நறைமலரிதழிசேர்நாதன்வார்சடைப் பிறைமதிநிலவினும்பிறங்கவீசுமால் |
(இ-ள்.) நிறை மதி நிகர் என (கலைகள்) நிறைந்த [பூர்ண] சந்திரன் ஒப்பு என்னும்படி, நிறத்த - வெண்ணிறத்தையுடைய, வெள்ளி- வெள்ளி மயமான, அம் - அழகிய, பொறைமலை - (பூமியைத்) தாங்குவதான கைலாசகிரி, திசைதொறுஉம் - எல்லாத்திக்குக்களிலும், பொழியும்- சொரிகிற, வாள் நிலா- பிரகாசமான வெள்ளொளி,நறை - தேனையுடைய, இகழி மலர் - கொன்றைப்பூ, சேர் - பொருந்தின, நாதன் -தலைவனான சிவபிரானது, வார்சடை - நீண்ட சடையிலுள்ள, பிறை மதி -இளஞ்சந்திரனது, நிலவின்உம் - நிலாவொளியைக் காட்டிலும், பிறங்க -மிக்குவிளங்க, வீசும் - பரவும்; (எ-று.)- ஆல் - ஈற்றசை பிறைச்சந்திரன் நிலவினும் கைலாயத்தின்வெள்ளொளி மிக்கதென்பதாம். மலைபூமியைத் தாங்குவதாதலை, பூதரம் என்ற பெயரினாலும் அறிக. (342) 205.- அங்கு யாழிசை, வந்த விடாயைப் போக்குவதாகை. நீரறுதருக்களுந்தழைக்கநின்றுமுன் னாரதன்முதரியோர்நவிற்றுநாதயாழ் பாரதவமர்புரிபச்சைமாமுகி லாரதர்விடாயைவந்தாற்றுகின்றதால். |
(இ-ள்.) நீர் அறு தருக்கள்உம் - ஈரம் வற்றிய மரங்களும், தழைக்க - செழிக்கும்படி, முன் நின்று - (சிவபிரானது) முன்னே நின்றுகொண்டு, நாரதன் - முதலியோர் - நாரதமுனிவன் முதலானவர்கள், நவிற்று - பாடுகிற, யாழ் நாதம் - வீணையின் இசை,- பாரதம் அமர் புரி - பாரதயுத்தத்தை நடத்துகிற, பச்சை மா முகில்- பசுநிறமுள்ள பெரியமேகம்போன்ற கிருஷ்ண அருச்சுனரது, ஆர் அதர் விடாயை- (செல்லுதற்கு) அரிய நெடுவழியில் வந்தாலாகிய இளைப்பை, வந்து ஆற்றுகின்றது - (அருகில்) வந்து தணிக்கின்றது; சங்கீத சாஸ்திரலக்ஷணத்துக்குச் சிறிதுந் தவறாத மிக இனிய இசைப்பாட்டைக் கேட்டமாத்திரத்தில் பட்டுப்போன மரங்களும் தளிர்த்துப்பூத்துக் காய்த்துப் பழுத்துச் செழிக்குமென்றல் மரபாதலால், 'நீரறுதருக்களுந்தழைக்க நவிற்று நாதயாழ்' எனப்பட்டது; "கலைத்தொழில்பட வெழீஇப்பாடினாள் கனிந்து, இலைப்பொழில் குரங்கின வீன்ற தூண் தளிர்" என்ற சிந்தாமணியையுங் காண்க. நாரதன் - தேவமுனி; பிரமனது குமாரன்; நரம் - மனிதர், அவர்களுள் உள்ள ஒற்றுமை - நாரம்: அதனை, தன் - (கலகத்தாற்) கெடுப்பவன் என்றாவது, நாரம் - ஆத்மசம்பந்தமான ஞானம்: அதனை, தன் - (பிறர்க்கு உபதேசத்தாற்) கொடுப்பவன்என்றாவது காரணப் பொருள். முகில் - உவமாகுபெயர். (343) 206.-ஆங்கு வீசுங் காற்றின் தன்மை. சங்கரன்மணிவரைச்சாரன்மாருதந் திங்களினிலவுமிழ்செக்கர்வேணிமேற் |
|