கொடுமைக்கு, வஞ்சனை இல்-வஞ்சனையில்லாத, என்மகன் எனினுமாம். (321) 184. | * வினையிலென்மகன்றனுடல்வேறுசெய்வித்தோனைக் குனிசிலையினாளையுயிர்கோறல்புரியேனேன் மனைவியுயிர்வீயநன்மகன்மனைவிகையாற் றினையளவுமோர்பொழுதுசீவித்தவனாவேன். |
(இ-ள்.) வினையில்- (தனது வஞ்சனைத்) தொழிலால், என் மகன்தன் உடல் வேறு செய்வித்தோனை - என்புத்திரனது உடம்பை உயிர் நீங்கச்செய்த சயத்திரதனை, குனி சிலையின் - வளைத்த (என்) வில்லைக்கொண்டு, நாளை- நாளைக்கு, உயிர் கோறல் புரியேன்ஏல்- உயிரை யழித்தல் செய்திடேனாயின்,- மனைவி உயிர் வீய - (தன்) மனையாள் இறக்க, நல் மகன் மனைவி கையால்- நல்ல(தன்) புத்திரனுக்கு மனையாளின் கையினால், தினை அளவுஉம் ஓர் பொழுது- மிகச்சிறியதொரு பொழுதாயினும், சீவித்தவன் ஆவேன் - பிழைத்தவனது பாபத்தையுடையவனாவேன்; (எ-று.)-என்று அருச்சுனன் வஞ்சினங்கூறி முடித்தானென்க. அநாச்சிரமியாயிருக்கிற தோஷத்தையே இவ்வாறு குறித்ததென்க; மனிதன் எப்பொழுதும் பிரமசரியம் கிருகஸ்தம் வாநப்பிரஸ்தம் சந்யாசம் என்ற நான்கு ஆச்சிரமங்களுள் ஏதேனும் ஒன்றிலே இருத்தல் வேண்டு மென்றும், ஓராச்சிரமத்திலுஞ்சேராமல் வெறுமையாயிருத்தல் கூடா தென்றும், ஒருவனுக்கு மனைவி இறந்துபோன மாத்திரத்தில் கிருகஸ்தாச்சிரமவுரிமை போய் விடுகிறதென்றும்.உடனே அவன் வேறுவிவாகஞ் செய்துகொண்டு கிருகஸ்தனாதல் அல்லதுவாநப்ரஸ்த சந்நியாசங்களின் ஒன்றைசேர்தல் என்னும் இரண்டில் யாதாயினும்ஒன்றைச் செய்யத்தக்கவனென்றும், அவ்வாறன்றி மணம் புரிந்து கொள்ளாமல்மருமகள் முதலியோர் உபசரிக்க இல்வாழ்க்கையிலே இருக்கலாகாதென்றும்.அங்ஙனமிருத்தல் பிராயச்சித்தஞ்செய்யத்தக்க பாதகமென்றும், அதுசெய்யாவிட்டால்நரகம் புகுவா னென்றும் குமார விஜயம், கௌதமஸ்மிருதி முதலியஅறநூல்களால் அறியப்படுகிறது. ஈழநாட்டில் மருமகள் சமைக்க வுண்ணுதல்இழிவாகக் கருதப்படுகின்றதெனக் கேள்வி. இனி, கையால், என்றதனை இடக்கரடக்கலாக் கொண்டு, 'மகன்மனைவி கையாற் சீவித்தவன்' என்பதற்கு - மருமகளுடன் கூடி வாழ்ந்தவ னென்று கருத்துக்கொள்ளுதலும் ஒருவாறு பொருந்தும். மருமகளோடு கூடுதல், குரு பத்நீகமநத்துக்குச் சமமான பெரும்பாவமென்று மநு, நாரதர், வசிஷ்டர், வியாக்கிரர், யாஜ்ஞவல்க்யர் என்னும் இவர்கள் தருமசாஸ்திரங்களாலும், தாயோடு கூடுதலுக்குச் சமமான அதிபாதக மென்று விஷ்ணுஸ்மிருதியாலும் தெரிகிறது. பி- ம்: மகன்றனுயிர்.தின்றவனுமாவேன். (322)
* இப்பாட்டு, யாம் கண்ட ஏட்டுப்பிரதிகளில் இல்லை."மனைவியயலான் மருவல்கண்டுமவள் கையால்" என்று மூன்றாமடிக்குப் பாடமோதுவாருமுளர். |