பக்கம் எண் :

270பாரதம்துரோண பருவம்

போனார்கள்; தேரில் - தேர்களின்மேலும், வாசியில் - குதிரைகளின் மேலும்,
களிற்றில் - யானைகளின்மேலும், வந்தவர்களில்- எதிர்த்துவந்த வீரர்களில்,
எறிபடைவீழ்த்திட்டு - (பகைவர்மேற்) பிரயோகித்தற்குஉரிய ஆயுதங்களைக்
கீழேபோகவிட்டுவிட்டு, சே அடி சிவப்புஏற - (இயற்கையிற்) சிவந்தனவாகிய
(தங்கள்) பாதங்கள் செந்நிறம் மிகும்படி, குதித்து ஓடுதல் ஓழிந்தவர் - ( தம்தம்
வாகனங்களினின்று கீழே) குதித்து ஓடுதலை நீங்கினவர்கள், யார் யார் -
யாவர்தாம்?[குதித்து ஓடாதவர் எவருமில்லை யென்றபடி] ; ( எ -று.)

     அருச்சுனனை யெதிர்த்தவரில் இறந்தவர் போக மிச்சமானவரனைவரும்
அவனால் வலியழிக்கப்பட்டுத் தோற்று அவனெதிரில் நிற்கவும் ஆற்றாராய்ப்
புறங்கொடுத்து விரைவில் ஓடிப்போய்உயிர் தப்பினரென்பதாம்.  அவன்
முன்னிலையில் தம் தம் வாகனங்களின் மீது  நின்றாலும் அவன் விட
மாட்டானென்றுஅஞ்சி அவற்றினின்று விரைவிற் குதித்து, கையில் ஆயுதங்களோடு
கூடியிருந்தால்அவன் தம்மை அழிக்கக்கூடு மென்ற சங்கையினாலும் அவன்
விஷயத்தி லுண்டானஅச்சமிகுதியா லாகிய கைந்நடுக்கத்தாலும் படைக்கலங்களைக்
கீழேபோகட்டு ஓடினரென்க. அங்ஙனம் புறங்கொடுத்தவர்கள் இரத்தவெள்ளத்தில்
மூழ்குதலும்,கழுகுநிழலிற் பொருந்துதலையும் - விடாய் தணிதற்பொருட்டு நீரில்
மூழ்குதலும்,நிழலிற்பொருந்துதலுமாகக் கற்பித்தார்; தற்குறிப்பேற்றவணி.  (443)

47.நின்றுபட்டனர்தனித்தனியமர்புரிநிருபர்முந்துறவோடிச்
சென்றுபட்டனர்சேனைமண்டலிகர்வெஞ்சினம்பொழிசிறுசெங்கட்
குன்றுபட்டனபட்டனநவகதிக்குரகதக்குலம்யாவு
மன்றுபட்டவர்க்குறையிடப்போதுமோவநேகநாளினும்பட்டார்.

     (இ-ள்.) அமர் புரி நிருபர் - (அருச்சுனனுடன் ) போர்செய்த அரசர்கள், தனி
தனி - தனித்தனியே, நின்று பட்டனர் - எதிர்த்த நின்றநிலையில் இறந்தார்கள்;
சேனை மண்டலிகர் - சேனைகளோடு கூடிய மண்டலிகர் என்னுஞ் சிற்றரசர்கள்,
முந்துற ஓடி சென்று - விரைவாக (ப் புறங்கொடுத்து) ஓடிப்போய், பட்டனர் -
தோற்றார்கள்; வெம் சினம் பொழி- கொடியகோபத்தை மிகுதியாக வெளிக்காட்டுகிற,
சிறு செம்கண்- சிறிய சிவந்தகண்களையுடைய, குன்று -மலைகள் போன்ற
யானைகள், பட்டன - அழிந்தன ; நவகதி - ஒன்பது வகை நடைகளையுடைய,
குரகதம் குலம் யாஉம் - குதிரைகளின் கூட்டங்களெல்லாம், பட்டன- அழிந்தன;-
அனேகம் நாளின்உம் பட்டார்- (இதற்குமுன்) பலபோர்நாட்களிலும் அழிந்தவரின்
தொகை, அன்று பட்டவர்க்கு உறை இட போதும்ஓ - அப்பதினான்காம்போர்
நாளில்அழிந்தவர்கட்குஉறையிடுதற்காவதுபோதுமோ? [போதா தென்றபடி]; (எ-று.)

     உறையிடுதலாவது - பொருள்களைக் கணக்கிடும்போது ஞாபகத்தின்
பொருட்டு ஒவ்வொரு பெருந்தொகைக்கு ஒன்றாக இடுவதோர் இலக்கக் குறிப்பு,
இதற்குமுன்  பதின்மூன்றுநாள்களிலும்.