அபிமன் தான் அதிரத னாதலால், ஒருவனாகவே தன் தேர் குதிரை சாரதிகளுக்கு அழிவுவராமற்காத்துப் பற்பலதேர்வீரரோடு பொருதன னென்பார், அதனை உபசாரவழக்காகத் தேரின்மேலேற்றி 'சென்றதேர்யாவையுந் தன்னொருதேரினால் வென்று' என்றார். ஆண்மை - பராக்கிரமம். (27) 28.- அபிமன் சல்லியன்மீது அம்புசெலுத்துதல். சித்திரபானுவிற்சீறிமுற்செல்லுமம் மத்திரராசனைவருகநீவருகவென் றத்திரநாலிரண்டவன்முகத்தடைசினான் மித்திரர்செல்வமாம்விசயன்மாமதலையே. |
(இ-ள்.) சித்திரபானுவின் - (இருளையழிக்கிற) சூரியன் போல, (விளக்கமுடையனாய்), சீறி முன் செல்லும் - கோபித்து எதிரில் வருகிற, அ மத்திர ராசனை - அந்த மத்திரதேசத்தரசனான சல்லியனை, மித்திரர் செல்வம் ஆம் விசயன் மா மதலை - நண்பர்க்குச் செல்வத்தையொத்த அருச்சுனனது சிறந்த குமாரனான அபிமன், நீ வருக வருக என்று - 'நீ வருவாயாக வருவாயாக' என்று (ஆதரந்தோன்ற) அழைத்து, அத்திரம் நால் இரண்ட - எட்டு அம்புகளை, அவன் முகத்து அடைசினான் அச்சல்லியனது முகத்திற்செலுத்தினான்; (எ -று.) சித்ரபாநு வென்னும் வடமொழிப்பெயர் - (ஆச்சரியகரமான) கிரணங்களை யுடைவ னென்று பொருள்படும்: இச்சொல், அக்கினியையும் காட்டும். வருகவருக - அடுக்கு, போரிலுள்ள உற்சாகத்தோடு விரைவையுங் காட்டும், நாலிரண்டு - சில என்றமாத்திரம்: "நஞ்சீயர்செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு" என்ற விடத்துப்போல. செல்வம்போலச் சமயத்தில் சினேகிதர்களுக்குப் பலவாறு உதவுபவ னென்பார், 'மித்திரர் செல்வமாம்' என்றார்; இது - விசயனுக்காயினும், அவன் மதலைக்காயினும் அடைமொழியாம். மித்ரர் என்னும் வடசொல்லுக்கு - அளவறிந்துகாப்பவரென்று பொருள். (28) 29.- பின்னும் பாகனை அபிமன் வேலினால் மாய்க்க, சல்லியன் கதையுடன்தேரினின்றிழிதல். தோளிரண்டினுநடுத்துளைபடப்பாகன்மேன் மீளவுங்கொடியதோர்வீரவேலேவினான் நீளவெங்தையுடனீள்வரையிழிதரும் யாளிபோற்சல்லியனிரதம்விட்டிழியவே. |
இதுவும், மேற்கவியும் குளகம். (இ -ள்.) தோள் இரண்டின்உம் - (அச்சல்லியனது) இரண்டு தோள்களிலும், நடு துளை பட - நடுவில் துவாரமுண்டாம்படி, ( இரண்டு அம்பு செலுத்தி), மீளஉம் - பின்பு, பாகன்மேல் - (அச்சல்லியனது) சாரதியின்மேல், கொடியது ஓர் வீரம் வேல்- கொடுமையையுடையதும் பராக்கிரமத்துக்கு உரியதுமான ஒரு வேலாயுதத்தை, ஏவினான் - (அபிமன்) எறிந்தான் ; (அதனால் அப்பாகன் இறக்கவே தேர் செலுத்துபவரில்லாமையால்), சல்லியன்-, நீளம் வெம் கதையுடன் - நீட்சியையுடைய கொடிய கதாயுதத்துடனே, நீள் |