பேரின்பமும் என்னும் இவற்றின் சொரூபமான கடவுள்,- என்னை ஆண்டு அருள் ஆழியான்ஏ - என்னை அடிமைகொண்டு கருணைசெய்கிற சக்கரபாணியான திருமாலே யாவன் ; (எ - று.) சிருஷ்டிகாலந்தோறும் எல்லாத்தத்துவங்களின் வடிவமாய் அவற்றினாலாகிய பிரபஞ்சரூபமாகக் காணப்பட்டுப் பிரளயகாலந்தோறும் அவையாவுந் தன்னுள் ஒடுங்கச்செய்து முற்றுணர்வு வரம்பிலின்பங்களின் மயமாய் நிற்கிற முழுமுதற்கடவுள், ஸ்ரீமந் நாராயணனே யென்பதாம். பிரபஞ்சத்தின் உத்பத்தி ஸ்திதி விநாசங்களுக்குப் பகவானே காரண மென்பது இதில் விளங்கும்; 'காயமும் புலனு மந்தக்கரணமு மாகி' என்றதனால் உற்பத்தியும், 'எல்லாத்தேயமும் பரந்து நின்று' என்றதனால் ஸ்திதியும், 'மீளவுஞ் சித்துஞ் சுத்தமாயமு மாகி நீங்கி' என்றதனால் விநாசமூ மெனக் காண்க. புலன்களைக்கூறியதில் அவற்றில் தோன்றிய பஞ்சபூதங்களும், அவற்றின்கூறாகிய ஐந்துஞானேந்திரியங்களும், ஐந்து கருமேந்திரி யங்களும் அடங்கும். பூதங்களைந்து-ஆகாசம் வாயு அக்கினி ஜலம் பூமி என்பன. ஞாநேந்திரியங்களைந்து - மெய்வாய்கண் மூக்குச் செவிகள். கர்மேந்திரியங்களைந்து - வாக்கு பாணி பாதம் பாயு உபத்தம் என்பன. ஐம்புலன்களுக்கும் மனத்துக்கும் இடமாதலாலும், ஐம்புலன்களின் காரியமாகிய பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆகியதாதலாலும், உடம்பு முன்கூறப்பட்டது. காயமும் புலனு மந்தக் கரணமுமாகி என்றதனால், இவற்றிற்குக்காரணமான அகங்காரம் மகாந் புருஷன் [உயிர்] பிரகிருதி என்பனவும் பெறப்படும். ஆகவே, இருபத்தைந்து தத்துவங்களும் பகவானதுசொரூபம் என்றதாயிற்று. இவ்விருபத்தைந்து தத்துவங்களும் அல்லது உலகெனப் பிறிதொன்றில்லை யென்று அறிக. மீளவும் என்றது, பிராகிருதப்பிரளயகாலத்தில் [பிராகிருதப் பிரளயம் - பிரமனாயுள் முடிவில்வரும் பிரளயம்.] தத்துவங்களெல்லாம் ஒடுங்கும் நிலையை. சிருஷ்டிகாலத்தில் எந்தப்பொருளினின்று எந்தப்பொருள் உண்டாயிற்றோ அந்தமுறைக்கு எதிராகப் பிரளயகாலத்தில் காரியப்பொருள் தன்காரணப்பொருளில் அடங்கிக் கொண்டு செல்லச்செல்ல இறுதியில் புருஷனும் பிரகிருதியும் பரமாத்மாவில் லயப்படவேண்டியனவாய் நிற்கிற தன்மையை 'மீளவுஞ் சித்துஞ்சுத்தமாயமுமாகி நீங்கி' என்றது. பிரகிருதியின் வ்யக்தஸ்வரூபம் அவ்யக்தஸ்வரூபம் என்ற இரண்டுதன்மைகளுள், இங்கு சுத்தமாயை யென்று கூறியது - அவ்யக்தஸ்வரூபத்தை ; அதாவது - பொறிகளுக்குப் புலனாகாத தன்மையை : [வ்யக்தஸ்வரூபம்- சராசரவடிவமாகப் புலப்படுந் தன்மை.] ஆனது பற்றியே, 'சுத்தமாயம்' எனப்பட்டது. பிரகிருதியை 'மாயம்' என்றது, விசித்திரசிருஷ்டியைப் பண்ணுகையாலே. இனி, சுத்த மாயம் என்பதற்கு வேறுபொருளுரைத்தல், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு ஒவ்வாது. சித்து - உணர்வுள்ளது. பெருஞானம்-முற்றுமுணர்தல், சர்வஜ்ஞதை, ஐயந்திரிபில்லாத இயற்கையறிவு. பெருமையை ஆனந்தத்துக்குங் கூட்டுக. பேரா |