பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்275

கண்டு - பார்த்து, உலம் மாறு கொள் இரு தோள் வலி உடை வள்ளல் -
திரண்டநல் தூணோடு (தமக்கு ஒப்பாகா தென்று) பகைமை கொள்கிற
இரண்டுதோள்களிலும் வலிமையையுடைய வரையா தருளுந் தன்மையுடையவனான
அருச்சுனன், உரைப்ப - சொல்ல,- மா குலம் மணி அனையான் - பெரிய சிறந்த
சாதி நீலரத்தினம் போன்றவனான கண்ணன், விரை தேர் நின்று எதிர் குதியா -
வேகமாகச்செல்லு மியல்பின தான (தனது) தேரினின்று முன்னே குதித்து, வலம்
ஆன துரங்கங்களை - வலிமையுடையனவான குதிரைகளை, வள் வார் விசி
நெகிழா- தோற்கயிற்றாலாகிய கட்டுக்களை யவிழவிட்டு, ( எ -று.)
-"வாரிபருக்கி" எனஅடுத்த கவியோடு தொடரும்.

     உரைப்ப - இங்ஙனம் தனது அம்பின்திறத்தால்
நீர்நிலையையுண்டாக்கியவுடனே அருச்சுனன் கண்ணனைநோக்கி 'இனித்
தேர்க்குதிரைகட்கு நீருட்டி இளைப்பாற்றலாம்' என்று சொல்ல என்க. உலகத்தில்
உபமானமாய்ப் பிரசித்தமாக வழங்குகிற குளத்தை உபமேயமாகவும், உபமேயமாய்ப்
பிரசித்தமாகவழங்குகிற நாபியை உபமானமாகவும் மாற்றிக்கூறினது, எதிர்
நிலையணி.
திரண்டுருண்டு பருத்து நீண்டு நெய்ப்புடைய வடிவிலும்
வலிமையிலுங் கற்றூணினும்மேம்பட்ட தோள் என்க.                 (451)

55.குவளைப்பரிமளமேவருகுளிர்வாரிபருக்கிப்
பவளத்துவர்வாயானிருபாதங்கைவிளக்கித்
தவளக்கிரியொருநாலெனமேன்மேலொளிர்தருபே
ரிவுளிக்குமிளைப்பாறவிளைப்பாறினனிப்பால்.

     (இ-ள்.) குவளை- நீலோற்பலமலரினது, பரிமளம் - சுகந்தம், மேவரு -
பொருந்திய, குளிர் வாரி - குளிர்ந்த (அக்குளத்தின்) நீரை, பருக்கி -
(குதிரைகளைக்)குடிப்பித்து,- பவளம் துவர் வாயான்- பவழம்போலச் சிவந்த
வாயையுடையஅக்கண்ணன்பிரான்தானும், இரு பாதம் கை விளக்கி - (தனது)
இரண்டுதிருவடிகளையும் திருக்கைகளையும் அலம்பிக்கொண்டு,- தவளம் கிரி
ஒரு நால்எனமேல் மேல் ஒளிர்தரு- வெண்ணிறமான நான்கு (வெள்ளி) மலைகள்
போலமிகுதியாக விளங்குதல்பொருந்திய, பேர் இவுளிக்குஉம்- பெரிய (நான்கு)
குதிரைகட்கும், இளைப்புஆற- இளைப்புத் தணிய, இப்பால் - இப்பக்கத்தில்,
இளைப்பு ஆறினன்-; ( எ -று.)

     கண்ணன் குதிரைகளை நீர்குடிப்பித்துத் தானுங் கைகால்களைக்
கழுவிக்கொண்டு அக்குதிரைகளினிளைப்பைப் தீர்த்துத் தானும் இளைப்பாறின
னென்பதாம். சேனைகள் கைகலந்து போர் செய்யுமிடத்திற் பாண்டவர்பக்கத்தில்
நிகழ்ந்த செய்கைகளை இதுவரையிற் கூறி, இனித் துரியோதனாதியர் பக்கத்தில்
நடந்த செய்தியைக் கூறுவாராய், இப்பாட்டினிறுதியில் 'இப்பால்' என்றும், அடுத்த
பாட்டின் முதலில் 'அப்பால்' என்றுங் கூறுகின்றார். பி -ம்: ஒளிதரு. போர்.
இவுளிக்குலம்.                                                 (452)