பின்பு என்னும் பொருள்தரும் வடமொழியிடைச்சொல்: அநுவாதம், அநுகமநம், அநுசுருதி முதலியவற்றிற் காண்க; இது - இங்கே, முன் நடந்ததை யொப்பப் பின் நடப்பது என்ற பொருளை உணர்த்தி, பழிக்குப்பழி வாங்குதலென்ற கருத்தை விளக்கும். ஏ- தேற்றம். செற்றம் - பகைமை நெடுங்காலம் நிகழ்வது: வைரம் ; செறு- பகுதி. 38.- இதுவும், மேற்கவியும் குளகம் - துரோணன்கூறும் உத்தரம். பெற்றோன்றனினுஞ்சதமடங்குவலியோன்வீமன்பின்னிற்கப் பொற்றோள்விசயன்முன்னிற்கப்பொரும்போர்முனையிற்போருதவி யற்றோர்போலவில்வலியாலறத்தோன்றன்னையகப்படுத்தன் மற்றோர்பிறப்பிற்றெரியாதிப்பிறப்பின்முடிக்கமாட்டேமால். |
(இ -ள்.) 'பெற்றோன்தனின்உம்- (தன்னைப்) பெற்றதந்தையான வாயுவினும், சதம் மடங்கு- நூறுபங்கு அதிகமான, வலியோன்- வலிமையுடையனான, வீமன்-, பின் நிற்க - பின்னே (பாதுகாத்து) நிற்கவும், பொன் தோள் விசயன்- அழகியதோள்களையுடைய அருச்சுனன், முன் நிற்க - முன்னே (பாதுகாத்து) நிற்கவும், போர் பொரும் முனையில் - போர்செய்யுமிடத்தில் [யுத்தகளத்தில்], அறத்தோன்தன்னை - தருமங்களை யுடையவனான யுதிட்டிரனை, போர் உதவி அற்றோர் போல - போரில் உதவிசெய்பவரையுடையரல்லாதவரை (அகப்படுத்துதல்) போல, வில் வலியால் அகப்படுத்தல்- வில்லின் வலிமையால் (உயிரோடுபற்றி) வசப்படுத்தலை, மற்று ஓர் பிறப்பில் தெரியாது - மற்றொருசன்மத்தில் (எம்மால் நிறைவேற்ற முடியுமோ முடியாதோ அது) தெரியாது: இ பிறப்பில்-, முடிக்க மாட்டோம்- நிறைவேற்ற வல்லமை யில்லோம்; (எ - று.) - ஆல்- ஈற்றசை; ஆதலாலெனினுமாம். வாயுவின் வலிமை பிரசித்தம். "பிதுச்சதகுணம் புத்ர:" என்றவாறு அவ்வாயுவினும் மிகப்பலமடங்கு வலியவன் வீமனென்க. (38) 39. | செவ்வாய்வைக்கும்வலம்புரிக்கைத்திருமால்செம்பொற்றேரூர வெவ்வாய்வாளிவில்விசயன்மெய்ம்மைத்தருமனணிநின்ற அவ்வாயிமைப்போதணுகாமற்காப்பார்சிலருண்டாமாகில் இவ்வாய்நாளையகப்படுத்திதரலாமென்றானெழின்மறையோன். |
(இ-ள்.) செவ் வாய் - சிவந்த திருவாய்மலரிலே, வைக்கும் - வைத்து ஊதப்படுகிற, வலம்புரி - (பாஞ்சசந்யமென்னும்) வலம்புரிச்சங்கை யேந்திய, கை - திருக்கையையுடைய, திருமால் - திருமகள் கொழுநனான கண்ணபிரான், செம் பொன் தேர் - சிவந்த பொன்னினாலாகிய தேரை, ஊர( பாகனாய்நின்ற) செலுத்த, வெவ் வாய் வாளி வில் விசயன் - கொடிய நுனியையுடைய அம்புகளையும் வில்லையுமுடைய அருச்சுனன், மெய்ம்மை தருமன் அணி நின்ற அ வாய்- சத்தியத்தையுடைய தருமபுத்திரன் அணிவகுப்பில் நின்ற அவ்விடத்தில், இமை போது- ஒரு மாத்திரைபொழுதாவது, அணுகாமல்- சமீபித்துவரவொட்டாதபடி, காப்பர்--(அவனைத்) தடுப்பவர், சிலர் -(யாராயினும்) சிலர், உண்டு ஆகில் - உள்ளாரானால்,- இ வாய்- |