அளவுஉம் துயிலாமல் - பாதிராத்திரிவரையுலுந் தூக்கங்கொள்ளாமல், சூழ இருந்து- (அவனைச்) சுற்றிலு மிருந்துகொண்டு,- அபிமன் கையில் - அபிமனது கையிலே, திரு மைந்தன் - லக்ஷணகுமாரன், தான் -, ஆடு அமரில் - செய்த போரில், அகப்பட்ட - அகப்பட்டுக்கொண்ட, தாழ்வுக்கு - அவமானத்துக்கு, இரங்கி- பச்சாத்தாபப் பட்டு, உளம்நொந்தார் - மனம் வருந்தினார்கள்; (எ - று.) பால் - பகுதி, பாதி. நாள் - சிறப்பாய், இங்கே, இரவைக்குறித்தது. உயிர் நண்பு- உயிர்போன்ற நண்பு; உவமைத்தொகை. திருமைந்தன் - அழகிய மைந்தன்; இது -இலக்கணகுமாரனென்பதற்கு ஒருபரியாயநாமமாக நிற்கும். யாவரும் உளம் நொந்தார்- உள மென்னுஞ் சினைப்பெயராகிய அஃறிணையெழுவாய் யாவரும் என்னும்உயர்திணையெழுவாயின் பயனிலையாகிய நொந்தார் என்னும் உயர்திணைவினையைக் கொண்டு முடிதலால் வழுவாகி, தொடர்புண்டாயிருத்தல்பற்றிச் சார்த்திமுடித்தலால், வழுவமைதி யாயிற்று. 'நொந்தான்' என்ற பாடத்துக்கு, 'பாந்தட்டுவசன்' - எழுவாய். (36) 37.- துரியோதனன் துரோணனைநோக்கி, 'நாளைத்தருமனை யகப்படுத்தினால்தான் செற்றந்தீரும்' எனல் தனுவேதத்தின்கேள்விக்குஞ்சதுர்வேதத்தின்வேள்விக்குஞ் செனுவேயுன்னையல்லதினிச்செய்துமுடிக்கவல்லவர்யார் மனுவேயனையுதிட்டிரனைநாளைச்சமரில்மற்றிதற்கோ ரனுவேயென்னவகப்படுத்தினல்லாற்செற்றமறாதென்றான். |
( இ -ள்.) (அப்பொழுது துரியோதனன், துரோணனை நோக்கி), 'தனுவேதத்தின் கேள்விக்குஉம் - வில்வித்தையின் உபதேசத்துக்கும், சதுர் வேதத்தின் வேள்விக்குஉம்- நான்குவேதங்களிற் கூறியபடி செய்யும் யாகங்களுக்கும், செனுவே - இடமாகவுள்ளவனே! (இப்பொழுது நான் சொல்லுந் தொழிலை), உன்னை அல்லது இனி செய்து முடிக்க வல்லவர் யார் - உன்னை யல்லாமல் செய்து முடிக்க வல்லமையுடையவர் வேறு யாவர் உளர்? [எவருமில்லை]; (அத்தொழில் யாதெனில்,- ), நாளை சமரில் - நாளைக்கு நிகழும் போரில், இதற்கு ஓர் அனுஏ என்ன- இலக்கணனை அபிமன் அகப்படுத்திய) இவ்வவமானத்துக்கு ஓர் இனமாக, மனுஏ அனைய உதிட்டிரனை மனு சக்கரவர்த்தியையொத்த தருமபுத்திரனை, அகப்படுத்தின் அல்லால்- ( உயிரோடு) பிடித்திட்டாலல்லாமல், செற்றம் அறாது-(என்னுடைய) இப்பகைமை தணியாது,' என்றான்-; மனு - நல்லொழுக்கத்திலேயே தாம் ஒழுகுதலோடு எல்லோரையும் அங்ஙனம் நடப்பித்து எல்லாநற்குணங்களோடுங் கூடிப் பிரசித்திபெற்றவனாதலால், தருமனுக்கு உவமை கூறப்பட்டான். ஏ - உயர்வுசிறப்பு. சதுர்வேதம் - இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என்பன. செனு - ஜநுஷ் என்னும் வடசொல்லின் திரிபு; முதல் அகரம் எகரமானது, மோனைப்பொருத்ததிற்காக; ஏகாரம் மிக்கது - விளியுருபு. மற்று - அசை ; வினைமாற்றுமாம். அநு என்பது - |