7. | அணிகளைந்தைந்தாலைவகைவியூகமாகியசேனையின்சிரத்து, மணிமுடிபுனைந்துவைத்தெனவலங்கல் வலம்புரிமார் பனைநிறுத்திப், பணிவுறுமவுணர்பதாகினிவகுத்தபார்க்கவனிவனெனப்பயில் போர்த், துணிவுடன்பஃறோர்சூழ்வரச்சகடதுண்டத்துநின்றனன்று ரோணன். |
(இ-ள்.) அணிகள் ஐந்து ஐந்தால் - தனித்தனி ஐந்துஐந்து பகுப்பாகப்பிரிக்கப்பட்ட சேனைத்தொகுதிகளால், ஐவகை வியூகம் ஆகிய- ஐந்துவகை வியூகமாக வகுக்கப்பட்ட. சேனையின் - சேனையினுடைய, சிரத்து - முடியில், மணி முடி புனைந்து வைத்து என - இரத்தினகிரீடத்தைத் தரித்து வைத்தாற்போல, வலம்புரி அலங்கல் மார்பனை நிறுத்தி - நஞ்சாவட்டைப்பூமாலையைத் தரித்த மார்பையுடையனான துரியோதனனை நிற்கச்செய்து,- பணிவு உறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என - (தன்னை) வணங்குதல்பொருந்திய அசுரர்களுடைய சேனையை அணிவகுத்த சுக்கிராசாரியனே இவனென்று (ஒப்புமையால் தன்னைக்) கூறும்படி,- பயில் போர் துணிவுடன் - இடைவிடாமற் போர்செய்யும் உறுதியுடனே, பல் தேர்சூழ்வர - பலதேர்கள் (தன்னைச்) சூழ்ந்துவர,- துரோணன்-, சகட துண்டத்து - சகடவியூகத்தின் முகத்திலே, நின்றனன் - (தான்) நின்றான் - (தான்) நின்றான்; (எ-று.) சதுரங்கங்கள்கூடின தனது பெருஞ்சேனைத்தொகுதியைத் தனித்தனிஐந்தாகப்பிரித்து, அவற்றை ஐந்துவியூகமாக அமைத்து, அவற்றிற்கெல்லாம் ஒருமகுடம்வைத்தாற்போல அலங்காரமாயமையும்படி துரியோதனனைத் தலைமையாகநிறுத்தித் தான் அவ்வைந்து வியூகங்களுட் பிரதானமானதும் மற்றை நான்கையுந் தனக்குள்ளேகொண்ட மகாவியூகமான சகடவியூகத்தின் முன்னிடத்திலே நின்றனனென்பதாம். ஐந்துவியூகம் - சகடம், பதுமம், கர்ப்பம், சூசீ, கூடம் என்பன. அசுராம்சமான கௌரவசேனையைத் தேவாம்சமான பாண்டவரோடு பொருதற்கு அணிவகுத்த துரோணாசாரியனுக்கு அசுரகுரு ஏற்ற உவமையாவன். சகடவியூகம் - நால்வகைச் சேனைகளையும் வண்டிபோல வடிவம் அமையும்படி ஒழுங்குபட நிறுத்துதல், பதாகினி என்பது - கொடிகளையுடையதெனக் காரணப் பொருள்படும்; பதாகா - த்வஜம். பார்க்கவன் - ப்ருகு என்னும் முனிவனது சந்ததியிற் பிறந்தவன்; தத்திதாந்தநாமம். 'பஃறேர் சூழ்வர' என்றது - பலதேர்வீரர் தன்னைச்சுற்றி வந்து நிற்க என்றவாறு. பி -ம்: வியூகமாக்கியச்சேனையின். (404) 8.- துரோணன்படைவகுத்ததன் சிறப்பு. மந்தணமிருந்துகங்குலின்முதனாண்மன்னனோடியம்பியவகையே, யந்தணனணிந்தவிரகினைவிமானத்தமரருமதிசயித்துரைத்தார், சந்தணிகடகவாகுநீள்சிகரச்சயத்திரதனையொருபகலிற், கொந்தழலுரோடத்தனஞ்சயன்பொருதுகோறலோவரிதெனக் குறித்தே. |
(இ-ள்.) முதல் நாள் கங்குலின் - முந்தினநாளிரவில், மந்தணம் இருந்து - ஆலோசனைச்சபையிலே யிருந்துகொண்டு, மன்னனோடு இயம்பியவகை ஏ - துரியோதனனுடன் சொன்னபடியே, |