களும்,- மாற்றினால் விளங்கு பொன் வடிவன் - உயர்ந்தமாற்றுடன் பிரகாசிக்கிற பொன் போன்ற வடிவத்தையுடைய கருடனது, வெம்சிறை - கொடிய இறகுகளின், காற்றினால்-, விசை பெற - வேகமாக, கழன்று போயின- விலகிச்சென்றன; (எ-று.) கருடனுக்கு 'ஸ்வர்ணவர்ணன்' என்று ஒரு பெயர். சிவபிரான் இரு நாழிநெல்கொடுக்க அதுகொண்டு உமாதேவி அப்பிரானது விருப்பத்தின்படி முப்பத்திரண்டு தருமங்களையும் நடத்தின ளென்பது, கதை. இனி, ஆற்றினால் அறம்புரி - சன்மார்க்கத்தில் நின்று (பரம சிவனைத் திருமணஞ் செய்யும் பொருட்டுத்)தவமியற்றிய என்றுங்கொள்ளலாம், திருக்குறளில் 'அறன் வலியுறுத்தல்' என்றஅதிகாரத்தில், அறம் என்பது - இல்லறம், தவம் என்னும் இரண்டுமாத லுணர்க.அம்மை - அம்பா என்னும் வடசொல்லின் திரிபு. அம்மையோடு ஒருகூற்றினான் - அம்பிகைக்குத் தன்வடிவத்தில் இடப்பக்கத்தைக் கொடுத்துத் தான் வலப்பக்கத்தைமாத்திரங் கொண்டு அர்த்தநாரீசுவரனாகியவன், கொண்டல் ஏழ் - சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன. இப்பாட்டு - கருடனது வேகத்தை விளக்கியது. (338) 201. | பறிந்தனகொடுமுடிபலவும்வேரொடு மறிந்தனசாரலின்மரங்கள்யாவையு மறிந்தனதமயின்முதலானபுள்ளினஞ் செறிந்தனபணிந்தனசெய்யதாள்களே. |
(இ-ள்.) (கருடனுடைய சிறைக்காற்றின் விசையால்), கொடு முடி பலஉம் - வளைந்துள்ள மலைச்சிகரங்கள்பலவும், வேரொடு பறிந்தன - அடியோடு பறியுண்டன: சாரலின் மலைச்சாரலிலுள்ள, மரங்கள் யாவைஉம் - எல்லா மரங்களும், மறிந்தன - தலைசாய்ந்தன; மயில் முதல் ஆன புள்இனம் - மயில் முதலிய பறவைக்கூட்டங்கள், அறிந்தன - (கருடன்வருவதை) அறிந்தனவாய், செறிந்தன - திரண்டனவாகி, செய்ய தாள்கள் - அந்தக் (கருடனுடைய) செவ்வியபாதங்களை, பணிந்தன - வணங்கின; (எ-று.) பி - ம் : மரங்களாயின. 202.- கருடன் சிறகுஅசைவினால்தோன்றும் ஓசையின் தன்மை. பாண்டவசகாயனூர்பறவையின்குலத் தாண்டகையிருசிறகசையுமோதையாற் |
* இந்தப்பாடலும் அடுத்த பாடலுமாகிய இரண்டுபாடல்கள், யாம்கண்ட ஏட்டுப்பிரதிகளிலெல்லாம் உள்ளன. சென்னை இராசாங்கக் கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள ஏட்டுப்புத்தகம் இரண்டிலும் இவை உண்டு. மேல்காட்டப்படும் 208 - முதல் 220 - வரையிலுமுள்ளசெய்யுள்களும் இவ்வாறே. கோயமுத்தூரைச் சார்ந்ததொரு கிராமத்திலுள்ள வித்துவான் ம-ள-ள- ஸ்ரீமுத்துநாயுடு அவர்களுடையகுமாரர் வேணுகோபாலசாமி நாயுடு அவர்களும், அந்தப்பக்கத்துப் பிரதிகள் பலவற்றை ஒத்திட்டுப் பார்த்து இங்ஙனமே தெரிவித்தனர். மதுரைச்சங்கப்பதிப்பிலும் இவையுள்ளன. |