பக்கம் எண் :

பதினோராம் போர்ச்சருக்கம்27

இவ்விடத்து [போர்க்களத்தில்], நாளை - நாளைக்கு, அகப்படுத்தி தரல்ஆம்-
(தருமபுத்திரனை நான்) பிடித்துக்கொடுத்தல் கூடும்,' என்றான் - என்று
(துரியோதனனைநோக்கிச் சபையிற்) கூறினான்: எழில் மறையோன் - அழகிய
வேதம்வல்ல துரோணன்; (எ - று.) - 'ஆம்' இரண்டில், முதலது - அசை.

     அருச்சுனனது வெற்றிக்கு முக்கியகாரணம் கண்ணன் தேர்
செலுத்துதலாதலாலும், அக்கண்ணபிரான் தான் சங்கநாதஞ் செய்து
அவ்வொலிமாத்திரத்தால் பகைவர்சேனைகள் நடுங்கியொடுங்கும்படி செய்தலாலும்,
'செவ்வாய்  வைக்கும் வலம்புரிக்கைக் திருமால் தேரூர' என்றான்: தருவேனென்று
திண்ணமாகக்கூறாமல் , ஒருகால் அகப்படுத்தல்தொழில் நடக்கலாமென்ற
ஐயந்தோன்ற, 'தரலாம்' என்றானென்னலாம். தருமன்-தருமபுத்திரனென்றதன்
நாமைகதேசம்; தருமத்தினின்று தவறாதவனென யுதிஷ்டிரனுக்குக் காரணக்குறியுமாம்:
'தந்தையே மைந்தனாகிறான்' என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரனை
'தருமன்'என்றா ரென்றலும் உண்டு. காத்தல் - தடுத்தல்.                  (39)

40.- திரிகர்த்தராசன்முதலான சஞ்சத்தகவரசர்
தருமனுக்கு உதவாதபடி அருச்சுனனை வளைப்பதாக
வஞ்சினங் கூறுதல்.

திகத்தராசன்முதலாகச்சஞ்சத்தகரிற்சிலமன்னர்
உகத்திற்கடையிற்கனல்போல்வாரொருவர்க்கொருவருரைமுந்திச்
சகத்துக்கொருவனெனும்விசயன்றம்முற்குதவிசெய்யாமன்  
மகத்திற்சனிபோல்வளைக்குவம்யாமெனவஞ்சினமும்பலசொன்னார்.

     (இ-ள்.) (அச்சமயத்தில்), திகத்த ராசன் முதல் ஆக - திரிகர்த்ததேசத்து
அரசன் முதலாக, சஞ்சத்தகரில் - சம்சப்தகரிற் சேர்ந்த, உகத்தின் கடையில் கனல்
போல்வார் - கல்பாந்தகாலத்தில் (உலகத்தையழிக்கிற) அக்கினிபோலக்
கொடியவர்களான, சில மன்னர்- சில அரசர்கள், ஒருவர்க்கு ஒருவர் உரை முந்தி -
ஒருத்தரினு மொருத்தர் வார்த்தை முற்பட்டு, 'சகத்துக்கு - உலகத்தில், ஒருவன்
எனும் - ஒப்பற்றவனென்று சொல்லப்படுகிற, விசயன் - அருச்சுனன், தம் முற்கு -
தமையனான தருமனுக்கு, உதவி செய்யாமல் - (போரில்) துணைசெய்யாதபடி, யாம்-
மகத்தில் சனிபோல் - மகநட்சத்திரத்துச் சனிபோல, வளைக்குவம் - (நாளைக்கு
அவ்வருச்சனனைத்தடுத்துச்) சூழ்ந்துகொள்வோம்,' என - என்றுசொல்லி, (அதற்கு
ஏற்ப), பல வஞ்சினஉம் சொன்னார்- பலசபதங்களையுஞ் சொன்னார்கள்; ( எ -று.) -
அவற்றை மேல் மூன்றகவிகளிற் காண்க.

     த்ரிகர்த்தராஜன் - வடசொல்தொடர்; இவனுக்கு ஸூசர்மா வென்பது பெயர்.
த்ரிகர்த்த மென்பது- லாஹூர்ஜில்லாக்கருகிலிருப்பதான ஜலந்தர்(Jalandur) என்று
வழங்கும் ஊர் என்பர். (ஸம்சப்தக)ராவார் - போர்தொடங்குமுன்னமே
பலவகைச்சபதஞ்செய்து பின் அவ்வாறே நடத்திக்காட்டும் வீரர்கள்; இவர்கள்
த்ரிகர்த்த ராஜபுத்திரர்களும் அவர்களை யனுசரித்தவர்களுமாகி ஒன்பது