ஒருங்கு கூடிவந்து, விசயன்மீது - அருச்சுனன்மேல், சுடு சரம் தொடுக்க - அழிக்கவல்ல அம்புகளைச் செலுத்த,- ( எ -று.)-"வயவரை *** கலக்கினான் என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும். 'ஒக்கும்' என்றது - அங்கீகாரவார்த்தை, உளவுகோல் - கசைக்கோல். இதுமுதற் பதின்மூன்று கவிகள் - அந்தாதித்தொடையமையப் பாடப்பட்டிருக்குமாறு காண்க; இது - பொருட்டொடர்நிலையிடையிலே வந்த சொற்றொடர்நிலை. (418) 22.- கர்ணனைச்சார்ந்த வீரர்களை அருச்சுனன் அழித்தல். சரந்தொடுத்தவயவரைச்சததினிற்றனித்தனி யுரங்குளிக்கவாகுவீழவுதரமூழ்கவொளிமுடிச் சிரங்களற்றுமறியவென்புசிந்தவாய்கடுளைபடக் கரந்துடிக்கவிருபதங்கடறியவேகலக்கினான். |
(இ -ள்.) சரம் தொடுத்த - (இவ்வாறு தன்மீது) பாணங்களைப் பிரயோகித்த, வயவரை - வீரர்களை, - உரம்குளிக்க- (அவர்களுடைய) மார்பில் (அம்புகள்) மூழ்கவும், வாகு வீழ - தோள்கள் (துணிபட்டு) விழவும் உதரம் மூழ்க - வயிற்றில் (அம்புகள்) அழுந்தவும், ஒளி முடி சிரங்கள் அற்று மறிய - பிரகாசமுள்ள கிரீடத்தைத் தரித்த தலைகள் துணிபட்டு விழவும், என்பு சிந்த - எலும்புகள் வெளிச்சிதறவும், வாய்கள் துளை பட - வாய்கள் துளைப்படவும், கரம் துடிக்க - கைகள் (துணிபட்டுத்) துடிக்கவும், இரு பதங்கள் தறிய- இரண்டுகால்களும் துணிபடவும், சரத்தினில் - (தனது) அம்புகளினால், (அருச்சுனன்), தனி தனி - தனியே தனியே, கலக்கினான்- கலங்கச்செய்தான்; ( எ -று.)- வயவரைக் கலக்கினான் என இயையும்.' உரம்குளிக்க உதரம் மூழ்க'- மார்பும் வயிறும் அம்புகுளிக்கப் பெற என்றுமாம். (419) 23.- அருச்சுனனது போர்த்திறத்தைத் தேவருங் கொண்டாடுதல். கலக்கமுற்றுவில்லிழந்துகவனமாவிழந்துமே லிலக்கமற்றகளிறிழந்துகொடிகொடேரிழந்துபோ யுலக்கவிட்டளக்கர்வாயுலம்பவோடுகலமெனத் துலக்கமிக்குவருதல்கண்டுசுரருநின்றுதுதிசெய்தார். |
(இ-ள்.) கலக்கம் உற்று - (இவ்வாறு) கலக்கத்தையடைந்தும், வில் இழந்து - விற்களை யிழந்தும், கவனம் மா இழந்து - நடைவல்ல குதிரைகளையிழந்தும், மேல்- மற்றும், இலக்கம் அற்ற களிறுஇழந்து - எண்ணில்லாத யானைகளை யிழந்தும்,கொடி கொள் தேர் இழந்து - துவசத்தைக் கொண்ட தேர்களை யிழந்தும், போய்-தோற்றுப் போய், உலக்க - அழியும்படி, இட்டு- (எதிர்ப்பக்கத்து வீரர்களை யெல்லாம்) செய்திட்டு,- அளர்க்கர்வாய் உலம்ப ஓடு கலம் என - கடலிலே ஒலியுண்டாக விரைந்துசெல்கிறமரக்கலம்போல, துலக்கம் மிக்கு வருதல் - விளக்கம்மிகுந்து (அருச்சுனன் தன்தேரின்மீது) விரைந்துவருதலை, கண்டு - பார்த்து,சுரர்உம் - தேவர்களும், நின்று - திகைத்துநின்று, துதி செய்தார் - தோத்திரஞ்செய்தார்கள்; |