பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்227

     (இ -ள்.) இருவர் - இரண்டுபேர், எதிர் எதிர் - எதிர்க்கு எதிராக (நின்று),
தம்மில் - தமக்குள் [ஒருவரோடொருவர்], இகல் பொருதல் - போர்செய்தல்,
உலகுஇயற்கை -; (அப்படியிருக்க), யார் உம் - (நீங்கள்) எல்லோரும், கூடி -
ஒன்றுசேர்ந்து, (வந்துஎதிர்த்து) பருவம் உறா- தக்கபிராயம் நிரம்பாத, தனி -
ஒப்பற்ற,குதலை - மழழைச் சொற்களையுடைய, பாலகனுக்கு - இளங்குமரனான
அபிமனுக்கு.ஆற்றாமல் - முன்நிற்கமாட்டாமல், பறந்து போனீர் - (முதலில்)
விரைந்தோடிப்போனீர்கள் ; (அப்படிப்பட்ட உங்களில்), (பின்பு) ஒருவன் -
[கர்ணன்],நெடு தேர் அழிக்க - பெரியதேரைச்சிதைக்க, ஒருவன் -[துரோணன்],
மலர் கைதுணிக்க - தாமரைமலர்போன்ற ஒருகையைத் துண்டிக்க, ஒருவன்-
[சயத்திரதன்],பின்னை - அதன் பின், பொருவன் என - (நான் உன்னோடு)
போர்செய்வேனென்று சொல்லி, அறை கூவி- வலியப் போருக்கு அழைத்து,
பொன்றுவித்தான் -(அபிமனை) அழியச்செய்தான்; இது கொண்டுஓ - இந்தப்
பராக்கிரமத்தாலோ,புகல்கின்றீர் - (நீங்கள் செருக்கிப்) பேசுகின்றீர்கள்; ( எ-று.)-
என்று கடோற்கசன்கூறினான். ஈற்றேகாரம்- இகழ்ச்சி.

     மழலையும் குதலையும் ஒருபொருளன வென்பது ஒருசாரார் துணிபு;
பரிமேலழகர்கருத்தும் இதுவே. மற்றொருசாரார், குதலை-
எழுத்துவடிவுபெறாததென்றும். மழலை- எழுத்துவடிவுபெற்றுச்
சொல்வடிவுபெறாததென்றும் வேறுபாடுகூறுவர். இருவரெதிரெதிர் தம்மில்
இகல்பொருதல்-'த்வந்த்வயுத்தம்'.                                  (379)

242.-அதுகேட்டுத் துரியோதனன் கூறுதல்.

வரைக்குவமை பெறுந்தடந்தோள் வீமன்மகனிப்படியே மதி
                                     யானாகி,
யுரைக்குமொழி கேட்டிருந்த வுரகமணி கொடிவேந்த
                               னுருத்துநோக்கி,
யிருக்குமெழி லவைக்கேற்ப லியம்பாமற் றன்மதத்தா
                                 வியம்புகின்ற,
வரக்கிமக னுடனென்றுங் கழறாதீரென்றுரைத்
                             தானரசர்யார்க்கும்.

     (இ -ள்.) வரைக்கு - மலைக்கு, உவமை பெறும்- ஒப்பாகத்தக்க,
தடதோள் -பெரிய தோள்களையுடைய, வீமன் மகன் - கடோற்கசன், மதியான்
ஆகி- (தம்மை)லட்சியஞ்செய்யாதவனாய், இ படி ஏ உரைக்கும் -
இவ்வாறேமேல்மேல் கூறுகிற,மொழி- வார்த்தையை, கேட்டு இருந்த-, உரகம்
அணிகொடி வேந்தன் -பாம்பின்வடிவைத் தரித்த துவசத்தையுடைய துரியோதனன்
,உருத்து நோக்கி -கோபித்துப்பார்த்து, அரசர் யார்க்குஉம் - (அங்கிருந்த)
அரசரெல்லோருக்கும்,'இருக்கும் - (நாம்) வீற்றிருக்கிற, எழில் - அழகிய,
அவைக்கு - இச்சபைக்கு, ஏற்ப -தக்கபடி, இயம்பாமல் - பேசாமல், தன் மதத்தால்
தனது கொழுப்பினால்,இயம்புகின்ற - பேசுகிற, அரக்கிமகனுடன்- இராக்கதியின்
புத்திரனானகடோற்கசனோடு, ஒன்றுஉம் கழறாதீர்- யாதொருவார்த்தையையும்
சொல்லாதீர்',என்று உரைத்தான் - என்று கூறினான்; (எ -று.)

     'வரைக்கு உவமைபெருந் தோள்' என்றதற்கு - மலையினுஞ் சிறந்த தோள்
என்று கருத்து. இதில் 'அரக்கிமகன்' என இகழ்ந்தவாறு. இரவில் வலிமை
மிகுதியுடைய இராக்கதனான கடோற்