பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்257

     (இ -ள்.) ஈறு இலாத வீரன் - அழியாவரம்பெற்ற வீரனான அந்தச் சுதாயு.
வந்த எதிர்த்த காலை - முன்வந்து எதிர்த்தபொழுது, - வீரரில் மாறு இலாத
விசயன்- வீரர்களில் எதிரில்லாதவனான [மகாவீரனான] அருச்சுனன், விட்ட -
பிரயோகித்த,மறை கொள் வாளி யாவைஉம் - மந்திரபலத்தைக்கொண்ட
அம்புகளெல்லாம்,- சேறுஇலாத செறுவில் வித்து செந்நெல் என்ன - சேறு இல்லாத
கழனியிலே விதைத்தசெந்நெல்விதைகள்போல, அவன் உடல் பேறு இலாமல் -
அவனுடம்பினுள்ளேசென்று பாயப்பெறுதலில்லாமல், முனை உற பிளந்து-
(அவனுடம்பிற்பட்டமாத்திரத்தில்) நுனி முழுவதும் ஒடிபட்டு, கீழ் விழுந்த -
கீழே விழுந்திட்டன;

     வரம்பலம்பெற்ற சுதாயுவின்மேல் அருச்சுனன் எய்த பாணங்களெல்லாம்,
அவனுடம்பைப் பிளந்து உட்சென்று ஊறுபடுத்தமாட்டாமல், அவனது வலிய
உடம்பிற் பட்டமாத்திரத்தால் தாம் கூர் நுனிமழுங்கிக் கீழ்விழுந்திட்டன என்பதாம்.
மிக்கநீர்வளமுள்ள இடத்திலேயே விளையுந்தன்மையதான செந்நெலென்னும்
ஒருவகை நெற்பயிர்விதை ஈரமில்லாதகழனியில் விதைக்கப்பட்டால் அங்குச்
சிறிதும்முளைக்கமாட்டாமல் வீண்படுதலை, மற்றையோருடம்பில் ஊன்றிப்
புண்படுத்தும்அருச்சுனனம்பு சுதாயுவினுடம்பிற்சிறிதும் பிரவேசிக்கமாட்டாது
வீண்பட்டதற்குஉவமைகூறினார். வித்த என்று பாடங்கொண்டு, அதற்கு
விதைத்தஎனப் பெயரெச்சப்பொருள் உரைத்தாருமுளர்.               (426)

30.- அருச்சுனன் சுதாயுவின்வில்லை அழித்தல்.

விழுந்தவாளிகண்டுபின்னும்விசயன்மூரிவிற்குனித்
தழுந்தவாளியொன்றுபத்துநூறுவன்பொடடைசினான்
எழுந்தவாளிவாளியால்விலக்கவேவியாசுகங்
கழுந்ததாகவவனெடுத்தகார்முகங்கலக்கினான்.

     (இ-ள்.) விழுந்த - (இங்ஙனம் பயனின்றிக்) கீழ்விழுந்திட்ட, வாளி - (தனது)
அம்புகளை, கண்டு -பார்த்து, பின்னும் - மீண்டும், விசயன் - அருச்சுனன், மூரி
வில்குனித்து - வலிமையையுடைய வில்லை வளைத்து, அழுந்த - (அவனுடம்பிற்)
பதியும்படி, வாளி ஒன்று பத்து நூறு - ஆயிரக்கணக்கான அம்புகளை , வன்பொடு
அடைசினான் - வலிமையோடு செலுத்தினான் ; எழுந்த -(இங்ஙனம் தன்மேல்
உக்கிரமாக) வந்த, வாளி அம்புகளை, வாளியால் விலக்க -(சுதாயுதான் எய்யும்)
எதிரம்புகளால் தடுக்க. (பின்புஅருச்சுனன்), ஆசுகம் ஏவி- பாணங்களைப்
பிரயோகித்து, கழுந்து அது ஆக அவன் எடுத்த கார்முகம் கலக்கினான் -
வைரமுள்ளதாக அந்தச்சுதாயு கையிலேந்தியுள்ளவில்லை யழித்திட்டான்;(எ-று.)
                                                            (427)

31.- சுதாயுவின் கதையைக் கண்ணன் மார்பில் ஏற்றல்.

முகங்கலங்கமெய்கலங்கமுடிகலங்கமூரிமார்
பகங்கலங்கமற்றொர்தண்டருச்சுனன்றன்மேல்விட