பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்195

187.முப்பதுகடிகையின் முரண் கொண்மொய்ம்பனைத்
தப்பறக்கொல்லுவேனென்றுசாற்றுமால்
அப்பெருஞ்சேனையிலவனையுள்ளுறத்
துப்புறவணிந்திடிற்றுன்னலாகுமோ.

     (இ-ள்.) 'முரண் கொள்-மாறுபாடுகொண்ட, மொய்ம்பனை-வலிமையையுடைய
சயத்திரதனை, முப்பது கடிகையின்-(நாளைப்பகல்) முப்பது நாழிகைக்குள்ளே, தப்பு
அற-தவறாமல், கொல்லுவேன்,- என்று-, சாற்றும் -(அருச்சுனன் இப்பொழுது
சபதம்கூறுகிறான்; அ பெரு சேனையில்-அந்தப் பெரிய கௌரவசேனையில்,
அவனை - அச்சயத்திரதனை, உள் உற - உள்ளிடத்திலே பொருந்த, துப்புஉற -
வலிமைமிக, அணிந்திடில்-(எதிரில்) அணி வகுப்பில் நிறுத்தியிட்டால், துன்னல்
ஆகும்ஓ-(அவனைக்) கிட்டுதல் முடியுமோ? (எ - று.)-கிட்டுதலே அரிதாயின்,
கொன்று சபதத்தை நிறைவேற்றுவது எவ்வாறு? என்றபடி - பி-ம்: கடிகையின்
முரண்டு

     கடிகை-கடிகா என்னும் வடசொல் திரிந்தது; இருபத்து நான்கு நிமிஷங்
கொண்ட பொழுது.  ஆல் - ஈற்றசை 'மால்' என எடுத்துத் திருமாலே என
விளியாகக் கொள்ளினுமாம். துப்பு-துணையும், காவலுமாம்.            (325)

188. - ஸ்ரீகிருஷ்ணன் தருமனுக்கு அபயமளித்தல்.

எஞ்சின்மற்றென்செய்வேனென்னுமேல்வையின்
அஞ்சலென்றறன்மகனவலமாற்றினான்
கஞ்சாவான்பொய்கையிற்கராவின்வாய்ப்படு
குஞ்சரந்தனக்கருள்கொண்டன்மேனியான்.

     (இ-ள்.) எஞ்சின் - (அருச்சுனன்) அழிவதானால், மற்று என்செய்வேன் -
(யான்) வேறு யாது செய்வேன்? என்னும் - என்று சொன்ன, ஏல்வையின் -
சமயத்தில்,- அஞ்சல்  என்று- பயப்படாதேயென்று சொல்லி, அறன் மகன்
அவலம்ஆற்றினான்-தருமபுத்திரனது கவலையைத் தணியச்செய்தான்;
(யாவனெனில்),-வான்கஞ்சம் பொய்கையில்-சிறந்த தாமரைத்தடாகத்திலே,
கராவின்வாய் படு-முதலையின்வாயில் அகப்பட்ட, குஞ்சரந்தனக்கு-யானைக்கு,
அருள் -கருணைசெய்த,கொண்டல் மேனியான் - காளமேகம்போலுந்
திருமேனியையுடைய கண்ணபிரான்;(எ - று.)

     குஞ்சரந்தனக்கருள் கொண்டல்மேனியான் அவலமாற்றினான் என்ற
தொடரில், அடியார்க்கு வருந்துயரை ஆற்றுவிக்குந்தன்மையன் திருமால் என்பது
பெறப்படும்: இதுகருத்துடையடைகொளியணி. எஞ்சின்-(சபதந்) தப்பினால் என்றும்.
(அவன்) ஒழிந்தால் என்றும் பொருள்கள்படும். மற்று-யான் இறத்தலே யொழிய
என்றபடி. அஞ்சலென்னுதல் - அபயப்பிரதானம். இரண்டாம் அடி முற்று
மோனை
யாதலால். மாற்றினானென்று பிரித்தல் சிறவாது.               (326)

189. - ஸ்ரீக்ருஷ்ணன் தருமனை நோக்கி யாவர்காப்பினும்சயத்திரதனை
நாளைத் தவறாமல் அருச்சுனன் கொல்வா னெனல்.

இந்திரன் காக்கினுமீசன்காக்கினுஞ்
சிந்துவின்றலைவளைத்தேவர்காக்கினுங்