அந்தணன் - பிராமணனான துரோணன், அணிந்த - அணிவகுத்த, விரகினை - தந்திரத்தை, (கண்டு),- விமானத்து அமரர்உம்- (வானத்தில்) விமானத்தின்மீது இருந்துகொண்டு போர்காண்கிற தேவர்களும், 'சந்து அணி - சந்தனக்குழம்பைப் பூசியவையும், கடகம் - கடகமென்னும் வளையை யணிந்தவையும், நீள் சிகரம் - உயர்ந்த மலையுச்சி போன்றவையுமான, வாகு - தோள்களையுடைய, சயத்திரதனை-, கொந்து அழல் உரோடம் தனஞ்சயன் - பற்றியெரிகிற தீத்திரள் போன்ற பெருங்கோபத்தையுடைய அருச்சுனன், பொருது - போர் செய்து, ஒரு பகலில் - இன்றை ஒருபகற்பொழுதினுள், கோறல்ஓ- கொல்லுதலோ, அரிது - அருமையானது', என குறித்து - என்று எண்ணி, - அதிசயித்து உரைத்தார் - (துரோணண் படைவகுத்த திறத்தைப்பற்றி) ஆச்சரியப்பட்டுக் கொண்டாடிப் பேசினார்கள்; மந்தணம் = மந்த்ரம்: ஆலோசனையைக் குறிக்கிற இச்சொல் - இலக்கணையால், அதுசெய்தற்கு உரிய இடத்துக்கு வந்தது. பகைவர் படைக்கலங்களால் ஊறடையாத திண்மையும் பருமையும் உயர்வும் பற்றி, 'வாகுநீள்சிகரம்' எனப்பட்டது. கோறலோ, ஓகாரம்- தெரிநிலை. (405) 9.- அருச்சுனன் போர்தொடங்குதல். செய்த்தலைக்கயலும்வாளையும்பிணங்குஞ்செழும்புனற்சிந்து நாட்டரசைக், கைத்தலத்தடங்கும்பொருளெனக்காத்துக்காவலர்நின்ற பேரணிகண், டுத்தமோசாவுமுதாமனுமுதலோரோரிருபுறத்தினுஞ்சூழ, வித்தகவலவன்முன்செலத்தடந்தேர்விசயனவ்வினைஞர் மேனடந்தான். |
(இ -ள்.) செய்த்தலை- கழனிகளிலே, கயல் உம் - கயல்மீன்களும், வாளைஉம்- வாளைமீன்களும், பிணங்கும்- (ஒன்றோடொன்று) மாறு பட்டுப் பொருகிற, செழும்புனல் - மிக்க நீர்வளப்பத்தையுடைய, சிந்து நாடு - சிந்துதேசத்தின், அரசை -இராசனான சயத்திரதனை, கைத்தலத்து அடங்கும் பொருள் என - கையிலடங்கியபொருளைப் (பாதுகாத்தல்) போல, காவலர் - காக்குந்திறமமைந்தவர்களானஅரசர்கள், காத்து நின்ற - பாதுகாத்து நின்ற, பேர் அணி - பெரிய(எதிர்ப்பக்கத்துப்) படைவகுப்பை, கண்டு - பார்த்து,- தட தேர் விசயன் -பெரியதேரையுடைய அருச்சுனன், உத்தமோசா உம்உதா மன்உம் முதலோர்-உத்தமௌஜஸ் என்பவனும் யுதாமந்யு என்பவனும் முதலான வீரர்கள், ஒர் இருபுறத்தின்உம் சூழ - (தனது) இரண்டுபக்கங்களிலும் அடுத்துவரவும்,- வித்தகம்வலவன் - திறமையுள்ள சாரதியான கண்ணபிரான், முன் செல - (தனது தேரின்)முன்னிடத்திற் பொருந்தவும், அ வினைஞர்மேல் நடந்தான் - எதிர்ப்பக்கத்துப்போர்வீரர் மேற் (போருக்குச்) சென்றான் ; ( எ-று.) சிறிய கயல்மீன்கள் தங்குதற்கு உரிய கழனிகளிலும் சர்ப் பெருக்குமிகுதியாற்பெரியவாளைமீன்கள் வந்துபாய்கின்றனவென்ற தன்மையும், சிறுமீன்களைப் பெருமீன்கள் உணவாகக்கொள்ளுதல் இயல்பாயினும் அந்நாட்டுக்கழனியில் நீர்வளத்தாற்கொழுத்துள்ள சிறியகயல்மீன்கள் வெளியிலிருந்துவருகிற பெரியவாளைமீன்களை |