பக்கம் எண் :

272பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) வெவ் வாசி - வேகமுள்ள குதிரைகள்பூண்ட, நெடுந் தேர் மிசை -
பெரிய தேரின்மீது, நிமிரா வரி வில் கொண்டு - வளைவு மாறாத கட்டமைந்த
வில்லை யேந்திக்கொண்டுநின்று, இ ஆறு- இப்படி, அமர் புரி வேலையில் -
(அருச்சுனன்) போர்செய்தபொழுதில், எழு - மிக்குப்பெருகிய, செம் குருதியினால் -
சிவந்தஇரத்தத்தால்,- அ ஆடு அரவுஉடையான் அழி ஆயோதனம் எங்குஉம்-
படமெடுத்தாடுந்தன்மையுள்ள பாம்பின்வடிவத்தைக் கொடியிலுடையவனான
அந்தத்துரியோதனனது அழிபட்ட போர்க்களம் முழுவதும்,- அந்தி செவ் வான்
அகம் என- மாலைப்பொழுதிற் காணப்படுகிற செவ்வானம்போல, சிவப்பு வந்து
ஏறியது - செந்நிறம்பரவிமிகப்பெற்றது; ( எ -று.)

     இதுமுதற் பதினேழுகவிகள் -பெரும்பாலும்ஈற்றுச்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.            (446)

50.- மத்தியானகால வருணனை.

முருகாரிருசிறைவண்டினமுளரிப்புதுமலர்விட்
டருகார்பொழினிழலூடணியலர்நாண்மலருறவே
யிருகாலமுமுக்கால்விடுகைம்மாரியிருக்கா
லொருகாலருமறையோர்விடுபதநண்ணினனுதயன்.

     ( இ -ள்.) முருகு ஆர் - தேனையுண்ணுந்தன்மையுள்ள, இரு சிறை வண்டு
இனம் - இரண்டு இறகுகளையுடைய வண்டுகளின் கூட்டம்; புது முளரி மலர்விட்டு-
புதிய [அன்றுமலர்ந்த] தாமரைப்பூக்களை விட்டு நீங்கி, அருகு ஆர் பொழில்
நிழலூடு - சமீபத்திற் பொருந்திய சோலைகளின் நிழலிலேயுள்ள, அணி அலர்
நாள்மலர் - அழகிய மலர்ந்த புதியபூக்களில், உற -சேரும்படி,- உதயன் -
சூரியன்,-அரு மறையோர் - (அறிதற்கு) அரியவேதங்களையுணர்ந்த பிராமணர்,
இருக்கால் -வேதமந்திரத்தைக்கொண்டு [காயத்திரியுச்சாரணத்தோடு], இரு
காலம்உம் முக்கால்விடு கை மாரி - (காலை மாலை என்ற) இரண்டுபொழுதிலும்
மூன்றுமுறை கைகளால்எடுத்துவிடுகிற அருக்கியநீர்ப்பொழிவை, ஒருகால் விடு-
ஒருமுறைசொரிகிற, பதம் -இடத்தை, நண்ணினன் - சேர்ந்தான்
[உச்சியடைந்தான்] ;  ( எ-று.)

     காலையிலும்மாலையிலுஞ் செய்யும் சந்தியாவந்தனங்களில் மூன்று முறையும்,
மாத்தியான்னிகத்தில் * ஒருமுறையும் காயத்திரிமந்திரங்கூறி அருக்கியம் விடுதல்
மரபாதலால், ' உச்சமடைந்தான்' என்ற பொருளை இங்ஙனங் கூறினார்; இது,
பிறிதினவிற்சியணி. சூரியோதயகாலத்திலே தாமரையில் மொய்த்து அதிலுள்ள
தேனை வயிறுநிரம்பப் பருகிய வண்டுகள் அச்சூரியன் உச்சிவான


* இதற்குமாறாகச் சிலர் மாத்தியான்னிகத்தில் இருமுறை
காயத்திரியர்க்கியப்பிரதாநஞ்செய்தல் கல்பபேதவிதிபற்றியதாதல் வேண்டு மென
அறிக.