வெண்ணின்மேலிரண்டெனவிலதென்றவ்விற லண்ணன்மேனியும்புளகரும்பினானரோ. |
(இ - ள்.) கண்ணன்மேல் அணி - (தான் முன்பு) க்ருஷ்ணன் மேற் சாத்தின, மலர் அனைத்துஉம் - மலர்களையெல்லாம், காய் கனல் வண்ணன் மேல் - எரிக்குந்தன்மையுள்ள அக்கினிபோன்ற செந்நிறமுடைய சிவபெருமான்மீது, காண்டலும்-கண்டவுடனே,- அ விறல் அண்ணல்-வெற்றி பொருந்திய பெருமையிற் சிறந்த அந்த அருச்சுனன், மனம் களிப்பு உறா - மனமகிழ்ச்சியடைந்து, 'மேல் எண்ணில் - மேலே [நன்றாக] ஆலோசிக்குமிடத்து, இரண்டு - இரண்டு பொருள் (உள்ளன), என-என்று சொல்லுமாறு, இலது-இல்லை, 'என்று - என்றுகருதி, மேனிஉம் - தன்னுடல்முழுதும், (அப்பெருங்களிப்பினால்), புளகு அரும்பினான்- மயிர்க்கூச்செறியப் பெற்றான் ; (எ-று.) உலகத்துப் பரம்பொருள்ஒன்றே பலபடியாகத் தோன்றுவதென்று உணர்ந்தனனென்றவாறு. இங்குச்சிவனது மகிமையைக் கூறுமிடமாதலால், அதற்கு ஏற்ப, இக்கவிஇங்ஙனம் எழுதின ரென்பர். சிவனை யருச்சிக்கவிரும்பிய அருச்சுனன் கண்ணன் கட்டளைப்படி அப்பிரானது திருவடிகளிலே யிட்ட மலர்கள் பின்பு பரமசிவனது முடியின்மேல் காணப்பட, அதுகண்டு பார்த்தன் பரதத்துவமுணர்ந்தனனென இவ்வரலாறு வைஷ்ணவசம்பிரதாயத்திற் சிறிது வேறுபாடாக் கூறப்படும்; "தீர்த்தனுலகளந்த சேவடிமேற் பூந்தாமஞ், சேர்த்தி யவையே சிவன்முடிமேல் தான் கண்டு, பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை, பேர்த்து பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை, போர்த்துமொருவராற் பேசக் கிடந்ததே" என்ற திருவாய்மொழியைக் காண்க. (349) 212.-நான்குகவிகள் - அருச்சுனன் செய்யும் சிவஸ்தோத்திரம். பொங்கராவெயின்மணிப்பூணும்பேணுநீற் றங்கராகமுமுவந்தணியுமேனியாய் சங்கராமேருவெஞ்சாபம்வாங்கிய செங்கராசிவசிவதேவதேவனே. |
(இ - ள்.) பொங்கு-விளங்குகிற, அரா-நாகங்களாகிய, வெயில் மணி பூண்உம் -சூரியகாந்திபோலச் செந்நிறமாய்விளங்குகிற மாணிக்கத்தையுடைய ஆபரணங்களையும், பேணும் - விரும்பப்படுகிற, நீறு - விபூதியாகிய, அங்கராகம்உம்- உடற்பூச்சையும், உவந்து அணியும்- மகிழ்ச்சியோடு தரித்த, மேனியாய்-திருமேனியையுடையவனே! சங்கரா-! மேரு - மேருமலையாகிய, வெம் சாபம் -கொடிய வில்லை, வாங்கிய- வளைத்த, செம் கரா-சிவந்த திருக்கையையுடையவனே!சிவ சிவ-! தேவ தேவனே-எல்லாத்தேவர்களுக்கும் ஆதிதேவனாக வுள்ளவனே !(எ-று.) (350) 213. | விண்ணிடைத்திரிபுரம்வெந்துநீறெழப் பண்ணுடைச்செந்தழல்பரப்புமூரலாய் |
* இந்தப்பாடல் முன்பு அச்சிட்டபிரதிகளில் சிறிது பாட பேதத்துடன் காணப்படுகிறது : அது (8) ஆவது பாடலாக மேலே காட்டப்படும். |