மிடைந்து ஒளி உமிழும் - மிகுதியாக ஒளியை வீசுகிற, வேல் படை - வேலாயுதத்தையேந்திய, தட கை - பெரியகையையுடைய, வீமன்உம்- வீமசேனனும், இளைஞர்உம் - தம்பிமாரான நகுலசகதேவர்களும், பலர்உம் - மற்றும் பல அரசர்களும், இரு புறன்உம்- (தனது) இரண்டுபக்கங்களிலும், குடைந்து- நெருங்கி, கைவர - கைகள்போல ( ஏற்றதுணையாக அடுத்து) வரவும்,- மகவான் குமரன் உம்- இந்திரகுமாரனான அருச்சுனனும், அமர் களம் குறுக- யுத்த களத்தைச்சேர்ந்திட.- (எ-று.)-"மைத்துனன்வகுத்துநின்றான்" என அடுத்தகவியோடு தொடர்ந்து முடியும். கீழ்க்கவியில், 'தருமன்மாமதலைசேனையொடெழுந்தான்' என்றதில், மற்றையோர் எழுந்ததும் அடங்குமாயினும், அன்றைத் தினத்தில் சபதத்தை நிறைவேற்றவேண்டிய பாரத்தை அருச்சுனன் மேற்கொண்டுள்ளானாதலால், அவனதுவருகையைச் சிறப்பாகத் தனியேயெடுத்துக்கூறுகிறார். வீமனும் நகுலசகதேவர்களும் சாத்தகி முதலிய மற்றும் பல அரசரும் அவனையடுத்துநின்றதற்கும் இதுவே காரணம். கடல் கடைந்ததொருகட லெனச் சமத்காரந் தோன்றக் கூறினார். தேவர்களைக் காக்கும்பொருட்டுப் பாற்கடல் கடைந்து அமுதளித்ததுபோலவே, தேவாமிசமான பாண்டவர்களைக் காத்தற்பொருட்டுப் போர்க்கடலைக் கடைந்து வெற்றியளிக்குங் கருணாநிதி யென்பார்,இங்கு அத்தன்மையைக் கூறினார். முன்பு கடல்கடைந்தமுதளித்தவனும், இப்பொழுதுகிருஷ்ணாவதாரஞ் செய்தவனும் ஒருதிருமாலே யாதலால் அத்தன்மை கண்ணன்மேல் ஏற்றிக் கூறப்பட்டது . கடலே என்ற ஏகாரம் - உயர்வு சிறப்பு. குடைதல்என்பது - நீரில்விளையாடுதலையுங் குறிக்குமாதலின், ஒருதொடராய் நின்ற அடுத்தகவியிற் சேனையைக் கடலென்பதற்கு ஏற்ப, அதனிடையே செல்லுதலை 'குடைந்து'என்றா ரென்னலுமாம்: அது, இங்கு, உல்லாசமாக ஊக்கத்தோடு செல்லுதலைவிளக்கும். கைவர - ஒழுங்காய்வரஎனினும், படைவகுப்பில்வர எனினுமாம். (400) 4.-திட்டத்துய்மன் பாண்டவர்சேனையை அணிவகுத்தல். சோனையம்புயலிற்கணைதொடும்பதாதிதுரகதந்துரகதத்தடந்தேர் யானையென்றுரைக்குநால்வகையுறுப்புமிராசமண்டலமுகமாகத் தானையங்கடலைமிடலுறவகுத்ததுத்தான்முதற்பேரணியாகச் சேனையின்பதியாமைத்துனனின்றான்றேவரும்யாவரும்வியப்ப. |
(இ -ள்.) சேனையின் பதி ஆம்- (பாண்டவ) சேனைக்குத் தலைவனான, மைத்துனன் - (பாண்டவர்களின்) மைத்துனனாகிய திருஷ்டத்யும்நன்,- சோனை- விடாப்பெருமழை பொழிகிற, அம் - அழகிய, புயலின் - மேகம்போல, கணை தொடும் - அம்புகளை மிகுதியாகப் பிரயோகிக்கிற, பதாதி - காலாள்களும், துரகதம்- குதிரைகளும், துரகதம் தட தேர் - குதிரைகள் பூண்ட பெரிய தேர்களும், யானை- யானைகளும், என்று உரைக்கும் - என்று சொல்லப்படுகிற, நால் வகை - சதுரங்கங்கள், உறுப்பு உம்- ஏற்ற அவயவங்களும், நால் வகை - சதுரங்கங்கள், உறுப்புஉம் - ஏற்ற அவயவங்களும், இராச மண்டலம் - அரசர்கள் கூட்டம், முகம் ஆக - முகமுமாக (அமையும்படி), தானை அம் கடலை - (தனது) அழகிய |