நாயகன் தலைவனான கண்ணன், பரிந்து, அன்புகொண்டு, இவை-இவ்வார்ததைகளை உரைத்தலும் - சொன்னவளவிலே,-வரிந்த வெம் சிலைக்கு மண் மதித்த வீரன் - கட்டமைந்த கொடிய வில்லின் தொழிலில் (மிகச்சிறந்தவனென்று) நிலவுலகத்தாரால் நன்குமதிக்கப்பட்டவீரனான அருச்சுனன், 'இன்னம்உம்-இன்றைத்தினம் இது வரையிலும், பாவைபங்கன்மேல் பூசை புரிந்திலன்- உமாதேவியைவலபாகத்திலுடைய சிவபிரான்மேல் பூசனைசெய்தேனில்லை,' என்றனன் - என்றுகூறினான்; (எ - று.) இன்னும் யான் சிவபூசைசெய்யாமையால், உண்ணுதல் தகாதென்பதாம்: இதனால், நித்தியபூசைசெய்தாலன்றி உண்ணுதல் செய்யாத அருச்சுனனது சிவபக்திமிகுதி விளங்கும். இங்கே இளைத்து மெய்சோர்ந்து வீழ்ந்த அருச்சுனனைக் கண்ணன் கைகளால் அணைத்து எடுத்ததற்கு ஏற்ப, 'சரிந்தவர் சரிவறத் தாங்குநாயகன்' என்றார்: முதலடி -கருத்துடையடைகொளியணி. பிறவித்துயரத்தில் வீழ்ந்திட்டாரைக்கரையேற்றுபவன் என்றதும் இதிற் பெறப்படும். சிலைக்கு- உருபுமயக்கம். மண்-ஆகுபெயர். பி- ம்: மேன்மதிக்கும். (332) 195.- இதுவும் மேற்கவியும் -குளகம்: 'எம்மைப்பூசைபுரி: இருவரும்ஒருவரேயென்பதைக் காண்பாய்' எனல். மருவருகானகமலரினாலெமைப் பொருவருபூசனைபுரிதியையநீ யிருவருமொருவரேயென்பதின்றுபோ யருவரையவனடியடைந்துகாண்டியே. |
(இ-ள்.) 'ஐய-! நீ-, மரு வரு- பரிமளம் மிக்க, கான் அகம் மலரினால்- காட்டினிடத்திலுள்ள பூக்களால், எமை-எம்மை பொருவு அரு பூசனை புரிதி- ஒப்பில்லாத பூசைசெய்வாய்: (செய்தபின்பு), அரு வரை போய்-(செல்லுதற்கு) அரிய கைலாசத்துக்குச் சென்று, அவன் அடி அடைந்து- அச்சிவபிரானது திருவடிகளைச் சேர்ந்து, இருவர்உம் ஒருவர்ஏ என்பது-(அப்பரமசிவனும் யானும் ஆகிய) இரண்டுமூர்த்தியும் ஒருமூர்த்தியே யென்பதை, இன்று- இன்றைக்கு, காண்டி- பிரதியக்ஷமாகப் பார்ப்பாய்; (எ - று.)- "என்ற அரி யியம்பலும்" என எடுத்த கவியோடு தொடரும். இதனால், 'அரியும் அரனும் ஒன்று' என்ற அபேதசித்தாந்தம் விளக்கப் பட்டது. சிவபிரானுக்கு அந்தராத்மாவாக வுள்ளவனும் ஸ்ரீமந்நாரயணனே என்ற தன்மை குறிப்பிக்கப்பட்ட தென உரைப்பர்: "சிவனா யயனானாய்", " முனியே நான்முகனே முக்கண்ணப்பா", "அவாவறச்சூழ் அரியையயனையரனையலற்றி" என்ற ஆழ்வார் அருளிச்செயலுங் காண்க. மருவரு கானகம்-பொருந்திய இக்காட்டில். (இப்பொழுது) எம்மைப் பூசைசெய் எனினுமாம். மருவு அரு எனப் பிரித்தால், பெறுதற்கரிய என்று பொருளாம். பி- ம்: அரனடி. (333) 196.- அருச்சுனன் சிவனாக ஸ்ரீகிருஷ்ணனைப் பூசித்தல். என்றரியியம்பலுமிருமருங்கினு நின்றநன்மலர்கொடுநிகரில்கேள்வியான். |
|