சாமர்த்தியம் அழகு முதலிய சிறப்புக்களையுடைய குழந்தைகளைக் கொல்லும்படி யேவியனுப்பப்பட்ட பூதனையென்னும் ராட்சசி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து தூங்கிக் கெண்டிருந்த கண்ணனாகிய குழந்தையை யெடுத்து நஞ்சுதீற்றிய தனதுமுலையைக் கொடுத்துக் கொல்லதுமுயல, யெடுத்து நஞ்சுதீற்றிய தனதுமுலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானானகுழந்தை அவ்வரக்கியின் முலைகளைக் கைகளால் இறுகப்பிடித்து அவளுயிரோடும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறிவிழுந்திறக்கும்படி செய்த தென்பதாம். (395) 258.- அருச்சுனனோடு சென்று மீண்டசெய்தியைக் கண்ணன் தருமபுத்திரனிடங் கூறுதல். கயிலைபுக்கதுமரன்கணையுஞ்சாபமும் வியன்மலர்ப்பொய்கையும்விசயற்கீந்ததும் புயலெனக்கரியமெய்ப்பூந்துழாயவன் றுயிலுணர்குரிசிலுக்கடைவிற்சொன்னபின். |
இதுவும் மேற்கவியும் குளகம். (இ-ள்.) புயல் என கரிய- மேகம்போலக் கறுத்த, மெய் - திருமேனியையும், பூதுழாயவன் - அழகிய திருத்துழாய்மாலையையு முடைய கண்ணன்,- துயில் உணர்குரிசிலுக்கு - தூக்கம்விழித்த தருமராசனுக்கு,- கயிலை புக்கதுஉம்- (தாம்) கைலாயத்தைச் சேர்ந்ததையும், (அங்கு), அரன்- சிவன், கணைஉம் - அம்பையும், சாபம்உம் - வில்லையும், (கணைவிற்களைக்கொண்ட), வியன் மலர் பொய்கைஉம் - பெரிய பூக்களையுடைய தடாகத்தையும், விசயற்கு - அருச்சுனனுக்கு ஈந்ததுஉம்- கொடுத்ததையும், அடைவின் - முறையே, சொன்னபின் - கூறியபின்பு, (எ-று.)- "கடோற்கசனும் கூறினான்" என அடுத்தகவியோடு முடியும். (396) 259.- கடோற்கசன் தான் தூதுசென்று மீண்ட செய்தியைக் கூறுதல். பைதிகழ்மணிப்பணிப்பதாகையானிடை யெய்தியங்குரைத்ததுமிருந்தமன்னவர் வெய்துறப்புகன்றதுமீண்டுவந்ததுங் கொய்தொடைக்கடோற்கசன்றானுங்கூறினான். |
(இ-ள்.) கொய் தொடை - (பூக்களைப்) பறித்துத்தொடுத்த மாலையுடைய, கடோற்கசனும்--, --பை திகழ்- படத்தில் விளங்குகிற, மணி - மாணிக்கத்தையுடைய, பணி- பாம்பையெழுதிய- பதாகை யானிடை - துவசத்தையுடைய துரியோதனனிடத்து, எய்து - சேர்ந்து, அங்கு- அவ்விடத்து, உரைத்ததுஉம் - (தான்)பேசினதையும், இருந்த மன்னர் - (அங்கு) இருந்த அரசர்கள், வெய்து உற- கொடுமை பொருந்த, புகன்றதுஉம்- பேசினதையும், மீண்டு வந்தது உம் - (தான்) திரும்பிவந்ததையும், கூறினான்-; ( எ-று.) பி -ம்: கொய்திறற். பதாகை - பெருங்கொடி யென்பர், நச்சினார்க்கினியர். (397) பதின்மூன்றாம் போர்ச்சருக்கம் முற்றிற்று. |