பிக்கவேண்டும்' என்றுமிகவும் பிரார்த்தித்தன னாதலால், இங்கே 'பார்த்திவன்பணியால்' என்றார். துரியோதனன் வேண்டிக்கொண்டதற்குத் துரோணன் ஆமளவுங்காப்பன் என்று வாக்குத்தத்தஞ்செய்துள்ளா னாதலால், மிக்ககாப்பு அமையும்படி அணிவகுக்கின்றன னென்க. அபிமனைக் கொன்ற சயத்திரதனை அருச்சுனன் சபதப்படி கொல்லவொண்ணாவண்ணம் மாலைப்பொழுதளவும் பாதுகாப்பதுவே துரியோதனாதியரது முயற்சியாதலால், இங்ஙனம் துரோணன் அவனை இடைநிறுத்திச் சுற்றிலும் வெகுதூரமளவும் சேனைகளையும் அரசர்களையும் நிறுத்தி அணிவகுப்பானாயினான். இரண்டாம்அடியில், சயத்திரதன் கொடியசேனைசூழ இடைநிற்றற்கு நெருப்புச்சூழ இடைநிற்றலை உவமைகூறியது, உவமையணி. பாணாசுரன் முதலிய சிலர்க்கு நெருப்புக்கோட்டையிருந்தது கருதி, சயத்திரதனுக்குப் பாதுகாவலாகச் சூழ்ந்த சேனைக்குத் தீயரண் உவமை கூறப்பட்ட தென்க. (402) 6. | தூசியின்முதனாள்வஞ்சினமொழிந்ததுன்மருடணன்றனைநிறுத்தி யூசியுநுழையாவண்ணம்விற்பதாதிவயவரையுரனுறநிறுத்தி வாசியிலிபத்திற்றேரிலேண்பட்டமன்னரையிருகையுநிறுத்திப் பேசியகன்னன்சகுனிசல்லியரைப்பேரணியாகவேநிறுத்தி. |
(இ -ள்.) முதல் நாள் - முந்தினநாளில், வஞ்சினம் மொழிந்த - (மறுநாள் மாலைப்பொழுதளவும் சயத்திரதனைத் தான் காப்பதாகச்) சபதஞ் சொன்ன, துன்மருடணன் தனை - துர்மர்ஷண னென்ற அரசனை, தூசியில் - முன்னணிச்சேனையிலே, நிறுத்தி- நிற்க வைத்து,-ஊசிஉம் நுழையா வண்ணம் - சிறிய ஊசியும் இடையில் நுழையவொண்ணாதபடி [மிக அடர்த்தியாக], வில் பதாதி வயவரை- வில்லில்வல்ல காலாள்வீரர்களை, உரன் உற - வலிமைபொருந்த நிறுத்தி- (அவனுக்கு உதவியாக அவனுடன்) நிற்கச்செய்து,- வாசியில் - குதிரைகளிலும், இபத்தில் - யானைகளிலும், தேரில் - தேர்களிலும் (ஏறியுள்ள), ஏண் பட்ட மன்னரை- வலிமைபொருந்திய அரசர்களை, இரு கைஉம் நிறுத்தி - இரண்டு பக்கங்களிலும்நிற்கச்செய்து,- பேசிய கன்னன் - (சயத்திரதனைத் தான் பாதுகாப்பதாகப்)பிரதிஜ்ஞைகூறின கர்ணனையும், சகுனி சல்லியரை - சகுனியையும் சல்லியனையும்,பேர் அணி ஆகஏ நிறுத்தி - பெரிய நடுச்சேனையிற் பொருந்தும்படி நிறுத்தி,-(எ-று.)-"சகடதுண்டத்து நின்றனன் துரோணன்" என வருங் கவியோடு தொடர்ந்துமுடியும். தூசி - முந்துற்றுப்பொருபடை. அருச்சுனன்செய்த சபதத்தைக் கடோற்கசனால் அறிந்து துரியோதனன் துரோணன்முதலானோரை நோக்கி வேண்டியபொழுது, துர்மர்ஷணன் அங்ஙனமே தான்காப்பதாக உறுதிமொழி கூறியதனை, கீழ்ச்சருக்கத்திற் காண்க. அப்பொழுது கர்ணன்முதலியோர் தாம் காப்பதாகச் சபதஞ்செய்தமை பற்றியும் 'பேசியகன்னன்சகுனிசல்லியரை' என்றது. ஊசியும், உம்மை - இழிவுசிறப்பு. எண்பட்டமன்னரை யென்றும் படிக்கலாம். எண்பட்ட - மதிப்புப் பெற்ற. (403) |