பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்255

இடிக்க - இடியோசயைச்செய்ய,- மடங்கல் போல் - யுகாந்த காலத்து
மேகங்கள்போல, இரண்டுவில்உம்- (தமது) விற்களிரண்டையும், மண்டலம்படுத்தினார்
- நன்றாகவளைத்தார்கள்; (எ -று.)

     மேகம்  மின்னல்பரப்பி இடமுழக்கி வானவில்வளையப் பெறுதல்போல,
இவர்அம்பு பரப்புதலுற்று நாணொலிமுழக்கி வில் வளைவு செய்தன ரென்க.
நான்காமடியில் வந்த உவமையணிக்கு, மூன்றாமடியில் வந்த உருவகவணி
அங்கமாதல் காண்க 'மடங்கல்' என்று கற்பாந்தகாலத்துக்குப் பெயருள்ளதனால்,
அது-காலவாகு பெயராய், அக்காலத்து அளவிலாமழைபொழிந்து
உலகையழிக்கலுறும் மேகத்தைக் குறித்தது. மடங்கல் - இடிஎன்பாருமுளர். வலிமை
அழகு வில்திறம் என்பவற்றில் அருச்சுனனுக்குக் கர்ணனும், கர்ணனுக்கு
அருச்சுனனும் ஒருகால் ஒப்பாகக்கூடுமேயன்றிப் பிறர் இவர்க்கு ஒப்பாகாரென்பது
'உவமைத்தம்மில்வேறிலார்' என்றதன் கருத்து. விடங்கொள்வாளி -
பகைவருயிரைக்கவரதக்க மிக்ககொடுமைவாய்ந்த அம்புஎன்றபடி; நுனியில்
நஞ்சுதீற்றிய அம்புமாம்.                                     (422)  

26.மண்டலம்படுத்தவில்லின்வலிகொள்கூரவாளியால்
விண்டலம்புதைந்துதங்கண்மெய்படாமல்விலகினார்
குண்டலங்கள்வெயிலுமூரல்குளிர்நிலாவும்வீசவே
மண்டலம்புகாமனேர்வயங்குவாண்முகத்தினார்.

     (இ-ள்.) குண்டலங்கள் - (தம்தமது) குண்டலமென்னுங் காதணிகள்,
வெயில்உம்- சூரியகாந்திபோன்ற ஒளியையும், மூரல் - புன்சிரிப்பு, குளிர் நிலாஉம்
குளிர்ந்தசந்திதரகாந்திபோன்ற ஒளியையும், வீச - மிகுதியாக வெளிப்படுத்த, -
மண்டல் அம்பு காமன் நேர் வயங்கு - பெரும்போர்செய்கிற (புஷ்ப)
பாணங்களையுடைய மன்மதனுக்கு ஒப்பாய் விளங்குகிற, வாள் முகத்தினார் -
பிரகாசமுள்ள முகத்தையுடையவர்களான அருச்சுனனும் கர்ணனும்,- மண்டலம்
படுத்த வில்லின் - (தாம்தாம்) நன்றாகவளைத்துப்பிடித்த விற்களினாலெய்த,
வலிகொள் கூர வாளியால் - வலிமையைக்கொண்ட கூர்மையையுடைய
அம்புகளினால், விண் தலம் புதைந்து - ஆகாயத்தின் இடம் மறைய, தங்கள்
மெய்படாமல் - தங்களுடம்பு ஊறுபடாத படி, விலகினார் - எதிர் தடுத்தார்கள் ;
(எ- று.)

     இது, தம்மேல் விரைந்துவரும் அம்புகளைக் குறிதவறாமல் எதிரம்புகோத்து
மறுத்திடுங் திறங் கூறியது. இருவரும் அம்புக்கு இலக்காகாதபடி நின்றன
ரென்பதாம்.மண் தலம் புகாமல் நேர் வயங்கு வாள் முகத்தினார் என்று பிரித்து -
தரையைநோக்காமல் [தலை குனியாமல்] எதிராகநிமிர்ந்து விளங்குகிற ஒள்ளிய
முகத்தையுடைவ ரென்று உரைத்தலும் ஒன்று. மூன்றாமடியில், வெயில் நிலா என்று
மாறுபட்ட சொற்கள்வந்தது, முரண்தொடை. புதைந்து - எச்சத்திரிபு. பி - ம்:
வண்டலம்புகமலநேர்,                                            (423)

27.முகத்தினின்றகன்னனோடு முடிமகீபரோடுநின்
றிகற்செய்கின்றகடிகையோரிரண்டுசென்றதென்றுள