வணங்காமுடிமன்னனான இவன் இங்ஙனம் வீழ்ந்து வேண்டினான். காளையர் அனைவரும் காமின் - இடவழுவமைதி. உபகாரஞ்செய்தவர்க்கும் அபகாரஞ்செய்பவ னென்பது தோன்ற, ஆளையும் அடு களிற்றுமன்னவனென்றார். ஆளையும் என்ற உயர்வுசிறப்பும்மையால், அதனை அவன் ஓம்புந்தன்மைவிளங்கும். வேலைபுக்கவரினும் - (மரக்கலமுடைந்து) கடலில் வீழ்ந்தவரினும் மிகுதியாக என்றும்உரைக்கலாம். (386) 249. - இதுமுதல் மூன்று கவிகள் - ஒரு தொடர்: துரோணன் தைரியங் கூறுதலைத் தெரிவிக்கும். மணிமதிலரணெனமன்னுசேனையை யணிபடநிறுத்தியாமளவுங்காப்பன்யான் பணிவுறுபுண்ணியபாவமுற்றுவ துணிவுறத்தெரியுமோதும்பைமாலையாய். |
(இ-ள்.) தும்பை மாலையாய் - (போருக்குரிய) தும்பைப்பூ மாலையையுடையவனே! யான்-, மன்னு சேனையை - நிலைபெற்ற (நமது) சேனையை, மணி மதில் அரண் என - அழகிய மதிலாகிய அரண்போல, அணிபடநிறுத்தி - இடைவிடாது பொருந்த நிற்கச் செய்து, ஆம் அளவுஉம் - (என்னால்)இயலுமளவும், காப்பன் - (சயத்திரனைப்) பாதுகாப்பேன்; பணிவு உறு- (தம்மைச்செய்த வரை) நியமித்தல் பொருந்திய, புண்ணியம் பாவம்- (அவரவர் செய்த)நல்வினை தீவினைகள், முற்றுவ - நிறைவேறும் வகைகள், துணிவுஉற தெரியும்ஓ -நிச்சயமாக முந்தி அறியப்படுமோ? [படா என்றபடி]; ( எ - று.) என்னாலியன்றமட்டில் யான் பாதுகாப்பேன்; யார் விதி எப்படி பலிக்குமோ? தெரியாது என்பதாம். 'பணியுறு' என்ற பாடத்துக்கு - முந்திச் செய்து பொருந்திய என்க; பணி = பண்ணி. (387) 250. | முப்பதுகடிகையின்மொழிந்தவஞ்சினந் தப்பதுபடாதெனிற்றனஞ்சயன்சிலைக் கொப்பதொன்றில்லைமற்றுரைத்தவாசெய லப்பதுமாசனன்றனக்குமாகுமோ. |
(இ-ள்.) மொழிந்த வஞ்சினம்- (அருச்சுனன்) சொன்ன சபதம், முப்பது கடிகையின் - (நாளைப்பகல்) முப்பதுநாழிகைக்குள்ளே, தப்பு அது படாது எனின் -தவறாமல் நிறைவேறிவிடுவதானால், தனஞ்சயன் சிலைக்கு ஒப்பது ஒன்று இல்லை -அருச்சுனனது வில்லுக்குச் சமமாவது யாதொன்றுமில்லை; (ஏனெனில்),- உரைத்த ஆ(று) செயல்- சொன்னபடி செய்தல், அ பதுமஆசனன் தனக்கும் ஆகும்ஓ-திருமாலின் திருவுந்தித்தாமரைமலரை இருப்பிடமாகவுடைய அந்தப்பிரமதேவனுக்குத்தான் முடியுமோ? ( எ -று.) "சொல்லுதல் யார்க்குமெளிய வரியவாஞ், சொல்லியவண்ணஞ் செயல்" என்றபடி சொன்னவாறுசெய்தல் படைக்குங் கடவுளான |