களும், பைங் கயல் - பசுநிறமான கயல்மீன்களும், கெண்டை - கெண்டைமீன்களும்,- கரை அருகு எங்கண்உம் - கரைப்பக்கங்களி லெல்லாம், வளர் கின்னர மிதுனம் - நன்றாகவளர்ந்த கின்னர மிதுனங்களும், வாழும் - (இனிமையாகத்) தங்கும்; ( எ-று.)- பி -ம் : வீழுங்கரை. இதனால், தெய்விகமாகவுண்டான அத்தடாகத்தின் ஆழம் அகலம் நீர்வளச்சிறப்பு என்பவை விளங்கும். கின்னரமிதுனம்- கின்னரமென்னும் நீர்வாழ்ப்பறவையின் ஆணும் பெண்ணுமான இரட்டை, எப்பொழுதும் ஆணும்பெண்ணுமாய் இரட்டைப்பட்டு நின்று கிந்நரமென்னும் வாத்தியங்கைக்கொண்டு பாடித் திரிவதொரு தேவசாதிக்கும் இப்பெயருண்டு ; இவை,குதிரைமுகமும் மனிதவுடம்பும் உடையவை. முதலடி - உயர்வுநவிற்சியணி வகையால் அக்குளத்தின் ஆழமிகுதியையும் அகலமிகுதியையும் விளக்கியது. 53. | ஒருபால்வளர்போதாநிரைகருநாரைகளொருபா லொருபாலுளமகிழ்நேமிகளன்றிற்குலமொருபா லொருபான்மடவன்னம்புனலரமங்கையரொருபா லொருபாலிருபாலுந்தவழொளிநந்துறைபுளினம். |
(இ-ள்.) (மற்றும் அக்குளக்கரையில்), ஒரு பால் - பக்கத்தில், வளர் போதா நிரை - நன்றாகவளர்ந்தபெருநாரைகளின் கூட்டமும், ஒரு பால்-, கரு நாரைகள் - கறுப்புநாரைகளும், ஒரு பால்-, உளம் மகிழ் நேமிகள் - (தம்மிற்கூடி) மனம் மகிழ்கிறசக்கரவாகப்பறவைகளும், ஒருபால்-, அன்றில் குலம் - கிரௌஞ்சமென்னும் பறவைகளின் கூட்டமும், ஒருபால்-, மட அன்னம்- இளமையான அன்னப்பறவைகளும், ஒருபால்-, புனல் அர மங்கையர் - நீரில்வாழும் தேவமகளிரும், ஒருபால்-, இருபால்உம் தவழ் ஒளி - இரண்டுபக்கங்களிலும் பரவிச்செல்கிற ஒளியையுடைய, நந்து- சங்குகள், உறை - தங்கப்பெற்ற, புளினம் - மணல்மேடுகளும், (உண்டு); ( எ -று.) வினைமுற்று, வருவிக்கப்பட்டது. சக்கரவாகப்பறவைகள் பகலில் ஆணும் பெண்ணுங் கூடிக் குலாவுந் தன்மையனவாதலால், 'உளம்மகிழ் நேமிகள்' எனப்பட்டன. நேமி - வடசொல். புனல் அர மங்கையர் - நீரரமகளிர் எனப்படுவர் .சொற்பொருட்பின்வருநிலையணி. 54.- இரண்டுகவிகள் - குளகம் : கண்ணன் தேர்க்குதிரைகளை நீர்பருவித்தலைக் கூறும். தலமாமகளுந்தித்தடநிகரானதடங்கண் டுலமாறுகொளிருதோள்வலியுடைவள்ளலுரைப்பக் குலமாமணியனையான்விரைதேர்நின்றெதிர்குதியா வலமானதுரங்கங்களைவள்வார்விசிநெகிழா |
(இ-ள்.) தலம் ஆம் மகள் - பூமியாகிய பெண்ணினது, உந்தி தடம்நிகர் ஆன -நாபியினிடத்துக்குஒப்பான , தடம் - அக்குளத்தை, |