226.-கடோற்கசன் மாற்றாருடன் சபதம்முதலியவற்றை எதற்காகச் சொல்லுவதென்று தருமபுத்திரனை வினாதல். மற்றவன்முந்துறுதந்தையைவந்துவணங்கிமுன்வஞ்சனையிற் செற்றவர்தம்முடனுற்றதுசொல்வதுசேவகமோவறிவோ கொற்றவர்மாமுடிகமழ்கழலாய்வலிகூர்திறலுஞ்செயலு மற்றவர்போலவுரைப்பதென்னென்றுளழன்றுபுகன்றனனே. |
(இ-ள்.) (அதுகேட்டு), மற்று-உடனே, அவன்-அக்கடோற்கசன், முந்து உறு தந்தையை-முன்னே பொருந்தின [பெரிய] பிதாவான தருமனை, வந்து வணங்கி - (அருகில்) வந்து நமஸ்கரித்து, 'முன் - முன்பு, வஞ்சனையின் - வஞ்சனைவழியால், செற்றவர்தம்முடன் - (அபிமனை) அழித்த அப்பகைவர்களோடு, உற்றது சொல்வது- இங்கு நடந்த உண்மையைக் கூறுவது, சேவகம்ஓ - பராக்கிரமமாகுமோ? அறிவுஓ - நல்லறிவின்பயனாகுமோ? [இரண்டுமாகா என்றபடி]; கொற்றவர் மா முடி கமழ் கழலாய்-வெற்றியையுடைய அரசர்களது சிறந்த சிரசின்மேல் பரிமளிக்கிற திருவடித் தாமரையையுடையவனே! வலி கூர் திறல்உம் - வலிமையோடு மிகுந்த பராக்கிரமமும், செயல்உம்-(அதற்கு ஏற்ற) வினைத்திறமும், அற்றவர் போல- ஒழிந்தவர் போல, உரைப்பது-(நீ இவ்வாறு) சொல்வது, என் - என்னகாரணம்?’ என்று-, உள் அழன்று- மனங்கொதித்து, புகன்றனன்-சொன்னான்; (எ-று.) வஞ்சனையிற் செற்றவர் - இளமைமுதல் பலவஞ்சகங்களால் அழித்தவருமாம். அரசர்கள் தருமன்பாதத்தின்கீழ்த் தம்தலையை வைத்து வணங்கும்பொழுது, இவ்வடிமலர் அவர்முடிமேல் மணப்பதென்க. கமழ் என்ற வினைக்குஏற்ப, கழல், தாமரையாக்கப்பட்டது. (364) 227.-முந்துறச்சொல்லிவெல்வதே பொய்ம்மையில்லாதவெற்றிவழிஎன்று தருமன்சமாதனங்கூறுதல். திறனறியாமலுரைத்தனைமாருதிசிறுவனெனும்படிநீ மறநெறியேன்றுவயிர்த்தவர்கொல்வதுவஞ்சனையோவிரகோ வறநெறியேபொருதல்லதுவெல்லுதலாண்மைகொலோவழகோ விறனெறியாவதுபொய்யிலதென்றனன்மெய்ம்மையுணர்ந்திடுவான் |
(இ-ள்.) (அதுகேட்டுக் கடோற்கசனை நோக்கி), மெய்ம்மை உணர்ந்திடுவான்- தத்துவங்களை யறிந்திட்டவனான தருமன், 'நீ-, மாருதி சிறுவன் எனும்படி- வீமன்மகனென்றற்கு ஏற்றபடி, திறன் அறியாமல் உரைத்தனை - தகுதியை அறியாமற்கூறினாய்; மறம் நெறி - கொடுமையானவழியை, ஏன்று மேற்கொண்டு, வயிர்த்தவர்கொல்வது - வைரங்கொண்ட பகைவரைக்கொன்றிடுவது, வஞ்சனைஓ விரகுஓ-வஞ்சகமோ (வேறுவகை) உபாயமோ? [வஞ்சனையேயாம் என்றபடி]: அறம் நெறிஏபொருது அல்லது - தருமமார்க்கமாகப் போர்செய் தல்லாமல், வெல்லுதல்-சயித்தல்,(நமக்கு), ஆண்மை கொல்ஓ - பராக்கிரமமோ? அழகுஓ - அழகுடையதோ?[இரண்டும் அன்று என்றபடி]; விறல் நெறிஆவது - வெற்றியின் வழியாவது, பொய்இலது -பொய்ம்மையில்லாததே, என்றனன் - என்றுகூறினான்; (எ - று.) |