பக்கம் எண் :

பதினோராம் போர்ச்சருக்கம்23

பெரு தரணிபர்- நல்வினையையுடைய தருமபுத்திரனது சேனையிலுள்ள பெரியபெரிய
அரசர். பேறுடன் வேறலால் - பாக்கியத்தோடு வெல்லுதலால்,- அரு பெரு
கொடியின்மேல் அரவம் ஏறு எழுதினான் - அரிய பெரிய துவசத்தின்மேற்
பெரும்பாம்பின்வடிவ மெழுதப்பெற்றுள்ள துரியோதனன், பல்வகை சேனைஉம்
தான்உம் திரும்பினன்- பலவகைச்சேனைகளுந் தானுமாக (ப் படைவீட்டுக்கு)
மீண்டான்; (எ-று.) - பலவகைச்சேனையுந் தானும் திரும்பினன் -
திணைவிரவியெண்ணிச் சிறப்பினால் ஆண்பால்முடிபு ஏற்றது; [நன். பொது.27.] (33)

வேறு.

34.- சூரியாஸ்தமனவருணனை.

தண்டே கொண்டு வீமனெனுஞ் சண்ட பவனந் தாக்குதலாற்,
றிண்டேரென்னப் பட்டதெல்லாஞ் சிதைகின்
                             றதுகண்டிதயம்வெரீஇப்,
பண்டே யுள்ளவோராழித் தேரோ டொளித்துப் பரிகளுடன்,
கொண்டே யருக்க னவ்வளவிற்குடபான் முந்நீர் குளித்திட்டான்.

     (இ-ள்.) வீமன் எனும்-வீமசேனனென்கிற, சண்ட பவனம்- கொடுங்காற்று,
தண்டுஏ கொண்டு - (தனது) கதாயுதத்தினாலே, தாக்குதலால்- மோதியடித்ததனால்,
திண் தேர் என்னப்பட்டது எல்லாம் - வலிய தேரென்று பெயர்கூறப்பட்ட பொருள்
யாவும், சிதைகின்றது- (போர்க்களத்தில்) நொருங்கியழிகின்றதை, கண்டு -பார்த்து,-
அருக்கன்- சூரியன், இதயம் வெரீஇ - (தனது தேருக்கும்
அபாயமுண்டாகுமோவென்று) மனமஞ்சி, அ அளவில் - அச்சமயத்தில், குடபால்
முந்நீர் குளித்திட்டான் - மேற்குப்பக்கத்திலுள்ள கடலில் முழுகினான்; ( எ -று.)

     சூரியன் மண்டலத்தோடு இயல்பாக மறைந்ததற்கு, தனது தேருக்கும்
வீமன்கதை விரைவாகத்தாக்குதலால் சிதைவுண்டாகுமோ வென்று அஞ்சியோடி
யொளித்ததாகக் கவி காரணங்கற்பித்துப் கூறினமையால், ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
சூரியனதுதேர் சம்வத்ஸ்ரசொரூபமான ஒருசக்கரத்தையுடைய தென்றும், அதில்
காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தி, த்ரிஷ்டுப், ஜகதீ என்கிற சந்தங்க
ளேழுமே குதிரைகளாகப் பூட்டப்பட்டுள்ளன வென்றும் புராணங் கூறுதலால்,
'ஓராழித்தேர்' என்றும், 'பரிகள்' என்றுங் கூறினார். சூரியன் தேர்
மற்றையதேர்கள்போலன்றி மிகப்பழையதாகவும், ஒருசக்கரத்தையுடையதாகவும்
எளிதில் அபாயமடையத்தக்க நிலைமையிலிருந்த தென்பது தோன்ற,
'பண்டேயுள்ளவோராழித்தேர்' என்றது.

     முந்நீர்- மூன்றாகிய தன்மையை யுடையது: மூன்றுதன்மைகள்- பூமியைப்
படைத்தல் காத்தல் அழித்தல் என்பன; நீரினின்று நிலம் பிறந்ததென வேத
மோதுதலால் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையா தாதலால் காத்தலும்,
இறுதியில்நீரினால் மூடப்பட்டு