பக்கம் எண் :

222பாரதம்துரோண பருவம்

வேறு.

233.- இதுமுதல் நான்குகவிகள்-ஒருதொடர்: அதுகேட்டுத் துரியோதனன்
கடோற்கசனைநோக்கிக் கூறுவன.

மன்மைந்தர் பலரொடும்போய் மறித்தொருவர் மீளாமன்
                                 மலைந்து வீழ,
வென்மைந்த னிறந்திடவும் யாதொன்றும் புகலாமலிருக்கின்
                                    றேன்யான்,
றன்மைந்த னிறந்தனனாந் தான்றழலின் மூழ்குவனாஞ்
                                   சபதங் கூறி,
வின்மைந்தின் மிகுந்தவருக் கழுதிரங்கி யரற்றுவது வீரந்
                                      தானோ.

     (இ-ள்.) மன் மைந்தர் பலரொடுஉம் - இராசகுமாரர்கள் அநேகருடனே,
போய்- (அபிமனையெதிர்த்துச்) சென்று, மறித்து ஒருவர் மீளாமல்-மறுபடி
ஒருவருந்திரும்பிவராமல், மலைந்து வீழ- போர்செய்து (அவனால்) இறந்து விழ,
என்மைந்தன்- எனது மகனான இலக்கணனும், இறந்திடஉம்- (அவனால்)
அழிவுபட்டிருக்கவும், யான்- (இராசராசனான) நான், யாது ஒன்றுஉம் புகலாமல்
இருக்கின்றேன்- யாதொருசபதத்தையுஞ் சொல்லாமலிருக்கிறேன்; (அங்ஙனமிருக்க),
தன் மைந்தன் இறந்தனன் ஆம் - தன்மகனான அபிமன் இறந்துவிட்டானாம்;
(அதற்காக), தான் தழலில் மூழ்குவன்ஆம் - அருச்சுனன்தான் அக்கினியிற்
பிரவேசிப்பானாம்; வில் மைந்தில் மிகுந்தவருக்கு - வில்வலிமையில் மிக்க வீரர்கள்
இறந்ததற்காக, அழுது - புலம்பி, இரங்கி- விசனமுற்று, சபதம் கூறி-
சபதவார்த்தைசொல்லி, அரற்றுவது-கதறுவது, வீரம்தான்ஓ - பராக்கிரம
நிலையாகுமோ? [ஆகாது என்றபடி]; (எ - று.)

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் - இச்சருக்கத்து 145 - ஆங் கவி போன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.                      (371)

234.பயத்திரவினடுங்கியரன்பருப்பதம்புக்கவன்கொடுத்த
                          படையும்வாங்கி,
வயத்திரதமால்கடவவந்தெதிர்தோன்றுவனாகின்
                            மகரமோதுங்.
கயத்திரவிவிழுவதன்முன்கையறுதன்புதல்வனைப்
                    போற்களத்தின்மாளச்,
சயத்திரதன் கொடுங்கணையாற்றான்படுதலு
                   றுதியெனச்சாற்றுவாயே.

     (இ-ள்.) (அருச்சுனன்), நடுங்கி - (தன்சபதம் நிறைவேறுமோ மாட்டாதோ
என்று) மிக அச்சங்கொண்டு, பயத்து இரவில் - அச்சந் தருவதான இராத்திரியில்,
அரன் பருப்பதம் புக்கு- சிவனது கைலாச பருவதத்துக்குச் சென்று, அவன்
கொடுத்த படைஉம் வாங்கி - அச்சிவபிரான்கொடுத்த ஆயுதங்களையும்
பெற்றுக்கொண்டு, வயத்து இரதம் மால் கடவ - வலிமையையுடைய தேரைக்
கிருஷ்ணன் செலுத்த, எதிர் வந்து தோன்றுவன் ஆகில் - (நாளைப்போரில்)
எதிரில்வந்து நிற்பானானால்,- மகரம் மோதும் கயத்து - சுறாமீன்கள் பாய்கிற
நீர்நிலையாகிறகடலிலே, இரவி விழுவதன்முன் - சூரியன் வீழ்ந்து அஸ்தமித்தற்கு
முன்பு, கை அறுதன் புதல்வனை போல்- (இன்று) செயலற்று அழிந்த
தன்மகனானஅபிமனைப்போலவே. களத்தில் - போர்க்களத்தில், மாள-உயிரழிய,
சயத்திரதன்கொடுகணையால் - சயத்திரதனது கொடிய அம்பினால், தான்
படுதல் - அவ்