வணக்கமாகச்சொல்லி வேண்டவே, துரோணன் கோபமாறி அவனுக்குச் செல்ல விடையளித்தனனென்க. அமர் வல்லார்க்கும் நின்னுடன் அமர்செய்தால் இயலாது எனச் சமத்காரப்பொருளொன்று 'அமரிழைத்தல் அமரருக்குமரிது' என்ற சொற்போக்கில் தோன்றுதல் காண்க. சிறுவன் யான் - இடவழுவமைதி. (414) 18.- பின்பு அருச்சுனன் பொருதுகொண்டு பாசவியூகஞ் சேர்தல். ஈசனால்வரங்கள்பெற்றவிந்திரன்றன்மதலைகாம் போசனாதியெண்ணின்மன்னர்பொருதழிந்துவெருவியுட் கூசநாலுபாலுநின்றநின்றசேனைகொன்றுபோய்ப் பாசநாமவணியினின்றவீரரோடுபற்றினான். |
(இ -ள்.) ஈசனால் வரங்கள் பெற்ற - சிவபிரானாற் பலவரங்கள் அருளப்பெற்ற,இந்திரன்தன் மதலை - தேவேந்திரனுக்குக் குமாரனான அருச்சனன், - காம்போசன்ஆதி - காம்போஜதேசத்தரசன் முதலான. எண் இல் மன்னர் - கணக்கில்லாதஅரசர்கள், பொருது அழிந்து - (தன்னுடனே) போர்செய்து வலிமைசிதைந்து,வெருவி - அஞ்சி, உள் கூச - மனம் திடுக்கிடும்படி, நாலுபால்உம் நின்ற நின்றசேனை கொன்று போய் - நான்குபக்கங்களிலும் மிகுதியாக நின்றுகொண்டிருந்தசேனைகளைக் கொன்றுகொண்டே சென்று,- பாசம் நாமம் அணியில் நின்ற வீரரோடுபற்றினான் - பாசமென்னும்பெயருடைய அணி வகுப்பிலுள்ள வீரர்களுடனேபோர்தொடர்ந்தான்; (எ -று,) இங்கே 'பாசநாமஅணி' என்றது- கீழ்ச்சொன்ன ஐவகைவியூகங்களுள் ஒன்றான சூசீவியூகத்தை; "பாச மூசித்துளையொடு கயிறே" என்ற திவாகரத்தின்படி ஊசித்துளையைக்குறிக்கிற 'பாசம்' என்ற சொல், இலக்கணையால், ஊசியைக்குறிக்க, அது, ஊசியின்பெயரான சூசீஎன்பதை உணர்த்துமென்க; சூசீவியூகமாவது - ஊசிபோல வடிவம் அமையச் சேனையை ஒரேவரிசையாய் ஒழுங்குபடநிறுத்துவது; இதற்கு, எறும்புவரிசை உவமைகூறப்படும். இங்கே 'காம்போசன்' என்றவன்பெயர், ஜலசந்தனென்று முதனூலால் தெரிகின்றது. இவனும் கிருதவர்மாவும் துரியோதனனும் கர்ணனும் சூசீவியூகத்திற் பிரதானமாக நின்றனரென்று அந்நூலிற் கூறப்பட்டுள்ளது. (415) 19,20.- இவ்விரண்டு கவிகளும் - குளகம்: அருச்சுனன் கர்ணனோடு போர்செய்யக் கருதியதைக் கண்ணனிடம்கூறல். முன்னர்முன்னர்வந்துவந்துமுனைகடோறுமுந்துறு மன்னர்தந்தம்வில்லும்வேலும்வாளும்வென்றிவாளியிற் சின்னபின்னமாகவெய்துசெல்லுமத்தனஞ்சயன் கன்னனின்றவுறுதிகண்டுகண்ணனோடுமுரைசெய்தான்.விலங்கிநம்மையமர்திளைக்கவிடதன்விற்சுதக்கண னலங்கல்வேலவந்திமன்னவன்புதல்வனாதியா வலங்கொள்வாகைவீரர்சேனைவளையநின்றகன்னனைக் கலங்குமாறுபொருதுபோகவேண்டுமென்றுகருதியே. |
|