகப்பரிவுதேறலரிதன்றே
யாற்றவரிதாதலினருச்சுனனரற்றா
மாற்றரியபேரழல்வளர்த்தியெனவல்லே
யேற்றதுணராதுதனதிளவலொடுரைத்தான்.

     (இ-ள்.) ஆற்ற அரிது ஆதலின் - (அத்துன்பம்) பொறுக்க முடியாதாதலால்,
அருச்சுனன்-, அரற்றா - வாய்விட்டுப் புலம்பி, தனது இளவலொடு தனது
அடுத்தம்பியானநகுலனுடனே, 'மாற்று அரிய - அவிக்க முடியாத, பேர் அழல் -
பெருந்தீயை,  வளர்த்தி - (எனது அக்கினிப்பிரவேசத்துக்காக) வளரச்செய்வாய்,
'என - என்று, ஏற்றது உணராது - (செய்யத்) தக்கதை (இன்னதென்று) அறியாமல்,
வல்லே உரைத்தான் - விரைவிற் கூறினான்; தேற்றின்உம் - (எவ்வளவு) தேறுதல்
செய்தாலும், மக பரிவு-புத்திரசோகம், தேறல் அரிது - சமாதானப்படுதற்கு
முடியாதது. அன்றே - அல்லவோ? (எ -று.)

     'தேற்றினாலும் புத்திரசோகம் தேறவொண்ணாததன்றோ' என்ற
பொதுப்பொருள், மற்றைமூன்றடிகளாற் கூறப்படுஞ் சிறப்புப்பொருளைச்
சமர்த்தித்துநின்றது-வேற்றுப்பொருள்வைப்பணியாம். பி - ம், அரிதென்றே.   
                                                          (312)

175.- அருச்சுனன் யார்தடுக்கவும் கேளாது அக்கினியிற்புகச் சித்தனாதல்.

மத்திரைமகன்கனல்வளர்க்கவதனூடே
மித்திரரும்யாவரும்விலக்கவும்விலங்கான்
சித்திரவில்லூடுயிர்செகுப்பனெனநின்றான்
புத்திரரிலாவிடர்பொறுத்திடலுமாமோ.

     (இ-ள்,) மத்திரை மகன் - மாத்திரியின் குமாரனான நகுலன் கனல் வளர்க்க-
(தமையன்கட்டளையைக் கடக்கவொண்ணாமையால் அங்ஙனமே) தீயை
மூட்டிவளரச்செய்ய, - (அருச்சுனன்),