தந்தையான அவ்வீமனோடு, அடியனேன் ஆண்மை என் ஆம் என - '(நீ இவ்வாறுசெய்தால்) எனது பராக்கிரமம் யாதுபயன்படுவதாம்?' என்று பேசி, நின்று அயர்தலும் - (சிறிது) சோர்ந்துநின்ற வளவில், இலக்கணகுமரனும் -, தனது தேர் ஏறினான் - (இதுவே சமயமென்று அவன்கையினின்று தப்பியோடித்) தனது தேர்மேல் ஏறிக்கொண்டான்; ( எ - று.) அபிமன் சுத்தவீர னாதலால், வீமன் இடையிற்புகுந்து தன் பகைவனை வென்றதற்கு வருந்தினான். தனது வலிமையாற்றல்களாலும் வில்லின்திறத்தாலும், தான்பிறந்த குலத்துக்கு விளக்க முண்டாக்குபவனென்பார், 'குலக்கணியான விற்குமரன்'என்றார். குலம் கணி எனப் பிரித்து, தன்குலப்பெருமையை மதிப்பவனென்றுபொருள் கொள்ளுதலு மொன்று. குலத்துக்கு என்பது - குலக்கு என அத்துச்சாரியைதொக்கது: செய்யுள்விகாரம். (31) 32.- கிருதவன்மா சல்லியனைத் தன்தேரின்மே லேற்றி. இலக்கணகுமாரனோடு அச்சல்லியனையும் உய்யக்கொண்டுபோதல். தரையில்வீழ்சல்லின்யறன்னையுந்தனதுபே ரிரதமேலேற்றியவ்விலக்கணகுமரனாங் குரிசிலையன்றுயக்கொண்டுபோயினனரோ கிருதவன்மாவெனுங்கிளர்முடிநிருபனே. |
(இ -ள்.) கிருதவன்மா எனும் - கிருதவர்மா வென்கிற, கிளர் முடி நிருபன் - விளங்குகிற கிரீடத்தையுடைய அரசன், தரையில் வீழ் சல்லியன்தன்னைஉம் - பூமியில் விழுந்த சல்லியனையும், தனது பேர் இரதமேல் ஏற்றி- தனது பெரிய தேரின் மேல் ஏற்றிக் கொண்டு, அ இலக்கணகுமரன் ஆம் குரிசிலை - அந்த லக்ஷணகுமாரனாகிய வீரனையும், அன்று - அப்பொழுது, உய கொண்டு - தப்பிப் பிழைக்கும்படி (தன்னுடன் கூட்டிக்) கொண்டு, போயினான்- (அப்பால்) சென்றனன்: (எ - று.) --அரோ - ஈற்றசை; செய்யுளினிறுதியில் வருவதுமாத்திர மன்றி, அடியினிறுதியிலும், வாக்கியத்தினிறுதியிலும்வரும் இடைச்சொல்லும் பொருள்தராதாயின் ஈற்றசையெனவே படும். கிருதவன்மா- துரியோதனன் கண்ணனைப் படைத்துணையழைக்கப்போனபொழுது, அவ்வெம்பிரானால் அவனுக்குத் துணையாகத் தந்த யாதவசேனைக்குத் தலைவனாக அனுப்பப்பட்டவன், இவன்; யதுகுலத்தில் இருதிகனென்பவனது குமாரன். (32) 33.-தருமபுத்திரன்பக்கத்து அரசர்வென்றதனால் துரியோதனன் தன்சேனையோடு திரும்புதல். பொரும்பொரு முனைதொறும் புண்ணியன் சேனையிற் பெரும்பெருந் தரணிபர் பேறுடன் வேறலால் அரும்பெருங் கொடியின்மே லரவவே றெழுதினான் திரும்பினன் பல்வகைச் சேனையுந் தானுமே. |
(இ -ள்.) (இவ்வாறு அந்நாளில்), பொரும் பொரும் முனை தொறும் - போர்செய்யுமிடந்தோறும், புண்ணியன் சேனையில் பெரு |