பக்கம் எண் :

232பாரதம்துரோண பருவம்

சமுத்திரஞ்சூழ்ந்த, பார்எலாம் - பூலோகம் முழுவதையும், உடன் புரக்க -
ஒருசேரஆள, நின்றவன் - (எண்ணி) நின்றவனான துரியோதனன்,- பகை
துரக்கும் -பகைவரை அஞ்சியோடச்செய்யவல்ல, வெம் குனி சிலை -
கொடியவளைந்தவில்லையுடைய, துரோணன் தன்னொடுஉம்-  துரோணனுடனே,
சில புகழ்ந்துகூறுவான் - சில வார்த்தைகளைப் புகழ்ச்சியாகச் சொல்லுவான்; 
(எ -று.) -அவற்றை அடுத்த கவியிற் காண்க.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினான்கு கவிகள் - இச்சருக்கத்தின்
186 - ஆங் கவிபோன்ற கலிவிருத்தங்கள்.                         (384)

247.கொடிநெடுஞ்சேனையைக்கூறுசெய்துநீ
கடிகைமுப்பதுமுடன்காக்கவல்லையேல்
வடிவுடைச்சிந்துமாமகனுமுய்குவன்
வெடியனற்குளிக்குவன்விசயன்றானுமே.

     (இ-ள்.) நீ-, கொடி நெடு சேனையை - துவசங்களையுடைய பெரிய (நமது)
சேனையை, கூறுசெய்து- (ஒழுங்காக) அணிவகுத்து, கடிகை முப்பதுஉம் உடன் -
(நாளைப்பகல்) முப்பதுநாழிகை முழுவதும், காக்க வல்லைஏல்- (சயத்திரதனைப்)
பாதுகாக்கவல்லவனாவையானால்,- வடிவு உடை - (அழகிய) வடிவத்தையுடைய,
சிந்து மா மகன்உம் - சிந்துதேசத்தையாளும் சிறந்த ஆண்மகனான
அச்சயத்திரதனும், உய்குவன் - பிழைத்திடுவான் ; விசயன் தான்உம்- அருச்சுனனும்,
வெடி அனல் குளிக்குவன் - அழிக்கிற தீயில் மூழ்கியிறந்திடுவான் ; ( எ-று.)-
என்றுதுரோணனிடம் துரியோதனன் கூறினான். வெடி - வெடிக்கிற எனினுமாம்.
                                                              (385)

     248.- மற்றும் போர்வீரரைத் துரியோதனன் வேண்டுதல்.

நாளையோர்பகலுமேநமக்குவெய்யபோர்
காளையரனைவருங்காமின்காமினென்
றாளையுமடுகளிற்றாழிமன்னவன்
வேளைபுக்கவரினும்வீழ்ந்துவேண்டினான்.

     (இ -ள்.) (பின்னரும்), 'நாளை ஓர் பகல்உம்ஏ - நாளையொரு தினத்தின்
பகற்பொழுது மாத்திரமே, நமக்கு வெய்ய போர் - நமக்குக் கொடிய போர்
(நிகழ்வது); காளையர் அனைவர்உம் - வீரர் யாவரும், காமின் காமின் -
(சயத்திரனைப்) பாதுகாத்திடுங்கள் பாதுகாத்திடுங்கள்,' என்று - என்று
(போர்வீரரனைவரையும் நோக்கிப் பலமுறை) சொல்லி, ஆளைஉம் அடு களிறு
ஆழிமன்னவன்- (தன்னை உணவளித்துக்காக்கிற) பாகனையும் கொல்லுகிற 
மதயானைபோன்ற ஆஜ்ஞாசக்கரத்தையுடைய துரியோதனராசன், வேளை
புக்கவரின்உம்-ஆபத்துக்காலத்தில் சரணமடைந்தவர்களினும் அதிகமாக, வீழ்ந்து
வேண்டினான் -(அவர்களை) வணங்கிப் பிரார்த்தித்தான்; ( எ -று.)

     சயத்திரதனைக் கொல்லமாட்டாது அருச்சுனனொருவன் இறந்தமாத்திரத்தில்
மற்றைப் பாண்டவர்நால்வரும் உடனே இறந்திட, நாளையோடு
பகையொழியுமென்பது உட்கோள். ஆதலின்