பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்263

     (இ -ள்.) ஆயிரம்பதின்மடங்கு தேர் - பதினாயிரம் தேர்களும். அதன்
மும்மடங்கு இபம் - முப்பதினாயிரம் யானைகளும், ஆயிரம் சதம் அடல் வாசி -
நூறாயிரம் வலிய குதிரைகளும், அதனின் மும்மடங்கு காலாளுடன் - மூன்று
லக்ஷம்காலாள்வீரர்களும் ஆகிய சேனையொடு, அணி ஆக்கி - அணிவகுத்துக்
கொண்டு,ஆயிரம் புயத்து அருச்சனன் நிகர் என - ஆயிரந் தோள்களையுடைய
கார்த்தவீரியார்ச்சுனன் ஒப்பென்று சொல்லும்படியும், ஆழியால் துணிப்புண்ட
ஆயிரம்புயத்தவன் என - (கண்ணனது) சக்கராயுதத்தால் துணிக்கப்பட்ட
ஆயிரந்தோள்களையுடைய வாணாசுரன்போலவும், ஆடல் ஆயிரவாகு-
வெற்றியையுடைய ஸஹஸ்ரபாஹூ என்பவன், எதிர்த்தனன் - (வந்து
அருச்சுனனை)எதிர்த்தான்; ( எ -று.)

     ஆயிரவாகு - ஆயிரந்தோள்களையுடையவன்; பண்புத்தொகை யன்மொழி.
ஸஹஸ்ரபாஹூவுக்குக் கார்த்தவீரியார்ச்சுனனும், பாணாசுரனும்,
ஆயிரந்தோள்களுடைமையோடு கொடுமையிலும் திருமாலால் அழிக்கப்படுதலிலும்
உவமை யென அறிக. இவன் விஷ்ணுவின் அம்சபேதமான அருச்சுனனாற்
கண்ணபிரானிடம் பெற்றதொரு மந்திரத்தைக் கொண்டு தோளறுத்துத்
தொலைக்கப்படுதல் காண்க.

     அர்ஜூனன் என்ற வடசொல் - வெண்ணிறமுடையான் என்று பொருள்படும்.
இவன் - கிருதவீரிய மகாராஜனது புத்திர னாதலால், கார்த்தவீரியார்ஜூந
னெனப்படுவன். சந்திரவமிசத்திற் பிறந்த யயாதிமகாராசனது மூத்த குமாரனாகிய
யதுவினது குலத்தவனாகிற கிருதவீரியனது குமாரனான அருச்சுனனென்பவன்,
நாராயணாம்சமாய் அத்திரிகுமாரராய் விளங்குகிற தத்தாத்திரேய மகாமுனிவரை
ஆராதித்து அவருடைய அநுக்கிரகத்தினாலே ஆயிரந்தோள்களுடைமை,
போரில்வெற்றி, பூமியை முறைப்படிகாத்தல், பகைவர்களால் அவமானப்படாமை,
சகலலோகங்களுங் கொண்டாடும்படியான மகாபுருஷனால் மரணம் முதலிய
பலவரங்களைப்பெற்று, பல வேள்விகளையும் இயற்றி, மாகிஷ்மதி நகரத்திற்
பலகாலம் அரசாண்டு வந்தான்;  இவன் ஒரு காலத்தில் நருமதையாற்றிற்
சலக்ரீடைசெய்துகொண்டு மதுபானத்தால் மதித்திருக்கையில் திக்குவிசயஞ்
செய்துவருகிறஇராவணன் தன்னை எதிர்க்கக் கண்டு, அவனைத் தனது ஆற்றலால்
எளிதிற்கட்டித் தனது பட்டணத்திற் கொண்டுபோய்ச் சிறைச்சாலையில்வைத்து,
பின்புஅவனதுமூதாதையாகிய புலஸ்தியமகாமுனிவரது வேண்டுகோளினால்
அவனைச்சிறைவிடுத்து, அம்முனிவரருளால் 'ராவணஜித்' என்கிற பெரும்
பெயரைப்பெற்றவன். இவன் ஒருகாலத்திற் சேனையுடனே வனத்திற் சென்று
வேட்டையாடிவந்து பரசுராமனது தந்தையானஜமதக்கினி மகாமுனிவரது
ஆசிரமத்தை யடைந்து அவரநுமதியால் அங்கு விருந்துணடு மகிழ்ந்து மீளுகையில்,
அவரிடமிருந்தஒமதேனு அவர்க்குப் பல வளங்களையும் எளிதிற் சுரந்தளித்தலைக்
கண்டு அதனிடம் ஆசை  கொண்டு அப்பசுவை  அவரநுமதியில்லாமற்
பலாத்காரமாகக் கவர்ந்துபோக, இதனை அறிந்த பரசுராமன் பெருங்கோபங்
கொண்டுஆயுதங்களுடனே சென்று கார்த்தவீரியார்ச்சுன