உம் - இந்தத் திருமால்க்ருஷ்ணனாகத்திருவவதரித்ததும், இளைத்த - (பலதுஷ்டவரசரையும் அசுரரையும் சுமப்பதனால்) இளைப்படைந்த, பார்மகள் - பூமிதேவியின், தீங்கு-தீமை [சுமை], அற - நீங்குமாறு, புரிதரு - செய்துவருகின்ற, செயல்உம் - செய்கையும் ஆகிய, யாஉம் - எல்லாச் செய்கையையும், பாங்கினால்- பாங்காக [ஆர்வமோடு], வினாவினான் - கேட்டான்; (எ-று.) (347) 210.-ஸ்ரீக்ருஷ்ணன் தான் செய்ததையெல்லாம் சொல்லியபின், சிவ பெருமான் அருச்சுனனை வரவேற்க, அக்கடவுளை அருச்சுனன் பணிதல். கேசவன்புரிவெலாங்கிரீசனென்னுமத் தேசவன்தெளிவுறச்செப்பிவிட்டபின் வாசவன்புதல்வனைவருகவென்றலும் பாசவன்புடனவன்பணிந்துபோற்றினான். |
(இ-ள்.) கேசவன் - கேசியென்னும் அசுரனைக் கொன்றவனாகிய க்ருஷ்ணன், புரிவு எலாம் - (தான்) செய்த செயல்களையெல்லாம், கிரீசன் என்னும் அ தேசவன்-கிரீசனென்று திருநாமம்பூண்ட ஒளியுள்ள அந்தக்கடவுள், தெளிவுஉற- நன்குதெளியும்படி, (செவ்வனே), செப்பிவிட்ட பின்-சொல்லி முடித்தபின்பு,- (அச்சிவபெருமான்),-வாசவன்புதல்வனை - இந்திரனுக்குப் புதல்வனான அருச்சுனனைப்பார்த்து, வருக என்றலும் - 'வருவாயாக' என்று வரவேற்றலும்,- அவன்-அந்த அருச்சுனன், பாசம்- மனத்தைப் பிணித்தலையுடைய, அன்புடன்- அன்போடு [பக்தியோடு], பணிந்து (அந்தச் சிவபெருமானை) வணங்கி, போற்றினான்- வாழ்த்தினான்; (எ-று.) கிரீசன் என்ற வடசொல் - மலையிலிருக்குந் தலைவனென்று காரணப்பொருள்படும். அன்பு பற்றுதலை யுண்டாக்குதலால், 'பாசவன்பு' என்றார். (2) புரநகையாலெரிபுராரிதன்முன நரனொடுநாரணனணுகியன்பினாற் சரணபங்கயமுறத்தாழ்ந்துபன்முறை கரனுறமுகிழ்த்திகழறன்மேயினார். (இ-ள்.) திரிபுரத்தை சிரிப்பினால் எரித்திட்ட சிவபிரானது முன்னிலையில் [சந்நிதாநத்தில்] அருச்சுனனும் கிருஷ்ணனும் சேர்ந்து, அன்பினால் (அப்பிரானது) திருவடித் தாமரைகளில் நன்றாக நமஸ்கரித்து, கைகளைச் செவ்வையாகக் கூப்பிக்கொண்டு, அநேகமுறை இவ்வார்த்தையைச் சொல்லத்தொடங்கினார்கள்; (எ-று.) - அதனை மேற்காண்க. இதன்பின் "பொங்கரா" (212) என்றும் "விண்ணிடைத்திரிபுரம்" (213) என்றும் தொடங்குகிற பாடல்கள் முன்பு அச்சிட்டுள்ளபிரதிகளில் உள்ளன. அவற்றை, (3) (4) பாடல்களாகக்கொள்க. (348) 211.-தான்முன்பு கண்ணன்மேல் அணிந்த மலர்களைச் சிவபிரான்மீது காணலும் அருச்சுனன் இருவர்க்கும் பேதமில்லையென்று உடற்புளகமுண்டாகப்பெறுதல். கண்ணன்மேலணிமலரனைத்துங்காய்கனல் வண்ணன்மேற்காண்டலுமனங்களிப்புறா |
|