பதினான்காம்போர்ச்சருக்கம் 1.- கடவுள் வணக்கம் அரியதண் கலைவாண் மதியமுங் கொதிகொ ளாலமுந் தனதிடத்தடக்கி, யுரியவொண் கங்கா நதிக்கொரு பதியா யுரைபெறு முயர்மகோ ததியிற், பரியதிண் சிலையோ டம்பெலா முகந்துபற்குனப் பொருப்பிடைப் பொழியுங், கரியபைம் புயலைக் கைத்தொழுமவரே கருவிலே திருவுடை யவரே. |
(இ-ள்.) அரிய - (பிறர்க்கு) அருமையான, தண் - குளிர்ச்சியாகிய, கலைவாள் -கலைகளின் ஒளியையுடைய, மதியம்உம் - சந்திரனையும், கொதிகொள்- கொடுமையைக்கொண்ட, ஆலம்உம் - விஷத்தையும், தனதுஇடத்து - தன்னிடத்தில்,அடக்கி - அடங்கவைத்துக் கொண்டு, உரிய ஓள் கங்காநதிக்கு ஒரு பதி ஆய் -தனக்கு உரியதான சிறந்த கங்காநதிக்கு ஓர் இடமாய் [ஒரு தலைவனாய்].உரைபெறும்- புகழ்பெற்ற - உயர் மகோததியில் - சிறந்த (பரமசிவனாகிய)பெருங்கடலினின்று, பரிய திண் சிலையோடு அம்புஎலாம் முகந்து - பெரிய வலியவில்லும் அம்பும் ஆகிய எல்லாவற்றையும் நிரம்ப எடுத்து, பற்குனன் பொருப்பிடை- அருச்சுனனாகிய மலையிடத்தே, பொழியும் - சொரிந்த, கரிய பைம் புயலை -கருநிறமுடைய குளிர்ந்தமேகம் போன்ற கண்ணனை, கைதொழுமவர்ஏ - கைகூப்பிவணங்குந் தன்மையுடையவர்கள்தாமே, கருவிலே திரு உடையவர் -கருப்பத்திலேதொடங்கி ஐசுவரியமுடையவராவர்; ( எ -று.) கண்ணபிரான் தனது பெருங்கருணையால் பாண்டவர்க்குச் சகாயனாய் நின்று அருச்சுனனது சபதத்தை நிறைவேறச்செய்தற் பொருட்டு அவனுடன் கைலாசத்துக்குச்சென்று அதற்கு உரிய கருவிகளை அவ்வருச்சுனனுக்குச் சிவபிரானைக்கொண்டு கொடுப்பித்தருளின வரலாற்றைக் கீழ்ப் பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்திற் கூறிவந்தபொழுது அப்பிரானது அந்தக் கலியாண குணத்தில் இவ்வாசிரியர்க்கு உண்டான ஈடுபாடு அச்சருக்கம் முடிந்தபின்பும் ஆராதுதலையெடுத்து நின்றதனால், அச்செய்தியையே குறித்து அடுத்த இச்சருக்கத்துக்குக்கடவுள்வாழ்த்துக் கூறுகின்றனர். சிவபிரானிடத்தில் கடலின்தன்மையையும், கண்ணபிரானிடத்துக்காளமேகத்தின் தன்மையையும், அருச்சுனனிடத்துமலையின் தன்மையையும் ஏற்றிக்கூறினார்; உருவகவணி. மதியமும் ஆலமும் தனதிடத்து அடக்குதல் - உபமானம் உபமேயம் இரண்டுக்கும் பொருந்துதலும், பதி சிலை அம்பு என்ற சொற்கள் உபமானமாகிய கடலோடு இயையுமிடத்து முறையே கணவன் மழைக்கல் நீர் என்றும், உபமேயமாகிய சிவபிரானோடு இயையுமிடத்து முறையே இடம் வில் பாணம் என்றும் பொருள்பட்டு, அச்சிலேடை உருவகத்துக்கு அங்கமாய் அமைதலும் காண்க. கடலுக்கு, மதியை அடக்குதல் - பாற்கடல் கடைந்தகாலத்து அக்கடல் சந்திரனது உற்பத்திக்கு இடமானதும், நாள்தோறும் சந்திரனுதித்தல் கடலினின்று தோன்றுகிறவாறுபோல இருத்தலும்: ஆலம் அடக்குதல் - பாற் கடல்கடைந்தகாலத்து அக்கடல் கொடிய ஹாலாஹலமென்னும் |