பக்கம் எண் :

224பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) ஆளை- (ஒரு) மனிதனை, ஆள் - (மற்றொரு) மனிதன், நிலை
அறிவது அல்லது - (எதிரில்நின்று காணப்படும்) வடிவத்தை மாத்திரம்
அறிவதல்லாமல், மற்று- மற்றை வலிமை திறமைமுதலிய குணாதிசயங்களை,
அறிபவர் - அறியவல்லவர், யார் - எவர்? (ஆதலால்), அணிந்த போரில் - அணி
வகுத்துச்செய்யும் யுத்தத்தில், நாளை - நாளைக்கு, யார் வெல்வர் - எவர் சயிப்பர்?
என - என்று, தெரியும்ஓ - (இன்றைக்குத்) தெரியுமோ? என - என்று, நவின்று-
சொல்லி, நகைத்தான் - (பரிகாசமாகச்) சிரித்தான்; (யாவனெனில்?) - பாளை
வாய் -பாளை யமைந்த, நெடுங்கமுகின் - நீண்ட பாக்கு மரத்தின், மிடறு -
கழுத்து[மேலிடம்], ஒடிய - ஒடிபடவும், குலை தெங்கின் பழங்கள் -
குலையாகவுள்ளதென்னைமரத்தின் முதிர்ந்த காய்கள், வீழ - கீழ்விழவும், வாளை
பாய் -வாளைமீன்கள் தாவிப் பாயப்பெற்ற, குரு நாடுஉம்- குருநாட்டையும், எ
நாடுஉம்-மற்றை யெல்லாநாடுகளையும், முழுது ஆளும் - முழுவதும் அரசாளுகிற,
மன்னர்கோமான் - ராஜராஜனான துரியோதனன்;  ( எ-று.)

     'நாளை யார்வெல்வ ரெனத் தெரியுமோ' என்ற துரியோதனனது உட்கோள்,
அருச்சுனனைச் சயத்திரதன் வெல்வானென்பது. மீனின்கொழுமையைக் கூறி,
அதனால், நாட்டுவளத்துக்குப் பிரதானகாரணமான நீர்வளச்சிறப்பைத்
தெரிவித்தவாறு;இங்ஙனம் வருணித்தல் கவிகளுக்கு இயல்பு. தெங்கின் முற்றின
நெற்று பழமெனப்படுவதை "காய்மாண்ட தெங்கின் பழம் வீழ" எனச் சிந்தா
மணியிலுங்காண்க. மன், ஓ - ஈற்றசை.                            (374)

237.- இதுவும், மேற்கவியும் - கர்ணன் கூறுதல்.

தாரரசன்மகன் றுச்சாதனன் மகன் சல்லியன்மகன் வேற்
                              சகுனியென்னும்,
பேரரசன்மகன் முதலாவெத்தனைபேர் பட்டாலும்
                                பெரியதன்றே,
பாரரசாளுதற்கிருந்த பார்த்தன்மா மகனொருவன்
                                 பட்டானாகி,
லாரரசுக்கின்யுரியா ரந்தோவென்றுரைத்தான்மற்
                             றங்கர்கோமான்.

     (இ-ள்.) தார் அரசன் மகன்-வெற்றிமாலையையுடைய துரியோதனது
குமாரனான இலக்கணனும், துச்சாதனன் மகன் - துச்சாசனனது புத்திரனான
துச்சனியும், சல்லியன் மகன் - சல்லியனது புதல்வனும், வேல் சகுனி என்னும்
பேர்அரசன் மகன் -வேலில்வல்ல சகுனியென்னும் பெரிய அரசனது மைந்தனும்,
முதல்ஆ-முதலாக, எத்தனை பேர் பட்டால்உம் - எத்தனையோபேர் இறந்தாலும்,
பெரியதுஅன்றே - (அதுவெல்லாம்) பெரியதன்றாம்; அரசு ஆளுதற்கு இருந்த -
பூமிமுழுவதையும் (இனி) அரசாட்சிசெய்ய இருந்த-பார்த்தன் மா மகன் ஒருவன் -
அருச்சுனனது சிறந்த பிள்ளையான அபிமனொருத்தன், பட்டான் ஆகில்-
இறந்தானானால், இனி அரசுக்கு ஆர் உரியார்-இனி அரசாட்சிக்கு எவர் உரியர்?
அந்தோ - ஐயோ! என்று -, மற்று - பின்பு, அங்கர் கோமான் -
அங்கநாட்டார்க்குத்தலைவனான கர்ணன், உரைத்தான் - (பரிகாசமாகக்)
கூறினான்;

     இராச்சியத்துக்கு உரியவரான துரியோதனன் முதலியோரது மக்கள் இறந்ததை
அவர்கள் பெரிதும் பாராட்டாமலிருக்க, அர