பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்269

நடுவிலும், அவனுக்குத் துணையாக அஷ்டமகாநாகங்கள் கிழக்கு முதலிய
எட்டுத்திக்குக்களிலுமாகப் பூமியின்கீழிருந்து பூமியைத் தாங்குகின்றன வென்ப.
பி -ம்:
அதிர்தரவெழு.                                       (441)

45.-அத்தனைபேரோடும் அருச்சுனனொருவன் பொருதல்.

பரிதியால்வளைப்புண்டசெம்பரிதியிற்பற்குனன்றனுவாங்கித்
தெரிசரங்களோரொருவருக்காயிரஞ்சிரமுதலடுயீறா
நெரிதரும்படிதொடுத்துவெங்கொடிபரிநேமிதேர்பலகோடி
கரிகளுந்துணிபடப்படமலைந்தனன்கடிகையொன்றினின்மாதோ.

     (இ -ள்.) பரி தியால்வளைப்புண்ட - ஊர்கோளாற் சூழப்பட்ட, செம் பரி
தியின்- சிவந்த சூரியன்போல, (அரசர்பல பேராற் சூழப் பட்டு இடையில் நின்று),
பற்குனன் - அருச்சுனன், தனு வாங்கி - வில்லை வளைத்து, தெரிசரங்கள் -
ஆராய்ந்தெடுக்கப்பட்ட [சிறந்த] அம்புகளை, ஓர் ஒருவருக்கு ஆயிரம் -
ஒவ்வொருத்தருக்குஆயிரம் வீதமாக, சிரம் முதல் அடி ஈறு ஆ நெரிதரும்படி -
(அவர்களுடைய) தலைமுதல் கால் இறுதியாக எல்லாவுறுப்புகளுஞ் சிதையும்படி,
தொடுத்து - (அவர்கள்மேற்) பிரயோகித்து,- வெம் - பயங்கரமான, கொடி -
துவசங்களும், பரி - குதிரைகளும், நேமி தேர்ச்சக்கரங்களும், தேர் - தேர்களும்,
பலகோடி - அநேககோடிக்கணக்கான, கரிகள்உம் - யானைகளும், துணிபட பட -
மிகுதியாகத் துண்டுபடும்படி, கடிகை ஒன்றினில் - ஒருநாழிகைப்பொழுதிலே,
மலைந்தனன் - எதிர்த்துப்பொருதான்; ( எ -று.)

     மண்டலத்தாற் சூழப்பட்ட சூரியன்போல மிகப்பல அரசராற் சூழப்பட்ட
அருச்சனன் தான் ஒருவனாகவே அவ்வளவுபேரையும் எதிர்த்து வில்வளைத்து
ஒவ்வொருத்தருக்கு ஆயிரமாகப் பாணப் பிரயோகஞ்செய்து அவர்களுடைய
குதிரைதேர் யானைகளையும் சேனைகளையும் கொடி முதலிய
இராசசின்னங்களையும் தலைமுதலிய உறுப்புக்களையும் சின்னபின்னமாக
ஒருநாழிகைப்போதில் அழித்திட்டானென்க. வளைத்தவில்லுக்குப் பரிவேடம்
உவமையென்பாருமுளர். பி-ம் :நேமியர்தேர்கோடி.                (442)

46.-இரண்டுகவிகள் - அருச்சுனன்முன் பகைவர்களிரிந்தோடியமை
கூறும்.

போரில்வெவ்விடாய்தணிவுறக்களத்தினிற்புறங்கொடுத்தவர்சோரி
நீரின்மூழ்கியுங்கழுகிடுகாவணநீழலாறியுஞ்சென்றார்
தேரில்வாசியிற்களிற்றில்வந்தவர்களிற்சேவடிசிவப்பேற
யாரியார்குதித்தோடுதலொழிந்தவரெறிபடைவீழ்த்திட்டே.

     (இ-ள்.) களத்தினில் - அந்தப்போர்க்களத்திலே , புறங்கொடுத்தவர் -
முதுகுகொடுத்த வீரர்கள், போரில் வெவ் விடாய் தணிவுற - போரில்
(தங்கட்குஉண்டான) கொடியஇளைப்புத் தணிவடையும்படி, சோரி நீரில்
முழ்கிஉம் -இரத்தவெள்ளத்திலே முழுகியும், கழுகுஇடு காவணம் நீழல் 
ஆறிஉம் - (அங்குப்பிணந்தின்னவந்த) கழுகுகள் (தாம் வானத்திலே இடைவிடாது
பரவுதலால்) அமைத்தபந்தலின் நிழலிலே தாபந்தீர்ந்தும், சென்றார்-