பக்கம் எண் :

260பாரதம்துரோண பருவம்

பெறு தனஞ்சயன் - தனது உயிர் இறவாமற் பிழைக்கப்பெற்ற அருச்சுனன்,
கொண்டல் வண்ணனை போற்றி - காளமேகம் போன்ற திரு நிறமுடைய
கண்ணபிரானைத் துதித்து, 'எறி கொடுங் கதை - வீசியெறிந்த கொடிய கதாயுதம்,
நின்தன் மேனியில் - உனது உடம்பில், பட - பட்ட அளவிலே, எறிந்தவன் -
(அவ்வாயதத்தைப்) பிரயோகித்தவனான சுதாயு, நெடு வானில் சென்ற- (இறந்து)
பெரியதேவலோகத்திற்குப் போன, மாயம் ஒன்று - ஆச்சரியகரமான ஒருசெய்கை,
இருந்த ஆறு - உண்டான காரணத்தை, அடியனேன் தெளியும் ஆறு உரை -
உனது அடியவனாகிய யான் மனந் தெளியும்படி கூறியருள்வாய்,' என்றான்-;
( எ -று.)

     இதுமுதற் பதினைந்து கவிகள் - பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும், ஈற்றுச்சீர்
மாங்காய்சீரும், மற்றவை விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.
இவற்றில்இரண்டாஞ்சீர் கூவிளச் சீராகவே வரும்.                     (431)

35.- இதுவும் அடுத்த கவியும் ஒருதொடர் : சுதாயுசெய்தியைக்
கண்ணன் கூறல்.

பன்னவாதையென்றொருத்திதாய்தந்தையும்படுதிரைப்பரவைக்கு
மன்னவன்றரப்பெற்றனன்பலபடைமறையொடும்வலிகூரத்
துன்னுநாமமுஞ்சுதாயுமற்றொருவராற்றோற்றுயிரழிவில்லான்
முன்னிராயுதன்மிசையிவன்படையுறின்முடிவுறும்வரம்பெற்றான்.

     (இ-ள்.) பன்னவாதை என்ற ஒருத்தி - பன்னவாதையென்று பெயர்
சொல்லப்பட்ட ஒருத்தி, தாய்- (இவனுக்குத்) தாய் ; தந்தை உம் - (இவனது)
தகப்பனும், படு திரை பரவைக்கு மன் - மிக்க அலைகளுடைய கடலுக்குத்
தலைவனான வருணன்; பல படை மறையொடுஉம் - அநேகமான படைக்கலங்களை
அவற்றிற்குஉரிய மந்திரத்தோடு, வலி - (தேக) பலத்தையும், கூர - மிகுதியாக,
அவன் தர பெற்றனன் - அவ்வருணன்  கொடுக்கப் பெற்றான் (இவன்); துன்னு
நாமம்உம் - (இவனுக்குப்) பொருந்திய பெயரும், சுதாயு - சுதாயு என்பதாம்; மற்று
ஒருவரால் தோற்று உயிர் அழிவு இல்லான் - வேறுஎவராலும் தோல்வியடைதலும்
இறத்தலும் பெறாதவனான இவன்,- முன்-முன்பு, நிராயுதன்மிசை இவன் படைஉறின்
முடிவுஉறும் வரம்பெற்றான் - (கையில்) ஆயுதமில்லாதவன்மேல் தனதுஆயுதம்
எறியப்பட்டால் மாத்திரமே தான் இறக்கும்படி யான வரத்தைப் பெற்றுள்ளான்;
(எ-று.)

     சுதாயு - ச்ருதாயுத: என்ற வடசொல்லின்திரிபு என்னலாம்: இவன்பெயர்,
வியாசபாரத்தில் இங்ஙனே உள்ளது;  இச்சொல் - பிரசித்தமான படைக்கல
முடையான் என்று பொருள்படும். இவனது தந்தை, வருணன் : தாய், பர்ணாசா
என்னும் மகாநதி. ' இம் மகன் மரணமில்லாதவனாயிருக்கும்படி வரமளிக்க
வேண்டும்'என்று பர்ணாசைவருணனைவரங்கேட்க, அந்நீர்க்கடவுள் மனைவியை
நோக்கி 'பகைவரால் வெல்லுதற்கரியனாம்படி இவனுக்கு வரங்கொடுக்கிறேன்:
உலகத்திற்பிறந்தவரெவர்க்கும் எக்காலத்தும்மரணமில்லாதிருப்பது முறைமையன்று'
என்றுசொல்லி, திவ்யமான