பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்201

198.-ஸ்ரீக்ருஷ்ணன் கருடனைநினைக்க அவன் இவரிருவரையும்
ஏந்திச் செல்லுதல்.

போயருநெறியிடைப்புள்ளின்வேந்தனைத்
தூயவனினைத்தலுமவனுந்தோன்றினான்
மாயனைத்தோளினும்வலாரிமைந்தனைச்
சேயதன்கரத்தினுஞ்சேரவேந்தினான்.

     (இ - ள்) (அதன்பின்பு), போய் - (அப்பால்) சென்று, அருநெறியிடை -
(செல்லுதற்கு) அரிய வழிநடுவிலே, தூயவன்- பரிசுத்தகுணமுள்ள கண்ணன்,
புள்ளின் வேந்தனை - பறவைகளுக்கு அரசனான கருடனை, நினைத்தலும் -
(திருவுள்ளத்திற்) கருதியமாத்திரத்தில், அவன்உம் - அந்தப்பக்ஷிராசனும்,
தோன்றினான் - (அங்கு) வந்து, மாயனை- கண்ணனை, தோளின்உம் - (தனது)
தோள்களிலும், வலாரி மைந்தனை- இந்திரகுமாரனான அருச்சுனனை, சேய தன்
கரத்தின்உம் - சிவந்த தனது கைகளிலும், சேர- ஒருசேர, ஏந்தினான் -
வகித்துக்கொண்டான்; (எ-று.) - சேய - குறிப்பெயரெச்சம். பி-ம்; சேயெனக்.
                                                        (336) 

     199.- க்ருஷ்ணார்ச்சுனருடன் கருடன் கயிலையைக் குறுகுதல்.

நீலமுற்றியமலையிரண்டொடொன்றுபொற்
சீலமுற்றியமலைசெல்வதென்னவே
யாலமுற்றியகளத்தையன்வெள்ளியங்
கோலமுற்றியமலைகுறுகினானரோ.

     (இ-ள்.) சீலம் முற்றிய - அழகு மிக்க, பொன் மலை ஒன்று -
பொன்மயமானதொரு மலை, நீலம் முற்றிய - நீலநிறம் மிக்க, மலை இரண்டொடு -
இரண்டுமலைகளைச் சுமந்துகொண்டு, செல்வது என்ன- பறந்துபோவது போல,
(கருடாழ்வான் கிருஷ்ணார்ச்சுனரை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு), ஆலம்
முற்றியகளத்து ஐயன்- விஷம்மிக்க ஸ்ரீகண்டத்தையுடைய தலைவனான
சிவபிரானது, கோலம் முற்றிய - அலங்காரம் மிக்க, வெள்ளி - வெள்ளிமயமான,
அம் - அழகிய,மலை - கைலாசபருவத்தை, குறுகினான் - சமீபித்தான்.

     முன்னிரண்டடி - இல்பொருளுவமை. இரண்டுநீலமலைகள் - நீலநிறமுள்ள
கண்ணனுக்கும் அருச்சுனனுக்கும், பொன்மலை - பொன்னிறமள்ள கருடனுக்கும்
ஒப்பு எனக் காண்க.                                            (337)

200.- இரண்டகவிகள்- கருடன் வேகத்தை விளக்கும்.

மாற்றினால்விளங்குபொன்வடிவன்வெஞ்சிறைக்
காற்றினால்விசைபெறக்கழன்றுபோயின
வாற்றினாலறம்புரியம்மையோடொரு
கூற்றினான்வரைபடிகொண்டலேழுமே.

     (இ-ள்.) ஆற்றினால் - நல்லநெறியினால், அறம் புரி- தருமங்களைச்செய்த,
அம்மையோடு - தலைவியான உமாதேவியோடு, ஒரு கூற்றினான் -
ஒருபாகத்தையுடைய பரமசிவனது, வரை - கைலாச மலையிலே, படி - படிந்துள்ள,
கொண்டல் ஏழ்உம் - ஏழு மேகங்