யெதிர்க்கும் வலிமையுடையனவென்ற தன்மையுந்தோன்ற, சிந்து தேசத்தின் நீர்வளச்சிறப்பை வர்ணித்தன ரென்க. அருச்சுனன் ஸ்வதந்திரனாகத் தொழில்செய்யாமற் கிருஷ்ணனுக்குப் பரததந்திரனாகநின்று தொழில் செய்தல் தோன்ற 'வித்தகவலவன் முன்செல விசயன் வினைஞர்மேல் நடந்தான்' என்றார். கண்ணன் தான்யார் யார்மீது போர்க்குத் தேரைச் செலுத்துகின்றானோ, அவ்வவர் மீதுஅருச்சுனன் போர்செய்யத்தொடங்கினனென்றவாறு. தடந்தேர் - அக்கினிபகவானாற்கொடுக்கப்பட்ட பெருமையையுடையதேர். செய் என்பது - வயலாதலை, 'நன்செய்','புன்செய்' என்ற வழக்கிலுங் காண்க; இது, பன்றிநாட்டில் வழங்குந் திசைச்சொல் :தலை - ஏழனுருபு. கைக்குள் அடங்கிய சிறியபொருளை எவ்வளவு நன்றாகப்பாதுகாக்கக்கூடுமோ அவ்வளவு நன்றாகச் சயத்திரதனை அரசர் பாதுகாக்கமுயன்றன ரென்பது, 'கைத்தலத்தடங்கும் பொருளெனக்காத்து' என்றதனால்விளங்கும். உதாமன் - யுதாமந்யு: வடசொல்திரிபு ; இவன் துருபதனுக்குநெருங்கினஉறவினனான பாஞ்சாலராசன் ; இச்சொல் - போரிற் கோபமுடையானெனக்காரணப்பொருள்படும். பி -ம்: வலவன்செலுத்திட. (406) 10.- அருச்சுனனம்புக்குப் பகைவர்சேனை யொழிதல். போர்முகத்தடங்காமடங்கலேறனையான்விதம்படப்பொழிசிலீ முகங்கள், கார்முகத்தெழுந்ததாரைபோல்வழங்கக்ககார்முகத்தொ லியினாற்கலங்கித், தார்முகத்தரசன்றம்பியோடணிந்தாசாதுரங்கமு முடனுடைந்து, நீர்முகத்துடைந்தகுரம்பெனத்துரோணனின்று ழிச்சென்றடைந்தனவே. |
(இ -ள்.) போர் முகத்து - யுத்தகளத்திலே, அடங்கா மடங்கல் ஏறு அனையான் - அடங்குதலில்லாத சிறந்த ஆண்சிங்கத்தை யொத்தவனாகிய அருச்சுனன், விதம் பட - பலவகையாக, பொழி- சொரிந்த, சிலீமுகங்கள் - அம்புகள், கார் முகத்து எழுந்த தாரை போல் - மேகத்திடத்தினின்று வெளியெழுந்தநீர்த்தாரைகள் போல, வழங்க - மிகுதியாக மேற்செல்லுமளவில்,- தார் முகத்துஅரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கம்உம் - முன்னணிச்சேனையினிடத்தேபொருந்திய துரியோதனனுக்குத் தம்பியான துச்சாசனனுடன் அணிவகுப்பட்டுப் பொருந்தியிருந்த சதுரங்க சேனைகளெல்லாம், கார்முகத்து ஒலியினால் கலங்கி - (அருச்சுனனதுகாண்டீவமென்னும்) வில்லினது (நாணியின்) ஓசையாற் கலக்கமடைந்து, நீர்முகத்து உடைந்த குரம்பு என - நீர்ப்பெருக்குமிக்குப்பாய்தலாலுடைந்த கரைபோல, உடன் உடைந்து - ஒருசேரச் சிதைந்து, துரோணண் நின்ற உழி சென்று அடைந்தன - துரோணசாரியன் நின்றவிடத்திற்போய்ச் சேர்ந்தன ; ( எ -று.) கழனியின்நாற்புறவரம்பும் மிக்கநீர்ப்பெருக்கினால் அழியுமாறு போல, கௌரவரது நால்வகைச்சேனையும் அருச்சுனனதுபாணவர் ஷத்தினால் அழிந்தனவென்க. மடங்கலேறு - எத்துணைப்பெரிய விலங்குக்கும் பின்னிடாத ஆற்றலையுடைய மிருகராஜனான சிங்கம். 'அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கம்' என்றது - துரியோதனனுக்குத் தம்பியான துர்மர்ஷணனோடு பொருந்திநின்ற சேனை |