சேனாசமுத்திரத்தை, மிடல்உற - வலிமைமிக, தேவர்உம் யாவர் உம் வியப்ப. (வானத்தில் நின்ற போர்காணுந்) தேவர்களும்மற்றும் எல்லோரும் (கண்டு) அதிசயிக்கும்படி, வகுத்து - வியூகம்வகுத்து,- தான்-, முதல் பேர் அணி ஆக - அச்சேனையின் முகத்திற்கு ஒரு பெரிய அலங்காரமாக, நின்றான் - முன்நின்றான்; (எ-று.) தானைக்கடல் - கடல்போல மிகப்பரந்த சேனையென்க; அணியணியாக வருதல்பற்றியும், அச்சந்தருதல் பற்றியும், சேனைக்குக் கடலுவமை ஏற்கும். சேனைகளை அணிவகுக்கிற கருத்து, கண்டபடிதனித்தனி பிரிந்துபரவியிருத்தலினும் ஒருவடிவமையத்திரண்டு நிற்கையில் வெல்லுதற்கரிதாய்ப் பகைவரை எளிதிலழிக்கு மென்ப தாதலால், 'மிடலுறவகுத்து' என்றார். அரசர்களை முகமாகவும், நால்வகைச்சேனைகளை மற்றை அவயவங்களாகவும் அமைத்து அணி வகுத்தன னென்க. மைத்துன்ன் - இங்கே, மனைவியினுடன்பிறந்தவன். (401) 5.- மூன்றுகவிகள் - குளகம்: துரோணன் கௌரவசேனையை அணிவகுத்தலைக் கூறும். பாப்புவெம்பதாகைப்பார்த்திவன்பணியாற்பத்திரண்டியோச னைப்பரப்பிற், றீப்புறஞ்சூழநடுவணிற்பதுபோற்செயத்திரதனை யிடைநிறுவிக், கோப்புறப்பரிதேர்குஞ்சரம்பதாதிகூறுநூன்முறை யணிநிறுத்திக், காப்புறத்திசைகளெட்டினுநெருங்கக்காவலர்யாரையுநிறுத்தி. |
(இ-ள்.) பாம்பு - பாம்பின்வடிவமெழுதிய, வெம் - பயங்கரமான, பதாகை - கொடியையுடைய, பார்த்திவன் - துரியோதனராசனது, பணியால் - கட்டளையின் படி,-பத்து இரண்டு யோசனை பரப்பில் - இருபத யோசனை விசாலமுள்ள இடத்திலே,தீ புறம் சூழ நடுவண் நிற்பது போல் - நெருப்புப் புறத்திற் சூழ்ந்துநிற்க அதன்நடுவில் நிற்பதுபோல, செயத்திரதனை இடை நிறுவி - சயத்திரதனை (க்கொடிய பெரியசேனையின்) மத்தியிலே நிற்கச்செய்து,- கோப்பு உற- இடைவிடாமல் ஒன்றோடொன்று தொடர்ச்சியாக அமையும் படி, பரி தேர் குஞ்சரம் பதாதி - குதிரை தேர் யானை காலாள் என்ற வகைச்சேனைகளையும், கூறும் நூல் முறை - (படைவகுப்பைக்) கூறுகிற சாஸ்திரங்களின் முறைமைப்படி, அணி நிறுத்தி - ஒழுங்கு படச் சுற்றிலும் நிற்கச் செய்து,- காப்புஉற - (அவனுக்குக்) காவலாக அமையும்படி, திசைகள் எட்டின்உம் - எட்டுத்திக்குக்களிலும், காவலர் யாரைஉம்- காக்குந் திறமமைந்தவர்களான அரசர்கள் பலரையும், நெருங்க நிறுத்தி - இடைவிடாது நிற்கும்படி வைத்து,- ( எ -று.)- இப்பாட்டிலும், அடுத்த இரண்டு பாடல்களிலுமுள்ள 'நிறுத்தி' என்ற சொற்களெல்லாம். 7- ஆம் பாட்டிலுள்ள 'நின்றனன்' என்றதனைக் கொண்டு முடியும்; அப்பாட்டிலுள்ள 'துரோணன்' என்பதேஇவற்றிற்கெல்லாம் எழுவாய். பதின்மூன்றாம்போர்நா ளிரவிலே கடோற்கசனால் அருச்சுனனது சபதத்தை யறிந்த துரியோதனன், துரோணனை நோக்கி 'நாளைக்குச் சைந்தவனைப் பாதுகாத்து அருச்சுனனை அனலிற் குளிப் |