179.- இதுமுதல் ஆறுகவிகள்-அடுத்தநாள் சூரியாஸ்தமனத்துக்குள் சயத்திரதனைக் கொல்வதாக அருச்சுனன் செய்யுஞ் சபதங்களைத் தெரிக்கும். சிந்துபதியாகியசெயத்திரதனைத்தே ருந்தமரினாளையுருமேறெனவுடற்றா வந்திபடுமவ்வளவினாவிகவரேனேல் வெந்தழலின் வீழ்வனி துவேதமொழியென்றான். |
(இ-ள்.) தேர் உந்து அமரில் - தேர் செலுத்திச் செய்யும் போரில், நாளை அந்திபடும்அ அளவின்-நாளைத்தினத்தில் மாலைப்பொழுதுவருகிற அச்சமயத்திற்குள், சிந்துபதிஆகியசெயத்திரதனை- சிந்துதேசத்து அரசனான சயத்திரதனை, உரும் ஏறு எனஉடற்றா-பேரிடிபோல(க்கொடியதாக)ப் போர்செய்து, ஆவி கவரேன் ஏல்-(நான்)உயிர்பறிக்காதொழிவேனானால், வெம் தழலின் வீழ்வன் - (நான்)உயிர்பறிக்காதொழிற்குறித்து இறப்பேன்: இது-, வேதம் மொழி- வேதவாக்கியம்போலத் தவறுபடாத சபதவார்த்தை, என்றான் - என்று (அருச்சுனன் பிரதிஜ்ஞை) கூறினான்: (எ - று.) 180. | இன்றபிமன்வாளமரிலின்னுயிரிழக்கக் கொன்றவனைநாளையுயிர்கோறல்புரியேனேன் மன்றிலொருசார்புறவழக்கறவுரைக்கும் புன்றொழிலர்வீழ்நரகுபுக்குழலுவேனே. |
(இ-ள்.) இன்று - இன்றைக்கு, அபிமன் - அபிமந்யு, வாள்அமரில் - கொடிய போரில், இன் உயிர் இழக்க - இனிமையான உயிரை ஒழியும்படி, கொன்றவனை- வதைத்தவனான சயத்திரதனை, நாளை-நாளைக்கு, உயிர் கோறல் புரியேன்ஏல்- (நான்) உயிரையழித்தல் செய்திடேனாயின்,- மன்றில்-நியாயத்தலத்தில், ஒருசாரபுஉற-(வாதிப்பிரதிவாதிகளுள்) ஒருவர் பக்கத்தில் பக்ஷபாதம் மிக, வழக்கு அற உரைக்கும்-நீதியில்லாமற் பேசுகிற, புன் தொழிலர்-இழிதொழிலையுடையவர்கள், வீழ்-விழுகிற,நரகு-நரகத்தில். புக்கு உழலுவேன் - (யான்) வீழ்ந்து வருந்துபவனாவேன்; (எ - று.) சயத்திரதனை நாளைக்கொல்லாவிடின் மன்றோரஞ் சொன்ன பெரும்பாவத்தையான் அடைவேனென்பதாம். ஏ - தேற்றம். பி-ம்: இன்றமரில் வாளபிமன்.வழக்கினை. (318) 181. | மோதமரினென்மகன்முடித்தலைதுணித்த பாதகனைநானெதிர்படப்பொருதிலேனேற் றாதையுடனேமொழிதகாதனபிதற்றும் பேதைமகனெய்துநெறிபெற்றுடையனாவேன். |
(இ-ள்.) மோது அமரின் - தாக்கிச்செய்யும்போரில், என் மகன் முடி தலை துணித்த-எனது புத்திரனது கீரிடந்தரித்த தலையைத் துண்டித்த, பாதகனை-பாவியான சயத்திரதனை, நான்-,எதிர்பட-(அவன் தொழிலுக்கு) எதிராக (பழிக்குப் பழிவாங்க), பொருதிலேன்ஏல்-போர்செய்து கொல்லேனாயின்,- தாதையுடனே மொழி தகாதன பிதற்றும் - தந்தையோடு (எதிர்த்துத்) |