தகுதியில்லாத வார்த்தைகளை உளறுகிற, பேதை மகன் - மூடனான புத்திரன், எய்தும்- (மறுமையில்) அடையும், நெறி - நரகவழியை. பெற்றுடையன் ஆவேன் - பெற்றுள்ளவனாவேன்; (எ - று.) போரில் எதிரியைக் கொல்லுதல் நீதியாயிருக்க, அதுசெய்த சைந்தவனை அருச்சுனன் 'பாதகன்' என்றது, வஞ்சனையாகக் கொன்றைமாலையை இடையிலிட்டுஅபிமனைத் துணையிலனாக்கியதனா லென்க. (319) 182. | சேயனையவென்மதலைபொன்றவமர்செய்தோன் மாயமுனடர்த்துவயவாகைபுனையேனேற் றாயர்பசிகண்டுநனிதன்பசிதணிக்கு நாயனையபுல்லருறுநரகிலுறுவேனே. |
(இ-ள்.) சேய் அனைய-முருகக்கடவுளை யொத்த, என் மதலை-எனது புத்திரன், பொன்ற-இறக்க, அமர் செய்தோன் - போர் செய்தவனான சயத்திரதன், மாய - அழியும்படி, முன் அடர்த்து - எதிரில் பொருது, வயம் வாகை புனையேன்ஏல் - வெற்றிக்குரிய வாகைப்பூமாலையைத் தரித்திடேனாயின்,-தாயார் பசி கண்டுஉம்- தாயார் பசித்திருத்தலைப்பார்த்தும், (அதனைத்தீர்த்திடாமல்), தன் பசி நனி தணிக்கும்- தனது பசியை நன்றாக (ப் போசனத்தால்) தீர்த்துக்கொள்ளுகிற, நாய் அனையபுல்லர் - (கடைப்பட்ட)நாயை யொத்த அற்பகுணமுடையோர், உறும்- (மறுமையிற்)சேரும், நரகில் - நரகத்தில், உறுவேன்-(யான்) சேருவேன்; (எ - று.) -ஏ- தேற்றம். மற்றொன்றையும் பாராது தன்பசியைத் தீர்த்துக் கொள்ளுதலிலேயே கருத்தைச்செலுத்துதற்கு, நாய் உவமை கூறப்பட்டது. முன்- விரைவில் என்றுமாம். உம் - இழிவுசிறப்பு. (320) 183. | வஞ்சனையிலென்மகனையெஞ்சமுன்மலைந்தோன் நெஞ்சமெரியுண்ணவமர்நேர்பொருதிலேனேற் றஞ்செனவடைந்தவர்தமக்கிடர்நினைக்கு நஞ்சனையபாதகர்நடக்குநெறிசேர்வேன். |
(இ-ள்.) வஞ்சனையில், - என் மகனை - எனது புத்திரனை, எஞ்ச - அழியும்படி, முன் மலைந்தோன்-முன்பு பொருதவனான சயத்திரதனது, நெஞ்சம் - மனம், எரி உண்ண- எரிபடும் படி, அமர் - போர்க்களத்தில், நேர் பொருதிலேன் ஏல்-(அவனுக்கு) நேராக (யான்) போர் செயிதிடேனாயின்,-தஞ்சு என அடைந்தவர் தமக்கு - அடைக்கலமென்றுகூறிச் சரணமடைந்தவர்களுக்கு, இடர்நினைக்கும் - தீங்குசெய்ய எண்ணுகிற, நஞ்சு அனைய பாதகர் - விஷத்தையொத்த பாவமுடையவர், நடக்கும் - (மறுமையிற்) செல்லும், நெறி - நரகவழியில், சேர்வேன்- ; (எ - று.) எரியுண்ண-மிகவருந்த, இறந்தொழிய, தகநஸம்ஸ்காரத்துக்கு இலக்காக, நேர் - எதிரில் என்றேனும், தகுதியாக என்றேனும் கொள்க. தஞ்சு-தஞ்ச மென்பதன் கடைக்குறை. தஞ்சம்-பற்றுக்கோடு, ரக்ஷகம். பாவத்துக்கு, நஞ்சு உவமை- தவறாது அழிக்குங் |